கொஞ்சம் சிரிங்க பாஸ்

கொஞ்சம் சிரிங்க பாஸ்
Published on

டீச்சர் "ஆன்லைன் கிளாஸ் இல்லாதது இப்போ நமக்கு ஒரு செலவு அதிகம்."

 "என்ன செலவு?"

"மேக்அப் செலவுதான்."

– கு.அருணாசலம், தென்காசி

   "இன்னிக்கு சமையல்

பண்ணலை போப்பா."

"அப்ப ஆன்லைன்ல ஆர்டர்
பண்ணும்போது எனக்கும ஒண்ணு ஆர்டர் பண்ணி போடுங்க தாயே."

– தீபிகா சாரதி, சென்னை -5

"உன் பொண்டாட்டி மோசமா திட்டுறா! னக்கு ரோஷமே
வர்ற
லையா?"

"அவ திட்டும்போது நான் சமாதி நிலைக்குப் போய்டுவேன்! எனக்கு எதுவுமே தெரியாது."

– கே. அசோகன் மும்பை

"என் மனைவி சமையல் ரூம்
உள்ளே போனா அரை மணி  நேரத்துல சமைச்சு முடிச்சு
வெளியே வந்துடுவா."

"என் மனைவி அஞ்சே நிமிஷத்துல ஆர்டர் பண்ணி சாப்பாட்டை வர வைச்சுடுவா."

– தீபிகா சாரதி, சென்னை

போலிஸ் : "சென்னைல இருந்து எதுக்குய்யா கொடைக்கானலுக்கு திருடப்போனே?"

கைதி : "தொழிலும் பண்ண மாதிரி இருக்கும்… சம்மர் வெகேஷனுக்கும் போன மாதிரி இருக்குமேன்னுதான் அய்யா."

– பண்ருட்டி பரமசிவம்

சிப்பாய் "நம் மன்னர், தளபதியாரை எதற்காகப் பணி நீக்கம் செய்தார்?" 

சிப்பாய் " 'படைகள் தயார்' என்று கூறுவதற்குப் பதிலாக, 'பாடைகள் தயார்' என்று கூறிவிட்டாராம்..."

– ஆர்.பிரசன்னா, திருச்சி

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com