வித்யா சுப்ரமணியம்.எங்கு திரும்பினாலும் கோயில்கள். கார் மாமாங்க குளத்தைக் கடந்து வலப்புறமாகத் திரும்பி கைலாசநாதர் கோயிலை அடுத்து ஒரு தெருவில் நுழைந்து ஒரு பாரம்பரியமான வீட்டின் முன்பு நின்றது. வாசலின் இருபுறமும் திண்ணைகள். முன்புறமாக நாட்டு ஓடுகள் இறங்கிய இரண்டடுக்கு வீடு. அக்கா புறப்படுவதற்கு முன்பு இங்குள்ள உறவினர் யாரிடமோ சொல்லி வீடு முழுக்க சுத்தம் செய்யச் சொல்லியிருந்ததாகக் கூறினாள்..வாசற் திண்ணையைத்தாண்டி உள்ளே சென்றதும் ஒரு பெரிய முற்றம். அதன் ஒருபுறம் பெரிய கூடம். கூடத்தை ஒட்டி ஒரு படுக்கையறை. கூடத்தைக் கடந்து சென்றால் மற்றொரு பெரிய கூடம். அதன் ஒரு பகுதியில் பெரிய சமையலறை. அதையும் கடந்து சென்றால் கொல்லைப்புறம். ஆள் புழக்கம் இல்லாததால் மரங்களும் செடிகளும் புதராக வளர்ந்திருக்க, நடுவே ஒரு கிணறும் இருந்தது.."மோட்டார் போட்டிருப்பதால் எல்லா இடத்திலும் பைப் கனெக்ஷன் குடுத்திருக்கு. கீழ பாத்ரூம், டாய்லெட் எல்லாம் பின்னாடி தனித்தனியா இருக்கும். நாங்க வருஷத்துக்கு ரெண்டுமுறை குலதெய்வ வழிபாடுக்காகவும், அப்பறம் வெக்கேஷன் சமயத்துல எல்லாம் வந்து ரெண்டு மூன்று வாரமும் இருப்போம் இல்லையா? அப்போ ராத்திரி நேரம் கொல்லைக்கதவைத் திறக்க வேண்டாம்னு மாடியில் ஒரு பெட்ரூமில் அட்டாச்டு பாத்ரூம் கட்டியிருக்கோம். நீங்க மாடிலயே படுத்துக்கலாம். அங்க கட்டில் பெட் எல்லாம் இருக்கு. ஜன்னல் வழியா பார்த்தா மாமாங்கா குளம் தெரியும்." அக்கா மாடிக்கு அழைத்துச் சென்றாள்..அவள் சொன்னாற்போல் மாடிப்பகுதியில் இருந்த இரண்டு ஜன்னல்கள் வழியே மாமாங்கா குளம் அழகாகத் தெரிந்தது. மீனாக்ஷியம்மா குளத்தையும், கைலாசநாதர் கோபுரத்தையும் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டாள்.."இவ்ளோ அழகான வீட்டை ஏங்க்கா பூட்டி வெச்சிருக்க?"."நாங்க வரும்போதெல்லாம் தங்குவதற்குத் தேவைப்படுதே. தவிர ஃப்ரண்ட்ஸ், மற்ற உறவுகள் யாரேனும் இங்க வரும்போது, அவங்க தங்கிச்செல்ல வசதியாதான் ஒரு சாவியை இங்க ஒரு உறவுக்காரரிடம் கொடுத்திருக்கு. எல்லா கடமைகளும் முடிச்சபிறகு ரிடையர்மென்ட்க்கு அப்பறம் இங்க வந்து விச்ராந்தியா கோயில் குளம்னு செட்டில் ஆகிடணும்னு ஒரு எண்ணமிருக்கு."."