எதிர்பார்ப்பை அதிரித்துக் கொண்டே இருக்கிறது.

எதிர்பார்ப்பை அதிரித்துக்  கொண்டே இருக்கிறது.
Published on

உங்கள் குரல்

ராசு பதில்கள் நாளுக்கு நாள் மிளிருகிறது. புதிய தகவல், தெளிவான கூர்மையான் பதில்கள், அரசியல் கேள்விகள், நையாண்டி, பொறுத்தமான படங்கள்…  வாரந்தோறும் கல்கியை படிக்கத்துத் தூண்டும் பகுதி.
– சூரிய  மூர்த்தி, பெங்களுரு.

முதலில் தேடி நான் படிப்பது கடைசிப் பக்கத்தைத்தான். வாரம்தோறும் சுவையான தகவல்களைச் சொல்லும்  சுஜாதா தேசிகன்,  இந்த வாரம் எழுத்தாளர் சுஜாதாவின் இறுதி நாளை நினைவுப்படுத்தி வருத்தமுறச் செய்துவிட்டார்.
– சீனிவாச மூர்த்தி, திண்டுக்கல்.

ராமகிருஷ்ணா பள்ளிக்கூடத்தில் தனக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட பக்தி, ஒழுக்கம், கட்டுப்பாடு, நேரம் தவறாமை, பெரியவர்களை மதித்து நடத்தல் போன்ற நற்பண்புகள் தன் வாழ்க்கையில் வளம் சேர்க்கக் காரணமாக இருந்தன' என்று மனோகர் கூறியுள்ளதில் 'வெற்றி'யின் ரகசியம் புலப்படுகிறது.

குற்றப் பின்னணி உள்ளவர்கள் சட்டமியற்றும் அவைகளில் இடம்பெறுவது முரண். அரசியல் கட்சிகள், குற்றப் பின்னணி உள்ளவர்கள் தங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடுவதை அனுமதிக்கக் கூடாது. இதை தங்கள் கொள்கையாகவே அறிவித்தால் ,  மக்களுக்கு கட்சிகள் மீது மரியாதையும் , ஜனநாயகத்தின் மீது முழு நம்பிக்கையும் ஏற்படும். கல்கியின் தலையங்கம் ஜனநாயகத்தின் தலைக்கவசம்.
– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

25.2.22 அன்று வந்த கல்கியின் 'மனதில் உறுதி வேண்டும்' என்ற தலையங்கம் மிகவும் அருமை. "சட்டம் என்றால் என்ன? அது நம் நாட்டில் எப்படி, யாரால் கையாளப்படுகிறது"  என்பதையும் "குற்றப் பின்னணி உள்ளவர்களை தங்களது நாடாளுமன்ற சட்டமன்ற பிரதிநிதியாக தேர்ந்தெடுக்க மாட்டோம்" என்ற மனஉறுதி ஓட்டுப் போடும் ஒவ்வொரு மனிதனும் இருக்க வேண்டுமென்று சொல்லியிருப்பது மிகச்சரியானது.
–  உஷா முத்துராமன், மதுரை

தேவ மனோகரி தொடர் வாரவாரம்  எதிர்பார்ப்பை அதிரித்துக் கொண்டே இருக்கிறது.
– சாவித்திரி, சென்னை

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com