எல்லோருமே எளிதில் புரிந்து கொள்ளும்படி இருந்தது

எல்லோருமே எளிதில் புரிந்து கொள்ளும்படி இருந்தது
Published on

புத்தாண்டு சிறப்பிதழின் அட்டை அசத்தல். "ஏன் பிள்ளையார் படம்" என்று எழுந்த கேள்விக்கு விடையாக கிடைத்த தெய்வீக ஓவிய கட்டுரை அற்புதம். ஒவியர் மணிவேலை நேரில் சந்தித்த உணர்வு தெய்வ அருளும் ஆசியும் பெற்ற அந்த ஓவியரின் பேட்டியில் அவருடைய கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் புரிந்துகொள்ள முடிந்தது.
– உமா மகேஸ்வரி, திருநெல்வேலி

"அதிர்ஷ்டம் எப்போது கதவைத் தட்டும்" என்ற கேள்விக்கு, 'எப்போது என்பது தெரியாமல்தானே பலர் அது தட்டும்போது கதவைத் திறப்பதில்லை' என்று தராசார் தந்துள்ள பதில் இதுவரை யாரும் சிந்தித்திராதது.

யூடியூப் பார்த்து சமையலே சரியாக வராத போது, பிரசவமா? – வழக்கம் போல  தராசார் பதிலில் நக்கல்… கலக்கல்.

ந்தியனின் தனிநபர் வருமானம் கடந்த பல ஆண்டுகளாகவே கணிசமாக உயராதபோது விழாக்களில் நடிகைகள் பல லட்சங்கள், பல கோடிகளில் தங்க புடைவைகளில் பவனி வருவது முரண். – அருமை.
– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

"பெண்களின் திருமண வயதை உயர்த்தும் மத்திய அரசின்  அவசர சட்டம் தேவையா" என்ற கட்டுரை பெண்களுக்கான இன்றையை தேவை என்ன? அதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும், பெண்களின் முன்னேற்றத்திற்கான கல்வி, வேலைவாய்ப்பு, பாதுகாப்பு, ஆரோக்கியம் போன்றவற்றில் எத்தனை முக்கியத்துவம் தரவேண்டும் என மிகத் தெளிவாகவும், விளக்கமாகவும் அலசி ஆராய்ந்தது எல்லோருமே எளிதில் புரிந்துகொள்ளும்படி இருந்தது. மிக அருமை.
– கீதா ரவி , சென்னை 

புத்தாண்டில் வாசகர்களுக்கு "தேவ மனோகரி" அவர்களின் தொடர்கதை பரிசாகக் கொடுத்த "கல்கி" இதழை பாராட்ட வார்த்தைகளே இல்லை. கதை விரும்புவர்களுக்கு தொடர்கதை ஒரு அல்வா போல. தொடர்கதையை எங்களுக்கு  புதிய ஆண்டில் கொடுக்கும் கல்கி இதழுக்கு புத்தாண்டு வாழ்த்துகளும் நன்றியும்.
– ராதிகா, மதுரை

"பெண்ணின் திருமண வயது 21 என்ன அவசியம் இந்த சட்டம் கொண்டு வந்ததன் பின்னணி என்ன?"  என்ற ஒரு அலசல் மிகவும் அருமையாக இருந்தது. பல புரியாத கேள்விகளுக்கு பதில் சொல்வது போல தெள்ளத் தெளிவாக சொன்ன விளக்கம் "கல்கி" இதழுக்கு பாராட்டுக்கள்  மிக அருமையான விளக்கம் "ஒழுங்காக அமல்படுத்தி பெண்களுக்கு பாதுகாப்பு தருவதுதான் இன்றைய அவசியத் தேவை என்று அடித்துச் சொன்னது மிகவும் அருமை. பாராட்டுக்கள்.
– நந்தினி கிருஷ்ணன், வேலூர்

லக குடிமகன் தொடர் ஆரம்பமே அசத்தல். அதன் ஆசிரியர்  தன் சாதனைகளால் இத்துணை உயரம் தொட்ட ஒரு தமிழர் என்று அறியும்போது பெருமையாக இருக்கிறது.
– உமா மகேஸ்வரி, திருச்சி

ம்மூட்டி  தன் பெயர் காரணத்தைச் சொல்லியிருப்பதும், தான் விரும்பிய பெயரைவிட அதுவே அவருக்கு நிலைத்து விட்டதைப் பற்றியும் சொல்லியிருப்பது சுவாரஸ்யம்.
– வெங்கட் ராமன் லால்குடி

ல்கி ஏன் கவிதைப் பக்கத்தை நிறுத்திவிட்டது. என் போன்ற இளம் கவிஞர்களுக்கான களம் அல்லவா அது?
– இளம்தமிழன், திருவெட்டார்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com