சிறுகதை.ஓவியம் : தமிழ்.– ச. மணிவண்ணன்.வெயில் மண்டையைப் பிளந்தது. வியர்த்து விறுவிறுக்க நடையை கூட்டி நடக்க முயற்சித்தார் சதாசிவம். நாக்கு வறண்டு தாகம் எடுத்தது. தொண்டை உலர்ந்தது..எச்சில் கூட்டி விழுங்கினார்..பாக்கெட்டை ஒரு முறை தொட்டுப் பார்த்துக் கொண்டார். பணம் பத்திரமாக இருக்கிறது என்பதை உறுதி செய்து கொண்டவர் சாலையோர மரநிழலில் நின்று ஓய்வெடுத்து நடக்கலாம் என நினைத்தவர் கைக்கடிகாரத்தை பார்த்தார் மணி இரண்டரை..பசி ஒரு புறம் வயிற்றைக் கிள்ளி சோர்வைக் கூட்டியது..மரநிழலில் நிற்கும் முடிவை மாற்றிக் கொண்டார்..ரேஷன் கடை வீட்டிற்கு பக்கத்துத் தெருவில் இருந்தவரை சுலபமாக இருந்தது சதாசிவத்திற்கு..ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன்பு சொந்த கட்டிடத்திற்கு மாறியதிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து போய் வரவேண்டியிருந்தது..அவருடைய டி.வி.எஸ்.வயதாகி, பழுதாகி நின்றதிலிருந்து எங்கு செல்வதானாலும் கால்நடைதான். பழகிக் கொண்டார்..முதல் தவணை கொரோனா நிவாரண தொகை இரண்டாயிரம் வாங்கிவர மருமகள் பணித்த வேலை இது. தானும் விருப்பப்பட்டு ஏற்றுக்கொண்ட வேலை..மருமகள் ரம்யா அவருக்கு வைத்த பெயர் 'வெட்டி!'.."வெட்டிய அனுப்பி வாங்கி வரச் சொல்லுங்க!" ரம்யா கணவன் சேரலாதனை விரட்டினாள்.."பாவம் ரம்மி! அப்பா இந்த சம்மர் வெயிலில அவ்வளவு தூரம் நடந்து போய்…"வார்த்தை முடிக்கவில்லை.."அரசு கூட்டம் சேரக்கூடாதுன்னுதான் டோக்கன் கொடுத்திருக்கு. இன்னைக்கு வரச்சொல்லியிருக்காங்க. இன்னைக்கு போகலன்னா… அடுத்த வாரம் வாங்க… அடுத்த மாசம் வாங்கன்னு இழுத்தடிப்பாங்க.. நீங்க கம்முனு இருங்க"அதட்டினாள்.."நாம இந்த பணத்தை வாங்கிதான் குடும்பம் நடத்தபோறோம்? நீயும் நானும் கவர்மெண்ட் ஜாப்ல இருக்கோம். நாம முண்டியடித்துகிட்டு போயி வாங்கிட்டு வரணுமா? கொரோனா ஏதாவது தொத்திக்கிட்டு வந்தா என்ன பண்றது?" சற்று தைரியத்தை வரவழைத்து கேட்டுவிட்டான்..ரம்யாவிற்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. கத்தினாள்.பாத்திரங்கள் உருண்டோடியது. பெரிய கலவரம்!.வெளிவராண்டாவில் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் இறக்கப்பட்ட நிழலில் இரும்பு கட்டில்; ஒரு நாற்காலி; சில புத்தகங்கள்; ஒரு குடம் தண்ணீர். அதுதான் சதாசிவம் இருப்பிடம். கொல்லைப்புறம் பாத்ரூம், டாய்லெட் அவருக்கு மட்டும்..மனைவியிடம் கெஞ்சும் மகனின் நிலையைக் கண்டு வருந்திய சதாசிவம் வரண்டாவில் இருந்தே வீட்டின் உள்நோக்கி குரல் கொடுத்தார்.."சேரா… சேரா..! ரேஷன் ஸ்மார்ட் கார்டையும் டோக்கனையும் கொண்டு வாப்பா!".அப்பாவின் குரல் கேட்ட சேரலாதன் வெளிவந்தான்.."இந்தாங்கப்பா…"கை நடுங்க கொடுத்தான்..