கொஞ்சம் சிரிங்க பாஸ்

கொஞ்சம் சிரிங்க பாஸ்
Published on

வாசகர் ஜோக்ஸ்                                               ஓவியம்:  ரஜினி

"என் மாமியார் சண்டை போட்டா உடனே பேசிடுவாங்க."

"பரவாயில்லையே ஏன்?"

"அப்பதானே அடுத்த சண்டையை ஆரம்பிக்க முடியும்."

– தீபிகா சாரதி, சென்னை

"நீங்க சொன்ன கதையை சினிமாவா எடுத்தா 50 நாள் நிச்சயமா ஓடும்னு எப்படிச் சொல்றீங்க?"

"அந்தப் படம் ஜப்பான்ல 100 நாள் ஓடினது சார்!"

–  சி.ஆர்.ஹரிஹரன், ஆலுவா, கேரளா

"அந்தப் பத்திரிகையில் நடிகை நளினாஸ்ரீ பிக்னிக் போனதை யெல்லாம் ஒரு பெரிய நியூஸ்னு போட்டிருக்காங்களே…?"

"பிக்னிக் போனதுக்காக அந்த நியூஸ் இல்லே. பிகினில போனதாலதான் அந்த நியூஸ்."

– வி.ரேவதி, தஞ்சை

"உங்க ஒய்ஃப் எதிரில் என்னோடு பேச ஏன் தயங்கறீங்க?"

"கண்டவனோடு என்ன பேச்சுன்னு அவ கோபப்படுவா…"

– ஏ. நாகராஜன், பம்மல்

"பஸ்ஸ ஓட்டிட்கிட்டே டிரைவர் தூங்கிட்டாரு."

"ஐயையோ… அப்புறம் என்ன ஆச்சு?"

"பஸ்ல எல்லாரும் டிக்கெட் வாங்கிட்டாங்க."

–  தீபிகா சாரதி, சென்னை

"நம்ம காதல் விஷயம் மட்டும் எங்க வீட்டுக்குத் தெரிஞ்சதுன்னா அவ்வளவுதான்… வீடு ரெண்டாயிடும்!"

"அப்போ ரொம்ப நல்லதாப் போச்சு..!"

"ஏன் அப்படிச் சொல்றீங்க?"

"அதுல ஒரு போர்ஷன்ல நாம தனிக்குடித்தனம் போயிடலாம்ல.."

–   பா.சுமதி, ஆத்தங்குடி

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com