‘காற்றில் கரைந்த குயிலின் குரல்’

‘காற்றில் கரைந்த குயிலின்  குரல்’
Published on

"மாற்றம் ஒன்றே மாறாதது" என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால், மாற்றமே இல்லாமல் 16 வயதிலிருந்து 90 வயது வரை  இந்தியாவின் பல மொழிகளில்  ஒலித்த குரல் லதாவினுடையது..பல கோடி உள்ளங்களை உலகெங்கும் மகிழ்வித்த குரல் இப்போது ஓய்வு எடுக்க சென்றுவிட்டது. ஆனால் நமது நினைவிலும் மனதிலும்  என்றும் ஓய்வில்லாமல் ஒலிக்கும் இனிய குரல் அது.

1929 ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்தவர் லதா மங்கேஷ்கர். இவரது இயற்பெயர் ஹேமா. இவரது தந்தை தீனாநாத் மங்கேஷ்கர். மராத்தி மொழியில் நன்கு அறியப்பட்ட பாடகராகவும், நாடக ஆசிரியராகவும் இருந்தார். அவரது ஐந்து குழந்தைகளில் முதல் குழந்தை லதா மங்கேஷ்கர்.

தந்தையின் நாடகங்களில் 'லத்திகா' எனும் பாத்திரத்தில் இவர் நடித்து வந்தார். அதனால் அனைவரும் அவரை 'லதா' என்று அழைக்கத் தொடங்கினர்.

அதுவே அவரது பெயராகவும் ஆகிப்போனது. 1949ஆம் ஆண்டு 'மகள்' எனும் இந்தி படத்தில் தனது முதல் திரை இசை பாடலை பாடி இசை பயணத்தை தொடங்கினார்.

அதன்பின்பு பல்வேறு இந்திய மொழிகளில் 70 ஆண்டுகள்  பல்லாயிரம் பாடல்களை பாடி  இந்தியத் திரை இசையில் உச்சத்தை தொட்டவர் லதா மங்கேஷ்கர்.

சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்ற லதா மங்கேஷ்கர், இந்திய சினிமாவின் மிகவும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை 1989ஆம் ஆண்டு பெற்றார்.

இந்தியாவின் மிகவும் உயரிய அரசு  விருதான 'பாரத ரத்னா' விருது 2001ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. எம்.எஸ். சுப்புலட்சுமிக்குப் பிறகு பாரத ரத்னா விருது பெற்ற பாடகர் லதா மங்கேஷ்கர்.

அவரது மறைவுக்கு நாட்டின் பிரதமர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தும் கெளரவத்தைப் பெற்ற இசைக்  கலைஞர்.

ஓவியர் ஸ்ரீதர்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com