கடவுள் ஒருபக்கம் கஷ்டம் கொடுத்தாலும் இன்னொரு பக்கம் என்னைச் சுற்றி அன்பான உறவுகளையும் கொடுத்து தேவைப்படும்போது அவங்க மூலமே எனக்கு உதவியும் செய்யறான். வீட்டைவிட்டு கொட்டும் மழையில் குழந்தைகளோட இறங்கினபோது என்னெதிரில் இருட்டான பாதைதான் தெரிஞ்சுது. ஆனாலும் துணிந்து இறங்கிட்டேன். ஆனால், ஜம்புலிங்கம் அய்யா செய்த உதவி, வங்கிப்பணி உத்தரவுக்கடிதம், இப்போ நாங்க தங்குவதற்கு வீட்டைக் கொடுக்கும் நீ என்று தேவைப்படும்போது, என் இருண்ட பாதையில் வெளிச்சத்தையும் காட்டுவதை என்னன்னு சொல்ல?".குழந்தைகள் முற்றத்துத் தூண்களைச் சுற்றி ஓடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். மீனாக்ஷியம்மாவும் அவர்கள் பின்னால் ஓடிக்கொண்டிருந்தாள்.."கிச்சன்ல நாங்க வந்தா சமைச்சு சாப்பிடுவதற்காக எல்லா வசதியும் பண்ணியிருக்கோம். மளிகை பொருட்கள் மட்டும்தான் வாங்கணும். இன்னிக்கு ராத்திரிக்கு மட்டும் ஹோட்டலில் டிபன் வாங்கிக்கலாம். நாள் தள்ளிப்போடாம நீ நாளைக்கே வேலையில் சேர்ந்துடு. சர்வீஸ்ல சீனியாரிட்டி முக்கியம்.".அக்கா ஓடிக்கொண்டிருந்த ரிஷியைப் பிடித்து தூக்கிக் கொஞ்சினாள். குழந்தைகளோடு குழந்தையாக, தானும் ஓடிவிளையாடினாள். பிறகு வாசலில் ஏற்கெனவே தெரிந்த ஆட்டோக்காரரை அழைத்து அவர் வண்டியில் சென்று இரவுக்கான சிற்றுண்டிகளும், அதோடு ஒரு மாதத்திற்குத் தேவையான அனைத்து மளிகை பொருட்களும் வாங்கி வந்தாள்..இரவு உணவுக்குப்பின் குழந்தைகள் தூங்க, மீனாக்ஷியம்மாள் அவர்களோடு படுத்துக்கொள்ள, மைதிலியும் சாவித்திரியும் அறைக்கதைவைத் தாளிட்டு விட்டு பால்கனிக்கு வந்து ஜன்னலோரம் அமர்ந்தார்கள். மாமாங்கா குளத்து நீரில் மின்விளக்குகளின் ஒளிபட்டு ஜாலம் புரிந்து கொண்டிருந்தது.."நான் ஒண்ணு சொன்னா கேட்பாயா மைதிலி?"."என்னக்கா?"."வேலையில் சேருவதற்குமுன் அப்பாவிடம் ஒரு வார்த்தை பேசேன்."."இல்லக்கா… வேணாம்"."ஏன் மைதிலி. அவர் உன்னைத் திரும்ப ஆனந்தனோட சேர்ந்து வாழுன்னு சொல்லிடப் போறாரேன்னு பயப்படறயா?".மைதிலி மௌனமாக இருந்தாள்.."சரி பேசவேணாம். ஆனா வீட்டைவிட்டுக் கிளம்பும் அளவுக்கு அப்டி என்னதான் நடந்துது? எங்கிட்ட சொல்லலாம்னா சொல்லு. என் கணவர் உட்பட யார்கிட்டயும் நான் சொல்லமாட்டேன். என்னை நீ நூறு சதம் நம்பலாம். ஒரு ஸ்ட்ராங்கான காரணமில்லாம நீ இந்த முடிவை எடுத்திருக்க மாட்டேன்னு எனக்குப் புரியுது. அதனால என்னோட சப்போர்ட் எப்பவும் உனக்கிருக்கும். அப்பாவிடம் பேசுவதும் பேசாததும் உன் விருப்பம். நானாக உன்னைப்பத்தி யாரிடமும் எதுவும் சொல்லமாட்டேன்".