வித்யா சுப்ரமணியம்.அடுத்த படத்திற்கு பூஜை போட நாள் குறித்திருந்தான் ஆனந்தன்.."கடனை எல்லாம் அடைச்சுட்டயாப்பா?" மாமனார் கேட்டார்.."பாதி கடன் அடைத்தாயிற்றுப்பா. ஒரு படம் வெற்றி பெற்று விட்டால் உடனே அடுத்ததுக்கு பூஜை போட்டாதான் எல்லார்க்கும் ஓர் ஆர்வம் வரும். இல்லன்னா நம்மளை மறந்துடுவாங்க. அதுக்கு பணம் வேணும் இல்ல? மொத்த கடனையும் அடைத்துவிட்டால் திரும்ப கடன்தானே வாங்கணும். இந்தப்படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆகும். மொத்தமா எல்லா கடனையும் சீக்கிரமே அடைச்சுடுவேன்." அவருக்கு பதில் சொல்லிவிட்டு மாடிக்கு வந்தவனை வெறித்துப் பார்த்தாள் மைதிலி.."எங்கப்பாகிட்ட வாங்கின இருபத்தி ஐந்து லட்சத்தை வட்டியோட சேர்த்து எப்போ திருப்பிக்கொடுக்கப் போறீங்க?".ஆனந்தன் அவளை ஏறிட்டுப் பார்த்தான்.."சொல்லிட்டாரா? வட்டியோட வாங்கித் தரச்சொல்லி உன்னை தூதுவிட்டிருக்காரா?"."அப்டியே வெச்சுக்குங்க. அவர் பணத்தை எப்போ திருப்பித்தருவீங்க?"."ஏன்? இந்த மாப்பிள்ளை கேவலம் ஒரு இருபத்தஞ்சு லட்சத்துக்குக்கூட மதிப்பில்லாதவனா ஆயிட்டேனா?"."ஓ.!. அப்டின்னா கேவலம் இருபத்தஞ்சு லட்சம்தானா உங்க மதிப்பு?"."ஷட்டப்! எங்கப்பாகிட்ட வாங்கினதைக் கூடத்தான் திருப்பிக்கொடுக்கலை. அவரும் கேக்கல".."உங்கப்பா அளவுக்கு எங்கப்பா கோடீஸ்வரர் கிடையாது. அவருக்குன்னு இருந்த ஒரே சொத்தே அவரோட வீடு ஒண்ணுதான். அதையும் அடமானம் வெச்சுதான் அவர் உங்களுக்குப் பணம் கொடுத்திருக்கார். அந்தப் பணத்தை நீங்க திருப்பிக் கொடுக்கலன்னா அவர் நடுவீதிக்கு வந்துடுவார்."."கோடீஸ்வரன் வீட்டு வரன் மட்டும் வேணும் உங்களுக்கு? செலவில்லாம சம்பந்தம் பண்ணிக்குவீங்க. ஆனா அவன் அவசரத்துக்கு காசு கேட்டா வட்டியோட திருப்பிக் கேட்பீங்க அப்டித்தானே? இதுக்குதான் நம்ம அந்தஸ்துக்கு ஏற்றாப்போல வரன் பார்க்கணும் என்பது."."ஒரு நிமிஷம்!. என் பெண்ணை உங்க பையனுக்கு கட்டி வையுங்கள் என்று என் அப்பா வந்து உங்க வீட்டினரிடம் கேட்கவில்லை. வீடு தேடி வந்து உங்களுக்காக என்னைப் பெண் கேட்டது உங்கள் வீட்டினர்தான்."."என்ன செய்ய? எங்க வீட்டிலேயே என்னை ஏமாத்திட்டாங்க. ஒரு கண்ணில் வெண்ணை. மறு கண்ணில் சுண்ணாம்பு.".