இந்த வாரம் இவர்

இந்த வாரம் இவர்
Published on

மகிந்த ராஜபக்சே

– ஶ்ரீதர்

1945 ஆம் ஆண்டு அம்பாந்தோட்டையில் பிறந்த மகிந்த ராஜபக்சே, ஆரம்ப காலம் தொட்டே அரசியலில் ஆர்வத்துடன் பங்கேற்றார், தந்தையின் தேர்தல் பிரசாரங்களிலும் தீவிரம் காட்டினார். தந்தையின் மறைவுக்கு பின்னர் மகிந்த ராஜபக்சே அரசியலுக்கு வந்தார். அவர் 1970இல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார், அரசியலில் இருந்தவாறே 1977இல் சட்டப்படிப்பையும் முடித்தவர்.

பின்னர் 2002 இல் எதிர்க்கட்சி தலைவராகவும், பிறகு 2004ம் ஆண்டு இலங்கையின்  13வது பிரதமராக பதவியேற்றார், 2005இல் இலங்கையின் உச்சபட்ச அதிகார பதவியான அதிபர் பதவியையும் அடைந்தார்.
இலங்கையில் 6வது அதிபராக 2005இல் பொறுப்பேற்ற ராஜபக்சே, ஏற்கெனவே இலங்கையில் கூர்மையடைந்திருந்த இன பாகுபாட்டை மேலும் கூர்தீட்டினார். இதன் தொடர்ச்சியாக இலங்கையில் விடுதலைப்புலிகள் மீதான போர் தீவிரமடைந்தது. இந்த போரில் தமிழர்களும் கொத்துக்கொத்தாக உயிரிழந்தனர். அத்தனை போர் நெறிமுறைகளையும் தவிடுபொடியாக்கிவிட்டு 2009இல் அவர்களை வீழ்த்தினார் ராஜபக்சே.

இவர் அரசியலில் இருந்தபோது இவரது தம்பிகள் கோத்தபய ராஜபக்சே,  பசில் ராஜபக்சே ஆகியோர் அரசியலில் அமைச்சர் உள்ளிட்ட உயர்பதவிக்கு கொண்டுவந்தார். தற்போது ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே இலங்கையின் உயர்பதவியான அதிபர் பதவியை வகிக்கிறார். மற்றொரு தம்பி பசில் ராஜபக்சே இலங்கையில் அமைச்சராக உள்ளார், ராஜபக்சேவின் மற்றொரு தம்பியான சமல் ராஜபக்சேவும் இலங்கையின் பாசனத்துறை அமைச்சராக உள்ளார். அவரின் மகன் நாமல் ராஜபக்சேவும் அமைச்சராக உள்ளார், இவரின் மற்றொரு மகனும் அரசியலில் ஆதிக்கம் செலுத்துபவர்தான். இவர்கள் தவிர ராஜபக்சே குடும்பத்தை சேர்ந்த மேலும் பலரும் அரசியல் மற்றும் அதிகார பதவிகளில் கோலோச்சுகிறார்கள். உலகின் எந்த நாட்டிலும் இப்படி ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைத்து முக்கிய அரசுப் பதவிகளிலும்  இருந்ததில்லை.

சிங்கள மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணம் ராஜபக்சே குடும்பத்தின் 20 ஆண்டுகால ஊழல் அரசியல்தான் என்பதால்  அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பொங்கி எழுந்திருக்கின்றனர்.  இந்த கட்டுரைய் படிக்கும்போது அவர் பதவியிழந்திருக்கலாம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com