மைதிலி அக்காவையே பார்த்தாள். ஜன்னல் வழியே தெரிந்த கைலாசநாதர் கோயில் கோபுரத்தையும் சில நொடி பார்த்தவள், சரி… சொல்றேன்க்கா… என்றாள்..*** *** *** *** ***.ஆகஸ்ட் – 1991.காலை ஏழு மணிக்கே கீழே பேச்சுக்குரல் கேட்க மைதிலி அறையைவிட்டு வெளியில் வந்து எட்டிப்பார்த்தவள் முகம் மலர்ந்தாள். அப்பாதான் வந்திருந்தார். மாமனாருடன் பேசிக்கொண்டிருந்தார்..மைதிலி குழந்தையோடு கீழே இறங்கி வந்தாள்.."வாங்கப்பா. என்ன இந்த நேரத்தில்? வாக்கிங் போயிட்டு அப்டியே வந்தீங்களா?".அப்பா ஆசையாக குழந்தையை வாங்கி கொஞ்சினார்.."இல்லம்மா. ஒரு வேலையா இந்தப்பக்கம் வந்தேன். அப்டியே உங்களையெல்லாம் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்"."குடிக்க என்னப்பா தரட்டும்?"."ஒண்ணும் வேணாம்மா. எங்க மாப்ள வீட்டில் இல்லையா?"."இருக்கார்ப்பா. இன்னும் எழுந்திருக்கவேயில்ல. இருங்க எழுப்பிட்டு வரேன்."."வேணாம்மா. தூங்கட்டும்."."பரவால்லப்பா… நீங்க வந்திருக்கீங்கன்னு சொன்னா எழுந்துடுவார்.".மைதிலி மாடிக்கு வந்தாள்.."ஏங்க… அப்பா வந்திருக்கார். எழுந்து கீழ வாங்க.".அவன் தூக்கம் கலையாதிருக்க, மீண்டும் எழுப்பினாள்.."அப்பா வந்திருக்கார் எழுந்து வாங்க."."எதுக்கு வந்தாராம்?" அவன் எரிச்சலோடு கேட்டான்.."என்ன கேள்வி இது? பெண்ணுடைய வீட்டுக்கு வருவதற்கு காரணம் வேணுமா? மாப்ள வீட்டுல இல்லையான்னு கேட்டார். அதான் எழுந்து வாங்கன்றேன்."."நான் வீட்ல இல்லன்னு சொல்ல வேண்டியதுதானே?"."அதுசரி… அவர் என்ன பேங்க் மேனேஜரா? உங்க கடனைக் கேட்க வந்தாமாதிரி வீட்ல இல்லைன்னு சொல்லச் சொல்றீங்க?".பேங்க் மேனேஜர் மட்டும்தான் கடன் வசூலிக்க வருவாராக்கும்?.அவன் முணுமுணுத்தபடி எழுந்து செல்ல, அவள் ஒரு வினாடி என்ன சொல்லிட்டு போறார் இவர் என்பது போலப் பார்த்துவிட்டு கீழே சென்றாள்..சற்றுநேரத்தில் கீழே வந்தவன், நல்லார்க்கீங்களா என்றான் மாமனாரைப் பார்த்து.."நல்லார்க்கேன் மாப்ள".."இருந்து டிபன் சாப்பிட்டுவிட்டு போங்க. எனக்கு ஒரு முக்கியமான டிஸ்கஷன் இருக்கு. கிளம்பறேன்" என்றபடி எழுந்தான்..அவர் அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தார். மைதிலிக்கு அவன் அப்பாவை மதிக்காமல் ஒப்புக்கு பேசிவிட்டுச் சென்றது வருத்தமாக இருந்தது. ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்று புரியாமல் அப்பாவைக் குற்ற உணர்வோடு பார்த்தாள்.."