
தமிழ் வாழும் வரையிலும் தான் வாழும் வழியினை கற்பித்துச் சென்ற தலைவன்
தன் வாழ்வு தவ வாழ்வு இல்லையென
தயங்காமல் சொன்ன மனிதன்
சிமிழுக்குள் கடலை அடக்கிடும் சித்தை செயலில் காட்டிய கவிஞன்
சீர்கெட்ட அரசியலில் சிக்குண்ட் போதும்
சிதையா மனம் கொண்ட சிங்கம்
குமிழ் போன்ற திரை வாழ்வில்
குன்றென நின்றவோர் மன்னன்
குவலயம் கொண்டாடும் கவிநயக் கண்ணனை அனுதினமும் நினை மனமே!
ஓவியர் : ஸ்ரீதர்