இந்தியன் ஆயில் குழுமத்துடன் இணைகிறார் பிரக்ஞானந்தா.– வினோத்.உலக அளவில் சிறந்த 16 வீரர்கள் பங்கேற்ற செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வந்தது. இந்த தொடரில் பங்கேற்ற சென்னையை சேர்ந்த 16 வயது இளம் வீரர் பிரக்ஞானந்தா 2-வது சுற்றில் உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார்..பிறகு காலிறுதியில் சீனாவின் வெய் யி, அரையிறுதியில் நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியை வீழ்த்திய பிரக்ஞானந்தா, இறுதி போட்டியில் சீன வீரர் திங் லிரனுடன் மோதி இருவரும் சமமான பாயிண்ட்களை எடுத்ததனால் டைபிரேக்கராக நடந்த ஆட்டத்தில் மிகக் குறைவான பாயிண்ட்களில் வெற்றியை இழந்தார் பிரக்ஞானந்தா..16 வயதே ஆகும் பிரக்ஞானந்தா தற்போது பிளஸ் 1 படித்து வருகிறார்.பிளஸ் 1 பொதுத் தேர்வு நடைபெறுவதால் காலை 8.30 மணிக்கு பள்ளி செல்லும் பிரக்ஞானந்தா, இரவு நேரத்தில் நள்ளிரவு 3, 4 மணி வரை ஆன்லைனில் இந்த தொடரில் பங்கேற்கிறார். தூக்கமும் இல்லாமல், கல்வியையும் விடாமல் பிரக்ஞானந்தா இரண்டு பொறுப்பையும் சமாளிப்பது நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது..உலகின் முன்னணி செஸ் வீரர்களை வீழ்த்தி செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் தொடரில் 2வது இடம் பிடித்த இந்திய இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஆண்டுக்கு 12 லட்சம் சம்பளத்தில் வேலை வழங்கப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், "அவருடைய வயது 16 என்பதால் இப்போது அவரால் பணியில் சேர முடியாது.அவர் 18 வது வயது முடிந்தவுடன் பணியில் சேர்வார் என்றும், அதுவரை அவர் பங்கேற்கும் மேட்சுகளை ஸ்பான்ஸார் செய்வோம்" என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்திருக்கிறது..வாழ்த்துகள் பிரக்ஞானந்தா.