கூர்மன்  என்பவர் யார்

கூர்மன்  என்பவர் யார்
Published on

நேர்காணல்

– பரணி

ருவர் மனதில் இருப்பதை மற்றொருவர் அறிந்துகொள்ள முடியுமா?  இது குறிந்து நீண்ட நாட்களாகவே மனோதத்துவ நிபுணர்கள், உளவியல் ஆய்வாளர்கள் ஆராய்ந்து  கொண்டிருக்கிறார்கள்.  இந்தத் திறன் உள்ளவர்களை ஆங்கிலத்தில்  மெண்டலிஸ்ட் என அழைக்கிறார்கள். இதன் தமிழாக்கம் தான் கூர்மன்  (தமிழில் மென்டல் என்ற  வார்த்தைக்கு நாம் அறிந்திருக்கும் தவறான  அர்த்தம் கற்பித்திருக்கிறோம்)அப்படிபட்ட கதாபாத்திரங்களை வைத்து சில ஆங்கிலப்  புத்தகங்களும் வந்திருக்கின்றன.  ஆனால், அப்படி ஒரு பாத்திரத்தை முன்வைத்து  தமிழில் ஒரு திரைப்படம் உருவாகிக்கொண்டிருக்கிறது.

இயக்குநர் பிரையன் B. ஜார்ஜ் இயக்கத்தில் ராஜாஜி, ஜனனி ஐயர், பாலசரவணன்  நடிப்பில், உருவாகியுள்ள, சைக்காலஜிகல்,  த்ரில்லர் திரைப்படம் தான் கூர்மன்.

இந்த சக்தியைப் பெற்றிருக்கும் நாயகனைச்  சுற்றி நிகழ்கிறது கதை . இதன் கதாநாயகி  நடிகை ஜனனி ஐயரை சந்தித்தபோது…

பிரையன் B. ஜார்ஜை  'தெகிடி' படத்திலிருந்தே எனக்குத் தெரியும்.  இந்தக் கதையை கேட்ட நான்  அவரிடம், 'நீங்கள் படம் எடுக்கும்போது வேறு யாரையாவது நாயகியாக போட்டால் சண்டை போடுவேன்' என்றேன். அந்த அளவு  என்னை கவர்ந்த கதை. மனதில் உள்ளதை  கண்டுபிடிக்கும்  ஒரு பாத்திரத்ததை முதன்மை பாத்திரமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மாறுப்பட்ட பாணியில் வித்தியாசமான திரைக்கதையில் உள்ளது. நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு  புதிய பாணிக் கதையாகப் பேசப்படும்.

இந்தப் படத்தின் தொடக்க விழாவை நடத்தியதில் கூட  ஒரு புதுமையைச்  செய்தனர்  படக்குழுவினர்.  மனதில் உள்ளதை அறியும் மென்டலிஸ்ட் அதை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை, பார்வையாளர்களுக்கு ஒரு சிறிய டெமோவாக, பார்வையாளர்களிலிருந்தே ஒருவரை அழைத்து, மனதில் நினைப்பதை கண்டுப்பிடிக்கும் நிகழ்வினை  செய்துகாட்டினர். இதனை பார்த்த பார்வையாளர்கள் அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கின

படம் ரிலீஸாகி தியேட்டர்களில் பார்க்கும் போதே அந்த  ரசிகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கண்டுபிடித்துவிடுவார்களோ?

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com