ஆஸ்திரேலிய மக்கள்தொகை கணக்கெடுப்பு 2022.கிறிஸ்டி நல்லரெத்தினம்.கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்பட்ட ஆஸ்திரேலியாவின் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவுகளின் ஃபஸ்ட் பார்வை இவ்வாரம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. Australian Bureau of Statistics ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை இக்கணக்கெடுப்பை நடத்துகிறது. கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவின் உத்தியோகபூர்வ ஜனத்தொகை 25,766,605 என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகை 2016 உடன் ஒப்பிடுகையில் 8.6% அதிகரிப்பைக் காண்பிக்கிறது. கடந்த 50 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் ஜனத்தொகை இரண்டு மடங்காக அதிகரித்திருப்பது மகிழ்ச்சியான செய்தியே. 2016க்கும் 2021க்கும் இடையில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஆஸ்திரேலியாவில் குடியேறி உள்ளனர்..இக்கணக்கெடுப்பின் முடிவுகள் ஆஸ்திரேலிய மக்கள் விகிதாசாரத்தின்கூறுகளை துல்லியமாய் எடுத்துக்காட்டுவதுடன் ஜனத்தொகை கட்டமைப்புகள் பற்றி பொதுவாய் நிலவிய பல ஊகங்களையும் நம்பிக்கைகளையும் மாற்றிப் போட்டுள்ளது..இரண்டாம் உலகப் போர் முடிவுற்றதும் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் உலக மக்கள் ஜனத்தொகை சடுதியான உயர்வை எட்டியது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. 1946 – 1964 காலப் பகுதியிலேயே அந்த ஜனத்தொகை அதிகரிப்பு நிகழ்ந்தது. இச் சந்ததியினரைச் செல்லமாக 'குழந்தை பூமர்ஸ்' (Baby Boomers) எனப் பெயரிட்டது உலகு. இச் சந்ததியினர் இப்போது 55 – 74 வயதை எட்டியவர்களாவர்..1966ல் ஆஸ்திரேலியாவின் மொத்தச் சனத்தொகையில் 40% ஆக இருந்தகுழந்தை பூமர்ஸ் இன்று 21.5% ஆக வீழ்ச்சியடைந்திருப்பது இந்நாட்டில்சமுதாய கட்டமைப்பு மாற்றத்தை நன்கு படம்பிடித்துக் காட்டுகிறது. இவர்கள் விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்பியிருப்பவர்கள் வேறு யாருமல்ல, 26 – 41 வயதுகளுக்குள் அடங்கும், 1981 – 1996 ஆண்டுகளுக்குள் பிறந்த 'மில்லினியல்ஸ்' (Millennials or Gen Y). இது ஓர் உற்சாகமளிக்கும் செய்தி. இந்த இளம் சமுதாயத்தின் பிரதிநிதிகளின் புதிய சிந்தனை நோக்கு இந்நாட்டின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவார்கள் என நம்பலாம்..ஆஸ்திரேலியப் பொருளாதாரம் மற்றும் கொள்கை விவாதத்தின் மையத்தில் இடம்பிடித்திருந்த 'குழந்தை பூமர்களின்' ஆட்சி இப்போது 'மிலினியர்களின்' பக்கம் சாய்ந்துள்ளது..இந்த 'மில்லினியல்ஸ்' பசுமைப் புரட்சி, சமூக நீதி, அமைதியான உலகு, தூய சுற்றாடல், பெண்ணுரிமை போன்ற உன்னத இலக்கை நோக்கிப் பயணிப்பவர்கள். அண்மையில் நடந்து முடித்த ஆஸ்திரேலிய தேசிய பாராளுமன்றத் தேர்தலில் இவர்கள், பாரம்பரிய முக்கிய கட்சிகளைப் புறக்கணித்து, சுயேச்சை அங்கத்தினர் பலரை ஆதரித்துத் தெரிவு செய்தது ஓர் இன்ப அதிர்ச்சியே! இது நிச்சயம் அக்கட்சிகளைத் திரும்பிப் பார்க்கவைத்தது..