அவன் தன் தவறை மறைக்க, பிறரைப் பழி கூறிக்கொண்டிருந்தான். இப்படிக் கூறுவதன் மூலம் அவளுக்கும் அவள் அப்பாவுக்கும் ஒருவித குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தி அவனுக்குக் கொடுத்த பணத்தை அவர்கள் திருப்பிக் கேட்கக்கூடாது என்று மறைமுகமாக உணர்த்தினான்..மைதிலி அவனையே பார்த்தாள் குரூரமான சொற்கள் வாழ்வை சிதைக்கும் என்பது அவனுக்குப் புரியவில்லை. இன்றைய வெற்றியின் மிதப்பில் கண்மூடித்தனமாகப் பேசுபவனிடம் இப்போது எது சொன்னாலும் ஏறாது. அதேநேரம் அவனுக்காக அப்பாவைக் கடனாளியாவது நியாயமேயில்லை. அவள் நிறைய யோசித்தாள்..பிறகு வீட்டில் ஒருவருமில்லாத நேரமாகப் பார்த்து மாமனாரிடம் பேசினாள்.."உங்க அளவுக்கு எங்களுக்கு பணம் அந்தஸ்து எல்லாம் கிடையாது மாமா".திடீர்னு என்னம்மா அந்தஸ்து பத்தி பேசற?."பேச வெச்சுட்டாரே உங்க பிள்ளை. இந்த சினிமா எடுக்க உங்க பிள்ளை எங்கப்பாவிடமும் இருபத்தஞ்சு லட்சம் பணம் வாங்கியிருக்கார். இருக்கற ஒரே ஒரு சொத்தான வீட்டையும் அடமானம் வெச்சு எங்கப்பா அவருக்குக் கடன் கொடுத்திருக்கார். அதுக்கான வட்டிகூட இவர் கொடுக்கறதில்லை. அசலும் வட்டியுமா அவ்ளோ பணத்தைக் கொடுத்து வீட்டை மீட்க அப்பா எங்க போவார்? உங்க பிள்ளையிடம் இதுபத்தி பேசினா சாதாரண இடத்தில் பெண் எடுத்து அவருக்கு கட்டி வெச்சு அவரை நீங்கல்லாம் ஏமாத்திட்டதா சொல்றார். எனக்கென்னமோ நீங்க வாங்காத வரதட்சணையை உங்க பிள்ளை இப்படி திட்டம் போட்டு வாங்கியிருக்காரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. வேற வழியில்லாமதான் உங்ககிட்ட நீதி கேட்டு நிக்கறேன்.".மாமனார் திகைத்தாற்போல் அவளைப் பார்த்தார்.."கடவுளே… கொடுப்பதற்கு முன் என்னை ஒரு வார்த்தை கேட்டிருந்தா அப்பவே நான் இதைத் தடுத்திருப்பேனே."."எனக்கே இப்போதானே தெரியும். இப்பவும்கூட அப்பா சொல்லி தெரிஞ்சுக்கல. ஒருசில விஷயங்களால் எனக்கேற்பட்ட சந்தேகங்களினால் நானாக என் அக்காவிடம் கேட்டு உறுதி செய்துகொண்டு பின்னர் உங்க மகனிடம் கேட்டதற்குதான் இத்தனை பேச்சு. இதை அவர் வெறும் கடனா மட்டும் வாங்கியிருந்தா இந்நேரம் அதைத் திருப்பிக் கொடுத்திருப்பார். ஆனால், அவருக்கு திருப்பிக் கொடுக்கும் எண்ணமிருப்பதாகத் தெரியவில்லை. அதைப்பத்தி கேட்டா, அந்தஸ்துக்கு குறைஞ்ச இடத்தில் பெண் எடுத்தது தப்புன்றார். அதுக்கு என்ன அர்த்தம்? அப்போ கிடைக்காத வரதட்சிணையை இப்டி வாங்கிக் கொண்டாற்போலதானே? அவர் அந்தப் பணத்தை உடனே