இந்த வாரம் இவர்

இந்த வாரம் இவர்
Published on

செல்வா

குழலிசைக் கலைஞர் செல்வா அபாரமாக வாசிப்பவர். புல் இன வகையான மூங்கில் மரத்தின் இளமையும் மூப்புமில்லா நடுவளர்ச்சி பகுதியை வெட்டி நிழலிலே ஓராண்டு காலம் வைத்து குழல் செய்வதால் அது 'புல்'லாங்குழல் எனப் பெயர் பெற்றது. முதன்முதலில் புல்லாங்குழல் வாசித்தது முருகக் கடவுள்தான், கிருஷ்ணர் இல்லையாம். கிருஷ்ணர் காலம் ஐயாயிரம் ஆண்டு. ஆதியும் அந்தமும் இல்லாத முருகப்பெருமான் குறிஞ்சி மலையில் விளையும் மூங்கிலால் குழல் செய்து வாசித்தாராம். அதனால்தான் திருமுருகாற்றுப் படையில் 'குழலன் கோட்டன் குறும்பல்லியத்தன்' என வருகிறது. இத்தகைய பெருமையைக்கொண்ட ஒரு தெய்வீக கருவியை அசாத்தியமாக வாசிப்பவர்  செல்வா. இவரது குழல் இனிமையால் மிளிர்ந்த பாடல்கள் ஏராளம்.

ஓவியர் ஸ்ரீதர்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com