கவர் ஸ்டோரி.– ஆதித்யா.தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு (2021) நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 159 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது. அ.தி.மு.க. கூட்டணி 75 இடங்களைக் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக அமர்ந்தது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. 4 இடங்களை வென்றது..தடுமாறும் தலைமை.ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமி முதல்வரானவுடன் அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு நெருக்கமான உறவினர்கள், பினாமிகள், கான்டிராக்டர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், அ.தி.மு.க. அமைச்சர்களின் வீடுகளில் மட்டும் சோதனை நடத்தப்படவில்லை. அதேநேரத்தில் உச்சக்கட்டமாக தலைமைச் செயலகத்திலேயே சி.பி.ஐ. சோதனை நடந்தது. இதனால், "அ.தி.மு.க. தலைவர்கள் பா.ஜ.வு.க்கு ஆதரவு தருவதைத் தவிர வேறு வழியில்லை" என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர்..பா.ஜ.க.வின் மத்தியஸ்த்தால் "கட்சிக்கு இரட்டை தலைமை" என்ற நிலை எழுந்தபோது உருவான சலசலப்பு இன்னுமும் தொடர்கிறது. "இணை ஒருங்கிணைப்பாளர்கள்" என்று அறிவிக்கப்பட்ட இபிஎஸ்., ஓபிஎஸ் பல நேரங்களில் அவர்கள் "உண்மையில் இணைந்தவர்களாக இல்லை" என்பதைக் காட்டிக் கொண்டிருந்தார்கள்..குறிப்பாக அதன் தலைமை குறித்து அவ்வப்பொழுது பெரும் விவாதங்களும் எழுந்து வரும்போதெல்லாம் இருவரும் அமைதி காத்து வந்தனர். இந்நிலையில் அரசியல் விமர்சகர்களும் இன்னமும் அ.தி.மு.க.வை பா.ஜ.க. தான் நிர்வாகம் செய்கிறது என்றும் பேசிவருகின்றனர்..அதற்கேற்றார் போல், அண்மையில் பா.ஜ.க. தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலையும், "தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியாக பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது" என்றும் தெரிவித்திருந்தார். இது அ.தி.மு.க.வினரிடையே பெரும் அதிர்ச்சியையும், சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது..தி.மு.க. கூட்டணி பதவி ஏற்ற பிறகு மக்கள் மத்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் மீது மக்களுக்கு பெரும் எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் ஏற்பட்டதால், அ.தி.மு.க. என்ன செய்வது என தெரியாமல் தவித்து வந்தது. அத்துடன், அ.தி.மு.க. மாஜி அமைச்சர்கள் ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வந்தது. இதனால் அவர்கள் அமைதியாகி விட்டனர்..கடந்த சில நாட்களாக பா.ஜ.க. தமிழக தலைமை, 'தி.மு.க. அரசை எதிர்க்கிறோம்' என்ற பெயரில் தவறான குற்றச்சாட்டுகளை கூறியதால் , அந்தக் குற்றச்சாட்டுகளால் பா.ஜ.க. மீதே மக்களின் கோபம் திரும்ப ஆரம்பித்தது. சில நேரங்களில் அது அ.தி.மு.க.வையும் தாக்கத் தொடங்கியது. இதனால் பா.ஜ.க. மீது அ.தி.மு.க. தலைவர்கள் கடும் கோபத்தில் இருந்தனர். அதே நேரத்தில் கூட்டணியில் இருந்துக்கொண்டே அ.தி.மு.க. தொண்டர்களை பா.ஜ.க. இழுத்து வருகிறது. ஆனால், மூத்த தலைவர்கள் பலர், வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையின் சோதனைக்குப் பயந்து கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்..எதிர்ப்பு எழுகிறது.இந்நிலையில் , முன்னாள் நிதி அமைச்சரும் அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளருமான பொன்னையன், அண்மையில் நடந்த ஒரு கட்சிக்கூட்டத்தில் பா.ஜ.க, மீது கடும் தாக்குதல் தொடுத்தார். அது அம்மா பேரவையின் பயிற்சி முகாம் ஆலோசனைக் கூட்டம். ரகசியக் கூட்டம். அந்தச் செய்திகள் வெளியே செல்லக்கூடாது என்பது கட்சியின் கட்டளை. ஆனால், அந்த விடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியிருக்கிறது..தமிழகத்தில் பா.ஜ.க.தான் எதிர்க்கட்சி போல காட்டும் பிம்பம் நடக்கிறது. இதனால், அ.தி.மு.க.வுக்கு பாதிப்பு ஏற்படும். இதை நாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கக் கூடாது. தமிழகத்தில் பா.ஜ.க. வளர்வது ஆபத்து. அக்கட்சி இரட்டை நிலைப்பாட்டை கொண்டது. பா.ஜ.