
"என்னங்க திடீர்னு பாப்கார்ன்லாம் வாங்கிக்கினு போறீங்க?"
"வீட்டுல ஓடிடி.ல புதுப் படம் பார்க்கப் போறேன்."
– தீபிகா சாரதி, சென்னை -5
"காலையில் எழுந்ததும் எதற்காக ஒரு நிமிஷம் மௌனமாக நின்னீங்க?"
"இன்னிக்கு நமக்கு வெட்டிங் டே! மறந்துட்டியா?"
– எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி
"எனக்குக் கோபம் வந்துட்டா யாராக இருந்தாலும் பார்க்க மாட்டேன்."
"டக்குன்னு கையை நீட்டிடுவியா?"
"இல்ல. கெட்டியா கண்ணை மூடிக்கிட்டு தியானம் பண்ண ஆரம்பிச்சிடுவேன்."
– வி.ரேவதி, தஞ்சை
"உங்களுக்கு எந்த ஸ்கீம்ல லோன் வேணும்….?"
"விஜய் மல்லையாவுக்குக் கொடுத்த அதே ஸ்கீம்ல கொடுங்க….!"
– பு.யுவதாரிணி, ஆதிச்சபுரம்
"இவரிடம் 'பேய்' ஓட்டிக்க யாரும் வரலையாம்…"
"அதனால என்ன செய்றார்?"
"பேய்க்குப் பதில் ஈயை ஓட்டிட்டு உட்கார்ந்து இருக்கார்…"
– என்.பர்வதவர்த்தினி, சென்னை
"தலைவருக்கு எப்பவுமே ரெண்டு வேலைதான்."
"என்ன வேலை?"
"ஒண்ணு ஓட்டுக் கேட்பாரு. இல்ல ஒட்டுக் கேட்பாரு."
– தீபிகா சாரதி, சென்னை -5