அதுவே உண்மையான ரொமான்டிக் !

அதுவே உண்மையான ரொமான்டிக் !
Published on

உங்கள் குரல்

'விமர்சனம் என்பது தனி நபர் உரிமை. விமர்சனத்தில் நியாயம் இருந்தால் எனது அடுத்த படத்தில் அதை கவனத்தில் எடுத்துக் கொள்வேன் ' என்று ஜெய்பீம் இயக்குனர் ஞானவேலின்  விளக்கம் போதுமானதே. விகடன் மாணவ நிருபர், தோழர் நல்லகண்ணுவை சந்தித்தது, அகரம் அறக்கட்டளையில் பணிபுரிந்தது என்று தன்னை செம்மைப்படுத்தியுள்ள இயக்குனரின் இயக்கம்  குரலற்ற குரல் உடையவர்களின் வாழ்வு இயங்க அச்சாணியாக இருக்கட்டும்.

வாரந்தோறும் கல்கியில் நான் முதலில் படிப்பு    'நமது தராசார்' பதில்களை தான். தராசார் பதில்களை படிக்கிற போது வகுப்பறையில் அமர்ந்து , ஆசான் நடத்தும் பாடங்களை உன்னிப்பாக உள்வாங்கிக் கொள்ளும் மாணவனாய் என்னை உணர்கிறேன்.  தராசார் கூறும் நல்வழிகளை அப்படியே  கடைப்பிடித்து என்னை வலுப்படுத்தி வருகிறேன்.  தராசார் காட்டும் வழியில்  பயணிப்பதில் இந்த வாழ்க்கை இனிக்கிறது. 'கட்சி நிர்வாகிகள் பணிகளை சரிவர செய்யாவிட்டால் பதவிகளை மாடு மேய்ப்பவர்களில் கொடுத்து விடுவேன் என்று பா.ம.கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளது அவரது அரசியல் முதிர்ச்சிக்கும், பக்குவத்திற்கும் ஏற்றதல்ல'  என்று தராசார் கூறியுள்ளது பெரியவர் ராமதாசை மனதை கண்டிப்பாக உறுத்தியிருக்கும். வெங்கடேசன் எம்.பி.யை ஒருமையில் பேசிய அமைச்சர் நேரு, கலைஞரிடமிருந்து அரசியல் நாகரீகத்தை கற்றுக்கொள்ளவில்லை என்று தராசார் கூறியுள்ளதை தான் கலைஞர் இன்று இருந்திருந்தால் கூறியிருப்பார்.
– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்

"யாராக இருந்தாலும் முற்பகல் விதைத்ததை பிற்பகல் அறுவடை செய்தே ஆக வேண்டும்" என்ற கருத்தை அருமையாக வலியுறுத்தியது, மலர்மதி எழுதிய "முற்பகல்" சிறுகதை.

பட நாடகம் காரணமாக, 'பகல் வேஷம்' என்ற வார்த்தையின் அர்த்தம் அனர்த்தமாக மாறிவிட்ட நிலையில், அதன் உண்மையான அர்த்தத்தை, கடைசி பக்கம் பகுதியில் பகலில் ஹனுமார் வேஷம் போட்டு தெருவில் வருபவர் பற்றிய தகவல்களை வெளியிட்டதன் மூலம் உண்மையை உணரச் செய்து விட்டார் சுஜாதா தேசிகன்!
– என்.ராமச்சந்திரன், நாமக்கல்

"ஜெயராம் ரகுநாதன்" அவர்களின் "அது ஒரு கனாக் காலம்" ஒவ்வொரு வாரமும் மிகவும் ரசிக்க வைக்கிறது. இந்த வாரம் 'ரொமான்டிக்' என்ற வார்த்தைக்கு அவர் சொன்ன விளக்கம் அற்புதம். சென்னையின்  கருப்பு-வெள்ளை படங்களுடன் டிராம் பயணம் பற்றிய மிக அருமையாக சொன்னவுடன் அந்த காலத்திற்கு போக வைத்து விட்டது. அவர் சொன்னதுபோல வீட்டில் ஏற்கெனவே ஈஸி சேர் இருப்பதால் அதில் உட்கார்ந்து நம்முடைய இளமைக்கால இனிமையான விஷயங்களை நினைவு செய்யலாம் அதுவே உண்மையான ரொமான்டிக் என்று புரிய வைத்த அற்புதமான பக்கங்கள் பாராட்டுக்கள்.
– ராதிகா, மதுரை

டைசிப் பக்கம் என்றாலே அருமையான தகவல் அறிவுக்கு விருந்தாக இருக்கும் என்று நிரூபிக்கும்  "கல்கி" இதழுக்கு பாராட்டுக்கள்.
– நந்தினி கிருஷ்ணன்,  மதுரை

ப்படி தேடி தேடி படிப்பதற்கு பதிலாக கல்கி புத்தகம் படிப்பது போல் சுவாரஸ்யமாக இருக்கும். 40 வருட வாசகனின் வேண்டுகோள் இது.
– உதயா, வந்தவாசி

ம்! நான் பகல் வேஷத்துல வரும் இவர்களைப் பார்க்கும் போது என்னையறியாமல் கையெடுத்துக் கும்பிடுவேன் ஆஞ்சநேயராக வணங்கி!

ஜெயலலிதாவின் நிறை குறைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் வேதா நிலையத்தை அரசு உரிமையாக்கள் சரியில்லைதான். தீபா என்ன செய்யப் போகிறார் என்று சொல்லவில்லையே!

ஜெய்பீம் படத்தின் தாக்கம் அரசின் கவனத்தை ஈர்த்து இருப்பதும் ஊடகங்களின் நியாயமான பரிந்துரைகளை ஏற்கும் மனநிலையும் வரவேற்க வேண்டியவை.
– திருவரங்க வெங்கடேசன், பெங்களூரு

தராசுவின் பதில்களில் உண்மை ,நேர்மை மற்றும் உலகியல் நடப்புகளை தெரிவதற்கு நல்ல தாெரு வாய்ப்பாகவும் உள்ளது.

மாலனின் "என் ஜன்னலுக்கு வெளியே " புத்தக விமர்சனத்தில் பலதரப்பட்ட விஷயங்களை அறிவுத்திறனுடன் அட்டகாசத்துடன் அனைவரும் விரும்பும் படி படைத்துள்ளார் என்பதை அறிந்து காெண்டதால் நூலினைப் படிக்கும் எண்ணம் வலுத்துள்ளது. புத்தக விலையை அறியும் ஆவல் பல மடங்கு உள்ளது.
– து.சேரன்,  ஆலங்குளம்

பிள்ளையார் முகத்தில் ஒரு புறம் தந்தத்துடனும், மறுபுறம் தந்தம் இல்லாமலும் இருப்பதற்கான ஆன்மிக காரணங்களை மகா பெரியவாள் பட்டியலிட்டு காட்டியதை புகழ்ந்துரைக்க தமிழில் வார்த்தைகள் இல்லை.
– உஷா, நாமக்கல்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com