
"தலைவருக்கு சுயநினைவு இல்லைன்னு எப்படிச் சொல்றே?"
"தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றப் போறதா சொல்றாரே"
– மாடக்கண்ணு, பாப்பான்குளம்
"குட் மார்னிங் சொன்னதுக்குப் போய்யா மேனேஜர் உங்களைத் திட்டினாரு?"
"ஆமாம்… தூங்கிட்டு இருந்தவரை எழுப்பிச் சொன்னேன்."
-தீபிகா சாரதி, சென்னை
"தலைவர் ஏன் சோகமா இருக்கிறார்?"
"அவரைப் பத்தி சோசியல் மீடியாவில் ஒரு மீம்சும் வரலையாம்? அவர் மவுஸ் குறைஞ்சிடுமோன்னு சோகமாயிட்டார்."
-சி. கார்த்திகேயன், சாத்தூர்
"எதிர்க்கட்சியில் சேர்ந்த நம்ம தலைவரை ஒரே நாள்ல நீக்கிட்டாங்களாமே, ஏன்?"
"பழக்க தோஷத்தில், சேர்ந்த கட்சியையே கன்னாபின்னான்னு தாக்கிப் பேசிட்டாராம்!"
– ப.சோமசுந்தரம், சென்னை
"அந்த எழுத்தாளர் தினமும் ஆற்றங்கரை பக்கமா போய் உட்கார்ந்திருக்கிறாரே, ஏன்?"
"அங்குதான் கற்பனை கரைபுரண்டு ஓடும்னு யாரோ அவர்கிட்ட சொன்னாங்களாம்!"
– மு. மதிவாணன், அரூர்,
"நம்ம தலைவருக்குத் தமிழ்ப்பற்று ரொம்ப அதிகம்னு இப்பத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்!"
"எதை வச்சு?"
"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கிரிக்கெட் ஸ்டேடியத்துல முழுவதும் அன்னைத் தமிழில் கமென்ட்ரி கொடுக்கப்படும்னு அறிவிச்சிருக்காரே…"
– இரா. அருண்குமார், புதுச்சேரி