திருப்பிக் கொடுக்கலை எனறால், நான் அவர் மேல வரதட்சிணை புகார் கொடுக்கவும் தயங்க மாட்டேன். இது புருஷன் பெண்டாட்டி பிரச்னையா மட்டும் இருந்திருந்தா நாலு அறைக்குள்ள இதைத் தீர்த்துக் கொண்டிருப்பேன். ஆனா இது இரண்டு குடும்பத்திற்குள்ளான பிரச்னை என்பதால்தான் உங்ககிட்ட வந்திருக்கேன். நான் என்ன செய்யட்டும் மாமா?"."உன் வேதனை புரியுதுமா. நானே இதுபத்தி அவனிடம் பேசறேன். உங்கப்பாவோட வீட்டை எப்டியாவது மீட்டுடலாம் சரியா? அதுக்கு நான் பொறுப்பு."."உங்களைத்தான் நம்பியிருக்கேன் மாமா"..*** *** *** *** ***."வாங்க சம்பந்தி… வாங்க வாங்க…"."எப்படியிருக்கீங்க….?"."நல்லார்க்கோம். உக்காருங்க. காப்பி கொண்டுவரச் சொல்றேன். டிபன் ரெடியாயிட்டு இருக்கு."."அதெல்லாம் ஒண்ணும் வேணாம். காப்பி மட்டும் போதும். நீங்க உக்காருங்க."."மாப்பிள்ளை அடுத்த படத்துக்கு பூஜை போட்டுட்டார்னு பேப்பரில் படிச்சேன். ரொம்ப சந்தோஷம். உங்க தாத்தாவைப்போல பேரும் புகழும் அடையட்டும்."."மற்ற விஷயங்களிலும் என் தாத்தாவைப்போல இருந்தா ரொம்ப சந்தோஷம். என தாத்தா நிறைய நற்காரியங்கள் பண்ணியிருக்கார் . நிறைய ஆதரவற்ற குழந்தைகளைப் படிக்க வைத்தார். ஆதரவில்லா முதியோர்களுக்கு விடுதிகள் கட்டினார். இன்னமும் கூட அவை இயங்கிக் கொண்டிருக்கிறது. முக்கியமா அவர் யாரையும் ஏமாற்றியதில்லை."."காப்பி வந்துடுச்சு குடிங்க சம்பந்தி"."கடனை அடைத்துவிட்டு காப்பி குடிக்கறேனே".மைதிலி அப்பாவின் முகம் மாறியது. ஒன்றும் புரியாமல் விழித்தார்..ஆனந்தனின் அப்பா தன் கையிலிருந்த பிரீஃப்கேசைத் திறந்தார். உள்ளிருந்து ஒரு கவரை எடுத்து நீட்டினார். "இதுல ஐம்பது லட்சமிருக்கு. உடனே வங்கி கடனை அடைச்சுட்டு வீட்டுப்பத்திரத்தைத் திருப்பி வாங்கிடுங்க" என்று சொல்லிவிட்டு காப்பியை எடுத்து ஆற்றிக்குடித்தார்..மைதிலியின் அப்பா திகைத்துப்போய் அமர்ந்திருந்தார். "சம்பந்தி… நான் எதுவும்…."நீங்க எதுவும் கேக்கலை… யாரிடமும் எதுவும் சொல்லலை… இப்போ நான் உங்ககிட்ட இந்தப் பணம் கொடுத்ததும் ஆனந்தன் உட்பட யாருக்கும் தெரியவேண்டாம். முக்கியமா உங்க பெண்களுக்கு. ஒருவேளை அவன் பணத்தை வட்டியோடயோ வட்டியில்லாமயோ திருப்பிக் கொடுத்தா, அதை வாங்கி எங்கிட்ட கொடுங்க. அவன் கொடுக்கவேயில்லைன்னாலும் கவலைப்படவேண்டாம். என் பிள்ளை செய்யும் தவறுகளை நாந்தானே சரிசெய்யணும்."