வாங்கிக்கொண்டார் சதாசிவம். ரேஷன் கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். மணி 9.05..கடைசியாக மருமகள் ரம்யா சொன்ன வார்த்தையை நினைத்துப் பார்த்தார். இதயம் பிளந்த மாதிரி இருந்தது.."ஊர் உலகத்துல யார்தான் வீட்டை விட்டு வெளியில் போவதில்ல? உங்கப்பா உங்களுக்கு உசத்தி! அப்படி நோய் வந்து செத்தா குடியா முழுகிட போகுது? யார் யாருக்கோ கொரோனா வருது இந்த மனுஷனும் எல்லா வேலைக்கும் அவர்தான் வெளியில அனுப்புறோம். அப்படி ஏதாவது நோய்த் தொத்திகிட்டு வந்து இந்த நேரம் செத்தா வீட்டுக்கு எடுத்துட்டு வந்து சடங்கு செய்யறவேலை இல்லை. அப்படியே நேரா சுடுகாடு அனுப்பி எல்லாத்தையும் அவங்களே பாத்துக்குவாங்க..".ரேஷன் கடை சென்ற போது மணி 9.35 ஆகிவிட்டது..பெரிய க்யூ நின்றிருந்தது. முக கவசம் இல்லாமல் நிறையப் பேர். மூக்கை விட்டு வாய்பொத்தி பல பேர். சரியாக முக கவசம் அணிந்து வந்தவர் சிலர்..எந்த சமூக இடைவெளியும் பின்பற்றவில்லை. முண்டி அடித்துக் கொண்டு நின்றனர்..பணம் இன்றே வாங்கிவிட வேண்டும் என்ற ஆசை எல்லோரிடமும் மேலோங்கி இருந்தது..சதாசிவம் முககவசத்தை சரிசெய்துக்கொண்டு கூட்டம் இல்லாத பகுதியில் நிழலில் நின்று கொண்டார். உட்கார தோதாக இடம் ஏதுமில்லை..கூட்டம் குறைந்ததும் வாங்கிக்கொள்ளலாம் என முடிவெடுத்தார். கூட்டம் சீக்கிரம் குறைந்தபாடில்லை..மணி ஒன்றை நெருங்கி கொண்டிருந்தது..கூட்டத்தில் ஒன்றாய் போய் நோயைத் தொற்றிக்கொள்ள அவர் விரும்பவில்லை. தொற்றிக் கொண்டால்… நினைத்தபோது அவருக்கு பயம் வந்து விட்டது..எவ்வளவு நேரமானாலும் காத்திருப்பது என முடிவெடுத்து விட்டார்..காலையில் செய்தித்தாளில் படித்தது நினைவுக்கு வந்து போனது..'எத்தனைப் பேர்… எத்தனைப் பேர்… உயிருக்குப் போராடி ஹாஸ்பிடலுக்கு இடம் கிடைக்காமல் உயிரிழந்தது… அதுவும் சிறிய வயது ஆட்கள்! பணம் படைத்தவன்! இல்லாதவன்! என பாரபட்சம் இன்றி…'.'ஆண்டவா!' வாய்விட்டே சொல்லிவிட்டார்..மணி 1.00.ரேஷன் கடை சாத்தப்பட்டு உணவு இடைவேளை என்று சொன்னபோது 10 பேர் வரிசையில் நின்றிருந்தனர்..கூட்டத்தில் ஒருவர் ,"ஏம்பா இன்னும் பத்து பேர் தான் இருக்கோம்! எங்களுக்கு பணம் கொடுத்துவிட்டு நீங்க சாப்பிடப் போக வேண்டியது தானே!"."ஐயா! அப்படியே ஒவ்வொருத்தரா வந்துருவாங்க. பத்து நிமிடம் வெயிட் பண்ணுங்க. நாங்க ரெண்டு பேரும் சாப்பிட்டு வந்திடுறோம். நாங்க பணத்தை வைச்சுக்கிட்டு என்ன பண்ணப் போறோம்? உங்க பணம் உங்ககிட்ட கொடுக்கறதுக்குத்தான் வெச்சிருக்கோம்…"அவன் பேச்சில் நியாயம் இருந்ததால் ஆட்சேபனை யாரும் சொல்லவில்லை. அந்த 10 பேரில் சதாசிவமும் ஒருவர். காலையிலிருந்து நிற்பது கால்முட்டி வலி சொல்ல முடியாத அளவிற்கு வலித்தது..பொறுத்துக் கொண்டார்..