இந்த வாரம் இவர்

இந்த வாரம் இவர்

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

இன்னும் ஒரு அடி யாராவது முன்னேறினால்…

அவர்… கராத்தே & ஜூடோவில் வல்லவர். தன் நாட்டின் உலகப் புகழ்பெற்ற  உளவு அமைப்பின் ஒரு ஏஜெண்ட்டாக கிழக்கு ஜெர்மனியில் இவர் தூதரகத்தில் பணியிலிருந்தபோது, கிழக்கு & மேற்கு ஜெர்மனி இடையே இருந்த சுவர்  உடைக்கப்பட்டு  புரட்சி எழுந்திருந்தது.

கிழக்கு ஜெர்மன் மக்கள் கோபம் ரஷியர்கள் மீது திரும்பியது. தாக்க வந்தவர்களிடமிருந்து தப்பிக்க தன் நாட்டின் தலைநகர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு ராணுவ  உதவியைக்  கேட்டார். அவர்கள் அனுப்பவில்லை. தூதரகத்தில் அனைவரும் தாங்கள் கொல்லப்படுவது உறுதி என அஞ்சி நடுங்கினர். சாவு சில நிமிடங்களில் எனும் போது… அந்த இளைஞன் வெளியே வந்து கம்பீரமாகக் சொன்னார்: "இன்னும் ஒரு அடி யாராவது முன்னேறினால், எங்கள் வீரர்கள்  வலிமையான எந்திரத் துப்பாக்கிகளால் சுடுவார்கள்!" என் ஆணைக்காக காத்திருக்கிறார்கள் என்றார்.

அனைவரும் கலைந்து சென்றனர்!

உண்மையில் தூதரகத்தில் எவரிடமும் கைத்துப்பாக்கி கூட இல்லை!

அந்த இளைஞனின் பெயர் விளாடிமிர் புடின்!

ஓவியர் ஸ்ரீதர்
Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com