."இல்ல.. உங்களுக்கெப்படி இது..?"."நீங்க கொடுத்தது தெரியாது. ஆனா அன்னிக்கு நீங்க என் வீட்டுக்கு வந்துட்டு போனீர்களே அன்று உங்க முகத்தில் படிந்திருந்த குழப்பமும் கவலையும் என்னை யோசிக்க வெச்சுது. என் யூகம் சரியாச்சு. இதுக்குமேல ரொம்ப யோசித்து குழப்பிக்க வேண்டாம். அப்பறம் ஒரே ஒரு வேண்டுகோள். மாப்பிள்ளை என்பவன் மகன் போலதான். அவனிடம் பயமோ தர்மசங்கடமோ தேவையில்லை. நம்ம சக்திக்கு மீறி யாருக்கும் உதவிசெய்யக் கூடாது. இனிமேல் எனக்குத் தெரியாம அவனுக்கு பணம் எதுவும் கொடுக்கவேண்டாம். நமக்குப் பிரியப்பட்டவர்களாக இருந்தாலும் கொடுத்துக் கெடுக்கக்கூடாதுன்னு சொல்லுவார் என் தாத்தா.".மைதிலியின் அப்பா சட்டென அவரது கரம் பற்றியபடி கண்கலங்கினார்.."என் மற்ற மகன்களுக்கும் நான் அந்தஸ்து பார்த்து பெண் எடுக்கலை. அது தானாக அமைந்தது. கடவுள் போட்ட முடிச்சு. அதேமாதிரி கடவுள் போட்ட முடிச்சாதான் உங்க சம்பந்தத்தையும் நான் நினைக்கிறேன். அதனால உங்க மனசுல அந்தஸ்து பற்றிய எந்தவித குறுகுறுப்பும் தேவையில்லை. நல்ல பெண்ணைத்தான் நீங்க எங்களுக்கு தந்திருக்கீங்க. சந்தோஷமா தலைநிமிர்ந்து இருங்க. நான் கிளம்பறேன்".அவர் புறப்பட்டுச்சென்ற பிறகும் வெகுநேரம் சிலைபோல அமர்ந்திருந்தார் மைதிலியின் அப்பா..*** *** *** *** ***."என் பிள்ளை வாங்கின கடனை அடைச்சுட்டேன் மைதிலி. இனி நிம்மதியா இரு. சரியா? இந்த விஷயம் நமக்குள்ள இருக்கட்டும்."."மாமா……!" மைதிலி அழுகையை அடக்கியபடி கரம் கூப்பினாள். "நான் ஏதாவது தவறாகப் பேசியிருந்தால்….மன்னிச்சுடுங்க மாமா…"."நீ சரியாதான் பேசினம்மா. உன் நிலைமையில் நான் இருந்தாலும் இதை வரதட்சிணை குற்றமாகத்தான் பார்த்திருப்பேன். அப்படி ஒரு பழி என் குடும்பத்திற்கு வந்துடக்கூடாது என்பதால்தான் உடனே ஆனந்தன் வாங்கின கடனை அடைத்தேன். அதேநேரம் அவனது மற்ற கடன்களுக்கெல்லாம் நான் பொறுப்பேற்கவும் முடியாது. இவனது தவறுகளால் மற்ற இரண்டு பிள்ளைகளும் பாதிக்கப்படவும் கூடாதுன்னு நினைக்கறேன். அதனால நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன். சொத்துக்களைப் பிரிச்சு கொடுப்பதுதான் இப்போதைக்கு நல்லதுன்னு தோணுது. ஞாயிற்றுக்கிழமை நம்ம வக்கீலை வரச்சொல்லியிருக்கேன்."."அவசரப்படாதீங்க மாமா" மைதிலி சற்றே பதற்றத்தோடு சொன்னாள்..(தொடரும்)