இலங்கையில் இன்று நிகழும் பல ஆர்ப்பாட்டங்களிலும் இந்த 'மில்லினியல்ஸ்' முன்னின்று வழி நடத்துவதைக் காணக்கூடியதாய் உள்ளது..ஆஸ்திரேலியாவின் 51.5% பிரஜைகள் வேற்று நாட்டில் பிறந்தவர்களே. ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்களை அடுத்து இரண்டாம் இடத்தில் இருப்பவர்கள் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் ஆகும். 2016ல் மூன்றாவது இடத்தில் இருந்த சீன நாட்டவர்களைப் புறம் தள்ளிவிட்டு இந்தியாவில் பிறந்தவர்கள் முதல் தடவையாக இக்கணிப்பில் மூன்றாவது இடத்தை இம்முறை பிடித்திருப்பது புதிய செய்தி! நான்காவது இடத்தில் சீனர்களும் அடுத்து நியூசிலாந்தில் இருந்து குடியேறியவர்களும் உள்ளனர்..இந்தியாவில் இருந்து குடிபெயரும் அனேகர் இளவயதான, பட்டப்படிப்பை முடித்தவர்களானதால் இவர்களின் வருகை ஆஸ்திரேலியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உறுதுணையாக பார்க்கப்படுகிறது..2016 மற்றும் 2021 க்கு இடையில் நேபாளத்தை விட்டு வெளியேறும் மக்களின் எண்ணிக்கையும் இரு மடங்காய் அதிகரித்துள்ளது..ஆஸ்திரேலியாவின் பூர்வீகக் குடிமக்களின் ஜனத்தொகை 2016 கணிப்புடன் ஒப்பிடுகையில் 25.2% அதிகரித்து இன்று 812,000 இலக்கை தொட்டு நிற்கிறது. மொத்த ஜனத்தொகையின் 3.2 சதவீதமே உள்ள இம்மண்ணின் மைந்தர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்ய அடுத்தடுத்து ஆட்சி செய்த அரசாங்கங்கள் ஏன் தவறிவிட்டன? என்ற கேள்விக்குப் பதில் இல்லை என்பது உண்மையே..வீட்டில் பேசப்படும் மொழிகள் ஆஸ்திரேலியாவின் மாறிவரும் சமூகங்களைப் பிரதிபலிக்கிறது எனலாம்..685,274 பேர் மாண்டரின் (சீன மொழி) வீட்டில் பேசுவதாய் கூறினர். ஆங்கிலத்திற்கு அடுத்ததாய் மாண்டரின் மிகவும் பொதுவான மொழியாக இன்னமும் தொடர்கிறது..இதைத் தொடர்ந்து அரபு (367,159 பேர்), வியட்நாம் (320,758 பேர்) மற்றும் கான்டோனீஸ்: சீன மொழி (295,281 பேர்) உள்ளது..95, 404 பேர் வீடுகளில் தமிழ் பேசுவதாய் கூறியுள்ளனர்..2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 239,033 பேர் வீட்டில் பஞ்சாபியைப் பயன்படுத்துகின்றனர்..ஆஸ்திரேலியாவின் 43.9% கிறிஸ்தவர்களானாலும் 'எந்தச் சமயத்தையும் சாராதவர்' என்ற வகையினர் 2016ல் 30.1%ல் இருந்து இன்று 38.9% ஆக உயர்ந்திருப்பது கவலையளிப்பதே..ஆஸ்திரேலியப் புள்ளியியல் நிபுணர் டேவிட் க்ரூன், ஒவ்வொரு தலைமுறையிலும் மாறிவரும் மக்களின் எண்ணிக்கையைப் பற்றிய தகவல்கள் வரும் ஆண்டுகளில் அரசாங்கக் கொள்கையை வடிவமைக்க உதவும் என்றார்.."மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் சேகரிக்கப்பட்ட தரவு ஒவ்வொரு தலைமுறையினரின் தேவைகளையும் புரிந்துகொள்ள அரசாங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு உதவுகிறது," என்று அவர் கூறினார். இக்கணிப்பின் மூலம் பெறப்பட்ட தரவுகள் ஆஸ்திரேலிய மக்களின் மேன்மைக்காகவும் பொருளாதார திட்டமிடல் செயல்பாடுகளுக்காகவும் உதவும் என நம்புவோமாக.