கடைசிப் பக்கம். சுஜாதா தேசிகன்.ஒரு வார்த்தை !.சில நாட்கள் முன் இந்த செய்தி கண்ணில் பட்டது.."ராணிப்பேட்டை அருகே, தெரியாமல் பைக்கில் இடித்த கார்.. நண்பர்களை வரவழைத்து காரில் இருந்தவரை சரமாரியாக தாக்கிய நபர்'.இது சம்பந்தமான வீடியோவை பார்த்த போது கதி கலங்கியது..வாகனச் சண்டைகள் குறித்த செய்திகளை தேடிய போது நம்ப மாட்டீர்கள், வாரத்துக்கு ஐந்து செய்திகள் வருகிறது. சில வருடங்கள் முன் நானும் இது போன்ற அடிதடியில் சிக்கியிருக்க வேண்டும், தப்பித்துவிட்டேன். தப்பித்தற்கு காரணம் ஒரு வார்த்தை. சம்பவத்தை சுருக்கமாக சொல்லுகிறேன்..பெங்களூரில் 10 வருடங்கள் முன் ஒரு ஞாயிற்றுக்கிழமை மத்தியம் என் வீட்டுக்கு அருகில் இருக்கும் கடைக்கு காரில் சென்று திரும்பிக்கொண்டு இருந்தேன்..என் முன் ஒரு பழைய மாருதி கார் சென்றுகொண்டு இருந்தது. திடீர் பள்ளம் தென்பட மாருதி திடீர் என்று பிரேக் அடித்து நிற்க, பின்னால் வந்துகொண்டு இருந்த நானும் அதே போல் பிரேக் அடித்து நிறுத்தியும் என் வாகனம் முன் சென்ற வாகனத்தின் மீது மிக மெதுவாக ஒரு முத்தம் கொடுத்தது..இறங்கிப் பார்த்தேன். சின்ன கீறல் கூட இல்லை. யார் மீதும் தப்பு சொல்ல முடியாது. பள்ளத்தை அவர்கள் எதிர்பார்க்கவில்லை, அல்லது கவனிக்கவில்லை. இப்படி திடீர் என்று நிறுத்துவார்கள் என்று நானும் எதிர்பார்க்கவில்லை..காரில் இருந்த இளைஞர்கள் இறங்கினார்கள். என் மீதுதான் தப்பு என்று சொல்லி, பல வருடங்கள் முன் காரில் ஏற்பட்ட தழும்பை எல்லாம் காண்பித்து அவற்றுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும் என்று பணம் கேட்க ஆரம்பித்தார்கள். சுற்றுமுற்றும் பார்த்தேன், ஜன நடமாட்டமே இல்லை..நான் சுதாரித்துக்கொண்டு மெதுவாக காரில் ஏறினேன். மிக மெதுவாக ரிவர்ஸ் கீர் போட்டு காரை வேகமாக, பக்கத்தில் இருந்த இன்னொரு குட்டிச் சந்தில் செலுத்தி, வேகம் எடுத்து மற்றொரு சந்தில் திரும்பி, எங்கள் அடுக்குமாடி குடியிருப்புக்கு பின்புறம் உள்ள கேட்டில் நுழைந்து பேஸ்மெண்ட்டில் பார்க் செய்து வீட்டுக்கு வந்துவிட்டேன்..என் செய்கையை அந்த இளைஞர்கள் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். சற்று தூரம் என்னை ஓடி வந்து துரத்தியவர்கள் என் காரின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் நின்றார்கள்..அவர்கள் காரில் ஏறி ஸ்டார்ட் செய்து 'யூ டர்ன் அடித்து' என்னை பிடிப்பதற்குள் எஸ்கேப். அப்படியே என்னை அவர்கள் தேடி கண்டுபிடித்து என் அடுக்கு மாடி குடியிருப்புக்கு வந்தால் சரியான காரணமின்றி காவலாளி உள்ளே அனுமதிக்கமாட்டார்..வீட்டில் நடந்த விஷயத்தை சொன்னபோது "கில்லி விஜய் மாதிரி இந்த வேலை எல்லாம் எதற்கு உங்களுக்கு ?" என்றார்கள். பிறகு இந்திய தொலைக்காட்சியில் முதல் முறையாக ஏதோ ஒரு சினிமாவைப் பார்த்துக்கொண்டு அப்படியே தூங்கிவிட்டேன்..சில மணி நேரம் கழித்து, வீட்டுக் கதவு தட்டப்பட்டது. தூக்கத்திலிருந்து எழுந்து, கதவை திறந்த போது அதே இளைஞர்கள்..கன்னடத்தில் ஏதோ பேசினார்கள். திட்டினார்கள் என்று கூட சொல்லலாம். வீட்டு வாசலில் எதற்கு சண்டை என்று அவர்களை அழைத்துக்கொண்டு வெளியே சென்றேன். அவர்கள் விடாப்பிடியாக சில ஆயிரம் வேண்டும் என்றார்கள். நான் என்னிடம் தப்பு இல்லை என்று வாதாடினேன். ஆனால் அவர்கள் விடுவதாக இல்லை..அப்போது இன்னொரு காரியம் செய்தேன். இதையும் அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.."நான் செய்தது தப்பாகவே இருக்கட்டும் உங்களிடம் 'சாரி' கேட்கிறேன்" என்றேன். "பிழைத்துப் போ" என்று என்னை விட்டுவிட்டு அமைதியாக சென்றார்கள்..வீட்டுக்கு வந்தேன். "என்ன நடந்தது ?" என்று என் மனைவி கேட்க,."ஒரு வார்த்தை சொன்னேன்" கிளம்பிவிட்டார்கள் என்றேன்.