“எல்லாம் ஒற்றைத் தலைமை பிரச்னைதான்!

“எல்லாம் ஒற்றைத் தலைமை பிரச்னைதான்!
Published on

வாசகர் ஜோக்ஸ்                                                   ஓவியம் : ரஜினி

"அந்த வீட்டுல ரெண்டு பொண்டாட்டிகளுக்குள்ள ஒரு விஷயத்துல ஒரே சண்டை!"

"எதுக்குடா?"

"எல்லாம் ஒற்றைத் தலைமை பிரச்னைதான்!

– ப.சோமசுந்தரம், கோவிலம்பாக்கம்

"டாக்டர், என் மாமியாரை நாய் கடிச்சுடுச்சு."

"நான் கால்நடை டாக்டர்மா…"

"தெரியும்… அதான் நான் நாயைக் கூட்டிக்கிட்டு வந்திருக்கேன் டாக்டர்."

– தீபிகா சாரதி, சென்னை

"என் மனைவி பிரஷர் குக்கர் மாதிரி…!"

"எப்படி?"

"குக்கர், விசில் கொடுத்து எச்சரிக்கிற மாதிரி என் மனைவியும் மூணு தடவை  வார்னிங் கொடுப்பா…!"

– வி. ரேவதி, தஞ்சை

"ஆனாலும் நம் மன்னர்  ரொம்ப மோசம்…"

"ஏன், என்னாச்சு?"

"மகாராணியோட சண்டை போடும் போதுகூட புறமுதுகு காண்பிச்சுக்கிட்டு ஓடறாரே."

– தீபிகா சாரதி, சென்னை

"உன்னை ஏன் கட்சியில் சேர்த்துக்க மாட்டேன்னு தலைவர் சொன்னார்?"

"நிழலுக்குக்கூட புழல் சிறை பக்கம் ஒதுங்கியதில்லைன்னு ஒரு வார்த்தை சொன்னேன்!"

– சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா

"கடந்த ஆறு மாசத்துல உங்க மனைவிக்கு கணிசமா கொலஸ்ட்ரால் குறைஞ்சிருக்கு சார்…!"

"பேச்சு, நடவடிக்கையெல்லாம் பார்த்தால் அப்படி தெரியலையே டாக்டர்?"

– வி. ரேவதி, தஞ்சை

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com