ராஜீவ் காந்திக்கு பிடித்த மக்ரூன்ஸ்

ராஜீவ் காந்திக்கு பிடித்த மக்ரூன்ஸ்
Published on

ஆகஸ்ட் 20ம் தேதி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.  1980 ஆம் ஆண்டு அவரது சகோதரர் சஞ்சய் இறந்த பிறகு இந்திய அரசியலில் காலடி எடுத்து வைத்தார்.

அவரது தாயாரும் அன்றைய பிரதமருமான இந்திரா காந்தியின் ஆலோசகராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.  அவரைப் பற்றி அதிகம் அறியப்படாத  தகவல்களில் சில துளிகள்…

  • அரசியலில் அதிகம் ஆர்வம் இல்லாதவராக இருந்தார்.
  • ராஜீவ் காந்தி அரசியல் களத்திற்கு வருவதற்கு முன், பைலட்டாக பணியாற்றியவர்.
  • 1984ஆம் ஆண்டு அவரது தாய் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட சில காலத்திற்குப் பிறகு, அவர் பிரதமராக பதவி ஏற்றார்.
  • ராஜீவ் காந்திக்கு புகைப்படம் எடுப்பது மிகவும் பிடித்த பொழுதுபோக்காக இருந்தது. அவரது புகைப்படங்களை வெளியிட பல பதிப்பாளர்கள் கேட்டனர். ஆனால், அதனை அவர் மறுத்துவிட்டார். அவர் மறைவுக்கு பிறகே, அவரது மனைவி சோனியா காந்தி 1995ஆம் ஆண்டு, அவர் நாற்பது ஆண்டுகளாக எடுத்த புகைப்படங்கள் கொண்ட புத்தகத்தை வெளியிட்டார்.
  • இந்தியாவின் பிரதமர்களுள் தனது காரை தானே ஓட்டும் வழக்கம் கொண்டவர் ராஜீவ் காந்தி. அவர் தனது தேர்தல் பிரசாரங்களின் போதும், அவர் தனது காரை ஓட்டி செல்வார்.
  • ஒவ்வொரு முறை அவர் தமிழ்நாடு வரும்போதும், அவரது விருந்து நிகழ்ச்சியில் தவறாமல் இருப்பது மக்ரூன்ஸ். தூத்துக்குடியில் உள்ள 'கணேஷ் பேக்கரி' என்ற கடையில் இருக்கும் மக்ரூன்ஸ் மட்டும்தான் ராஜீவ் காந்திக்கு பிடிக்குமாம். அவர் தமிழ்நாடு வரும்போதெல்லாம் இங்கு இருந்துதான் மக்ரூன்ஸ் அனுப்பப்படும் .
  • ஊழலை ஒழிக்க பல முயற்சிகளை அவர் எடுத்தபோதும், 'போஃபர்ஸ்' ஊழல் உட்பட பல்வேறு ஊழல் புகார்கள் அவர் மீதும், காங்கிரஸ் மீது அப்போது சுமத்தப்பட, அவரை 'மிஸ்டர் க்ளின்' என்று அழைப்பது நின்றுபோனது.
  • நேரு குடும்பத்தில் இருந்து கடைசியாக பிரதமராகப் பதவி வகித்தவர் அவரே.
  • அவர் ஸ்ரீபெரும்புதூரில் 1991ம் ஆண்டு மே 21ம் தேதி விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார்.
Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com