சொன்னபடி பத்து நிமிடத்தில் சாப்பிட்டு வந்து விட்டனர் இருவரும். ஒருவன் பணம் கொடுக்க, ஒருவன் கையெழுத்து வாங்கினான்..சதாசிவம் கையில் பணம் வாங்கும்பொழுது அருவருப்பாக உணர்ந்தார்..வீட்ல இரண்டு பேர் கவர்மெண்ட் ஜாப்ல இருக்காங்க. தெரிந்தவர்கள் யாராவது பார்த்தால்… சங்கடமாக உணர்ந்தார்..எதுக்குதான் கவர்மெண்ட் அரசு வேலைல இருக்கிறவங்களுக்கு நிவாரணம் கொடுக்கணும்…? அவங்களுக்கு ரேஷன் கார்டே தேவையில்லையே! வசதி படைத்த நிறையப் பேரு வரிசையில் நின்னு வாங்கிட்டுப் போறாங்க. இந்த நிவாரண தொகை வாங்கித்தான் குடும்பம் நடத்தும் நிலை நிறைய பேருக்கு இல்லையே? கவர்மெண்ட் நல்லா ஆராய்ந்து, உண்மையான ஏழைகளுக்கு மட்டும் உதவி தொகை வழங்கினால் என்ன?.அவருடைய புலம்பல் அரசுக்கு எட்டுமா? புலம்பியவாறு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்..எல்லா அரசாங்க உதவிகளுமே உரிய ஏழை மக்களுக்கு சென்றடைவதில்லை!.நேற்று கூட நண்பர்களை சந்தித்தபோது அவர்கள் சொன்னது.."எதுக்குப்பா ரேஷன்ல இலவச அரிசி கொடுக்குறாங்க? அதை உண்மையா பயன்படுத்துறவங்க கொஞ்சம் பேர்தான்! அதை விக்கிறவங்கதான் நிறையப் பேர். அதுக்கு பதிலா உண்மையா ஏழையா இருக்கிறவங்களை கண்டுபிடிச்சி மொத்த மளிகை சாமான்களும் கொடுக்கலாம்!" சதாசிவத்தின் ஒரு நண்பர் கூற,மற்ற நண்பர்களும் அவர் சொன்னதை ஒப்புக் கொண்டனர்.."எல்லா அரசியல் கட்சியும் ஓட்டுக்காகத்தான் சீரமைக்க பயப்படுறாங்க. வசதி படைத்தவங்க தாங்களா மனமுவந்து 'எனக்கு இலவசம்வேண்டாம்!' ன்னு சொன்னால்தான் ஒழிய வாய்ப்பிருக்கு! அதுவரை இதற்கு தீர்வு காண முடியாது!"என்றார் மற்றொரு நண்பர்.."முற்றிலும் உண்மை!"என சதாசிவம் சொன்னது ஞாபகம் வந்து போனது..வீட்டருகே வந்து விட்டார். கேட்டை திறந்து உள் நுழைந்தவர் கட்டிலில் அமர்ந்தார்..மூச்சிரைத்தது. தண்ணீர் பாட்டில் எடுத்து, முக கவசத்தை நீக்கிவிட்டு இரண்டு வாய் குடித்தார்..தோட்டத்தில் இருந்த குழாயில் சோப்பு போட்டு கை , கால்களை அலம்பி, முகத்தையும் கழுவிக் கொண்டார்.."சேரா! சேரா..!".அப்பாவின் குரல் கேட்டு வெளியே எட்டிப்பார்த்தான் சேரலாதன்.."இதைத்தொடாதேப்பா! ரெண்டு நாள் அப்படியே இருக்கட்டும்! நோய்க்கிருமி இருந்தா செத்துடும்!"எனச் சொல்லிவிட்டு ஹாலில் ஒரு ஓரம் ரேஷன் கார்டுடன் பணத்தையும் வைத்தார் சதாசிவம்..சிறு வயதிலேயே தான் மனைவியை இழந்து துன்பப்பட்டது போதும்! மகன் நன்றாக இருந்தால் போதும்! மனைவி குழந்தைகளுடன் நல்லபடியாக நோய் நொடி இல்லாமல் வாழ்ந்தால் போதும்!.அவர் மனம் சொன்னது..மருமகள் பேசியது இப்போது மறந்துபோயிருந்தது..'எல்லா வளமுடன் நலமுடன் வாழ்க' என்று வாயார வாழ்த்திவிட்டு சோர்வாக கட்டிலில் படுத்துக் கொண்டார் சதாசிவம்..மனப் புழுக்கத்துடன், கோடை புழுக்கமும் சேர்ந்துக் கொண்டது.