நான் கிளம்பறேம்மா. கிளம்பறேன் சம்பந்தி".."இருங்க டிபன் சாப்ட்டு போலாமே."."இல்ல வேணாம். வரேன்.".அப்பாவின் நடை தளர்ந்திருப்பதை கவனித்தாள் மைதிலி. ஏனோ அப்பா சும்மா வந்ததாகத் தோன்றவில்லை அவளுக்கு. ஏன் அப்பாவிடம் பேசுவதைத் தவிர்க்கிறான் ஆனந்தன்? அவன் முணுமுணுத்து, சென்றபோது காதில் விழுந்ததை நினைவுபடுத்திப் பார்த்தாள். "பேங்க் மேனேஜர் மட்டும்தான் கடனைக் கேட்க வருவாராக்கும்?".ஒருவினாடி சுரீரென்றது. அவள் மனம் பதறிற்று. முன்பொரு முறை அக்கா சொன்ன விஷயம் நினைவுக்கு வந்தது. நெருங்கின நண்பர் ஒருவர் அப்பாவிடம் கடன் கேட்கிறாராம். எப்டி இல்லன்னு சொல்றதுன்னு யோசிக்கறார். அதான் கொஞ்சம் டல்லாக இருக்கார்' என்று அவள் கேட்டதற்கு அன்று அக்கா சொன்னதையும், இன்று ஆனந்தன் முணுமுணுத்ததையும் இணைத்துப் பார்த்தாள்..! சந்தேகமேயில்லை. ஆனந்தன் அப்பாவிடம் பணம் பெற்றிருக்கிறான். அதனால்தான் அவரைக்கண்டு ஓடி ஒளிகிறான். சினிமா எடுக்க பணம் பணம் என்று அலைந்து கொண்டிருந்தவன் அவரிடம் எவ்வளவு பணம் வாங்கியிருக்கிறான்? ஏன் திருப்பிக் கொடுக்காமல் அவரை அலைக்கழிக்கிறான்? இது என்ன மாதிரி கடன்? மாப்பிள்ளை என்பதால் அப்பா யாரிடமாவது கடன் வாங்கி அவனுக்குப் பணம் கொடுத்தாரா? அப்படி கொடுத்திருந்தால் வட்டி இவரல்லவா கட்டவேண்டும்? அல்லது அவனுக்கு பிணைக் கையெழுத்து போட்டு வங்கியிலிருந்து கடன் பெற உதவினாரா? அவன் அடைக்காத கடனுக்கு வங்கி இவரை நெருக்குகிறதா?.அவளது கவலையும் பதற்றமும் கூடியது. தன்னால் என்ன செய்ய முடியுமென்று யோசித்தாள். மதியம் இரண்டுமணிவாக்கில் குழந்தையை அண்ணியிடம் விட்டுவிட்டு கடைக்கு போயிட்டு வந்துடறேன் என்று கூறிவிட்டு கிளம்பி நேராக அக்காவின் வங்கிக்குச் சென்று அக்காவை அவளது கேபினில் சந்தித்தாள்.."என்னடி இந்த நேரத்துல?"."எனக்கொரு விஷயம் தெரிஞ்சாகணும்க்கா."."என்ன?"."அப்பாவிடம் யாரோ பணம் கடனா கேட்டது பற்றி சொன்னயே. அது யார்? அப்பா அவருக்கு பணம் கொடுத்தாரா? கொடுத்தார்னா எவ்ளோ?"."என்னாச்சு மைதிலி?"."சொல்லுக்கா பிளீஸ்"."எனக்கும் சரியா தெரியாது மைதிலி."."உனக்குத் தெரியும் அக்கா".."நிஜமாவே….."அவர் யாருக்குக் கடன் கொடுத்தார்னு எனக்குத் தெரியும்க்கா. அதை உறுதிசெய்து கொள்ளத்தான் இங்க வந்தேன்.".மைதிலி சொல்ல அக்கா திகைப்போடு பார்த்தாள் அவளை..(தொடரும்)