க. செய்யும் தவறுகளையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டும். குறிப்பாக "தமிழகத்துக்கு எதிராக உள்ள நீட் பிரச்னை, காவிரி நீரை கர்நாடகம் தர மறுப்பது, ஜிஎஸ்டி பணம் தராமல் இருப்பது, வெள்ள நிவாரணம் வழங்காமல் இருப்பது போன்ற பிரச்னைகளுக்காக அ.தி.மு.க. போராட வேண்டும்" என்று பொன்னையன் கடுமையாகப் பேசியிருக்கிறார். இதற்கு கட்சி தலைமையின் ஒப்புதல் இருக்கிறது என்பதற்கு இரு தலைவர்களின் மெளனம் சாட்சியாகயிருக்கிறது..மேலும் அந்தக் கூட்டத்தில் அவர் பேசும் போது முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டவர்களும் அமர்ந்திருப்பது அந்தக் காணொளியில் தெரிகிறது. அ.தி.மு.க.வின் மூத்தத் தலைவர் ஒருவர் கட்சிக் கூட்டத்தில் இப்படி வேதனையுடன் பேசியபின் கட்சியில் அதற்கு ஆதரவு நிலை எழுந்திருக்கிறது..இந்த கூட்டத்துக்கும் செய்தி வெளியானதுக்கும் பின்னர் பொன்னையன் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில்,.பா.ஜ.க. எதிர்க்கட்சி அல்ல, அ.தி.மு.க.தான் எதிர்க்கட்சி என்பதை நாம் சொல்லியாக வேண்டுமென்பது எந்தக் கட்டத்தில் உங்களுக்குத் தோன்றியது? என்ற கேள்விக்கு.அந்தப் பாசறைக் கூட்டத்தில், "25 நாடாளுமன்ற இடங்களை வெல்வோம் என்றால், கூட்டணி இல்லை என்றும், நம்மைப் பின்னுக்குத் தள்ளிவிடுவோம் என்றும் அவர்கள் நினைக்கிறார்களா?" என்று கேள்விகள் கேட்கப்பட்டன. எனவே, இந்த பதிலை சொல்லவேண்டிவந்தது என்ற பதில் அ.தி.மு.க. கட்சியின் தொண்டர்களின் பா.ஜ.க. எதிர்ப்பு மன நிலையை எடுத்துக்காட்டுகிறது..பா.ஜ.க.வின் நிலை."அ.தி.மு.க. அதிகாரப்பூர்வமான எதிர்கட்சியாக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், உண்மையான எதிர்கட்சியாக செயல் படுவது நாங்கள்தான்" என்கிறார் அண்ணாமலை. "அடிக்கடி தி.மு.க.வின் அரசுக்கு எதிரான போராட்டங்கள், பேரணிகள், ஊழல் குற்றசாட்டுகளை அ.தி.மு.க.வைவிட பெருமளவில் நாங்கள் எடுத்துச் செல்கிறோம். ஆட்சியின் குறைபாடுகளை, தவறுகளை எடுத்துச்சொல்வதுதான் எதிர்கட்சியின் வேலை. அதை நாங்கள் தான் செய்து வருகிறோம். மக்களிடம் எங்களுக்கு பெரும் ஆதரவு இருக்கிறது என்பது எங்கள் கட்சி கூட்டங்களுக்கு வரும் கூட்டத்தைப் பார்த்தாலே புரியம்" என்று தொடர்ந்து சொல்லும் அண்ணாமலையின் பேச்சுகளில் அ.தி.மு.க. கூட்டணியை விட்டுவிலக விரும்புவது இலை மறை காயாகத் தெரிகிறது..இம்மாதிரி பேச்சுக்கள் கூட்டணியை பாதிக்குமா?.நீண்ட பாரம்பரியம் கொண்ட ஒரு திராவிடக் கட்சி அ.தி.மு.க. பா.ஜ.க. அதற்கு எதிரான சித்தாந்ததைத் கொண்ட கட்சி. தொடர்ந்து அவர்களோடு இணைந்து செயல்பட முடியாது. கொள்கை ரீதியாக இணைய முடியாது. ஆனால், தமிழ்நாட்டு மக்களின் மனநிலை என்ற முறையில், மொழிப் பிரச்னை, இந்தித் திணிப்பு கூடாது, ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம், அவர்களுக்கு மறுவாழ்வு, நீட் தேர்வில் தமிழ்நாட்டு மாணவர்கள் பாதிக்கப்படாத அளவிற்கு நீட் தேர்வை தள்ளிவைப்பது, மாநிலங்களுக்கு அதிக நிதி தர வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தும் கட்சியும் குறைவான நிதி ஒதுக்கீடு உட்பட அனைத்தையும் நியாயப்படுத்தும் கட்சியும் ஒரே கூட்டணியில் நீண்ட நாள் நீடிப்பது சாத்தியமில்லை..உதாரணமாக, தமிழகத்திற்கு விற்பனை வரி மூலம் ஒன்றரை லட்சம் கோடி கிடைத்து வந்தது. ஆனால், தற்போது ஜிஎஸ்டி வந்த பிறகு அந்த வருமானத்தின் பெரும் பகுதி "பின்தங்கிய மாநிலங்கள்" என்ற முறையில் உத்தரப்பிரதேசத்திற்கும் பிகாருக்கும் சென்றுவிடுகிறது. "நிதிப் பகிர்வில் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது" என்ற எண்ணத்தை இரண்டு திராவிட கட்சிகளும் ஏற்கிறது. இந்நிலையில் கூட்டணி தொடர்வது எளிதாகயிருக்காது..மேலும் தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கணிசமான அளவில் வாக்கு வங்கி இருக்கிறது. "பா.ஜ.க. கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களின் நலன் கருதி செயல்படும்" என்ற நம்பிக்கை தமிழ் நாட்டில் இன்னும் எழவில்லை. அது ஏற்பட்டால்தான் அந்த வாக்கு வங்கி ஓரளவுக்குக் கிடைக்கும். அதுதான் பா.ஜ.க.விற்கு பலன் தரும். இல்லாவிட்டால் அதன் எதிர்மறை பாதிப்புகளை இரு கட்சிகளும் தேர்தலில் சந்திக்க நேரிடும்.