ராகவ் நகரத்திற்கு ஒதுக்குப்புறமாக இருந்த 1600 சதுரடியில் நல்ல தோட்டம் அமைத்து லோன் வாங்கி வீடு ஒரு வழியாக கட்டிவிட்டான்..கிரகப்பிரவேசம் மிகச் சிறப்பாக நடத்தி மூன்று நாட்கள் ஆகிறது..அல்லோகலமாக இருந்த வீட்டை சீர் செய்து முடிக்க இரண்டு நாட்கள் ஓடிவிட்டிருந்தது..அன்று ஞாயிற்றுக்கிழமை..அவன் மனைவி ஷிவானிக்கு இன்று பிறந்தநாள். காலையிலேயே தலைகுளித்துவிட்டு புதுபட்டுப்புடவை கட்டி தயாரானாள்..ராகவ் குளித்து கிளம்பி வருவதற்கு முன்பாகவே தயாராகி சோபாவில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தாள்.."ம்.. போலாங்களா?. நான் ரெடி ஆயிட்டேன். எப்படி இருக்கு என்னுடைய புது பட்டுப் புடைவை?"மெல்லிய புன்னகையுடன் கேட்டாள் ஷிவானி..ஷிவானி உண்மையில் தேவதையாக தெரிந்தாள் ராகவ் கண்களுக்கு.."ஏஞ்சல் வாங்க போகலாம்!.".ராகவ்வின் அன்பான வார்த்தைகள் ஷிவானியை குஷிப்படுத்தியது..ராகவ் ஷிவானியை அணைத்தவாறு வாசலுக்கு வந்து வீட்டை பூட்டி கொண்டு அவளுக்கு பிடித்த அம்மன் கோயிலுக்கு அழைத்து வந்துவிட்டான்..அவள் முகம் பிரகாசமாக இருந்தது மகிழ்ச்சியில்..சாமி தரிசனம் முடிந்ததும், ரெஸ்டாரன்ட் ஒன்றிற்கு அழைத்துச் சென்றான்..டிபன் முடித்துவிட்டு, வீட்டை வந்தடைந்த போது மணி பதினொன்றை ஆகியிருந்தது.."மதியத்திற்கு என் கையாலே வடை பாயாசத்துடன் அருமையான டிஷ் செய்யப் போறோம்!"."செய்யப்போறோமா?" பொய்யாக சலித்துக் கொண்டான்.."ம்.. கூட எனக்கு ஹெல்ப் பண்ணுங்க.. அதுபோதும்.."."என்ன ஹெல்ப் என்கிட்ட எதிர்பார்க்கிற?"."நான் சமைப்பேனாம்! நீங்க சமையல் ரூம்ல நின்னு என் கூட பேசிகிட்டு இருக்கணுமாம்…".தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தினாள்.."எனக்கு அரை மணி நேரம் ஒரு வேலை இருக்கு. நீ சமைக்க ரெடி பண்ணு! அதுக்குள்ள வந்துடுவேன்!"என ராகவ் சொல்லிவிட்டு டி-ஷர்ட் ஒன்றை போட்டான். வாசல் வந்தவன் பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினான்..'எங்கே?'எனக் கேட்க நினைத்தவள் ஏனோ கேட்க தோன்றாமல் சமையலில் மூழ்கினாள்….சொன்னபடியே அரை மணி நேரத்திற்குள்ளாகவே வந்து விட்டான் ராகவ்..வேர்த்து விறுவிறுக்க வந்தவன் லுங்கி,பனியனுடன் சமையல் அறையில் நுழைந்தான்..காய்களை நறுக்கிக் கொண்டிருந்த ஷிவானியின் கையில் இருந்த கத்தியை வாங்கிக் கொண்டான். ராகவ் காய்கறி நறுக்க ஆரம்பித்தான்.."போகும்போதே எங்க போறீங்கன்னு கேட்கக் கூடாதுன்னு கம்முன்னு இருந்துட்டேன்! இப்ப சொல்லுங்க எங்க போனீங்க?".செல்லமாக சிணுங்கியவாறு கேட்டாள்.."சர்ப்ரைஸ்! ஈவினிங் அஞ்சு மணிக்கு சொல்றேன்!"."ம்… இப்போதே சொல்லுங்கள்!"கெஞ்சினாள்.."சர்ப்ரைஸ்… சர்ப்ரைஸ்.. ஈவினிங் தான் சொல்வேன்!".அமைதியானாள் ஷிவானி..மதியம் சாப்பிட்டுட்டு ஒரு குட்டி தூக்கம் போட்டார்கள்..தூக்கம் கலைந்து ஷிவானி விழித்த போது மணி நாலு..வேலை இல்லாததால் செல்லை எடுத்து ஃபேஸ்புக் பார்த்துக் கொண்டிருந்தாள்..பக்கத்தில் அமைதியாக தூங்கிக்கொண்டு இருந்தான் ராகவ்..ஐந்து மணிக்காக காத்திருந்தாள்..'என்ன சர்ப்ரைஸ் ஆக இருக்கும்?'தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள்..ஏதாவது கிப்ட் வாங்கி வந்திருப்பானோ?.பெட்ரூமில் இருந்த டேபிளை பார்த்தாள். டேபிள் காலியாக இருந்தது..கடைசி பத்து நிமிடம் தவித்துப் போனோள்..தூக்கம் கலைந்து எழுந்த ராகவ் முகம் கழுவிக்கொண்டான்..ஆவலுடன் ராகவ் முகத்தை பார்த்தாள்.."கண்மூடு!" எனச் சொல்லி தன் கைகளால் அவள் இரு கண்களையும் மூடியவாறு அவளை தோட்டத்திற்கு அழைத்துச் சென்றான்.."இங்கே பார்!"கண்களை மூடியிருந்த கைகளை எடுத்தான்..பார்த்ததும் திடுக்கிட்டாள்..ஒரு முருங்கை கிளை..ராகவ் முகத்தை நீர்கோர்த்த கண்களால் பாரத்தாள் ஷிவானி..முருங்கை கிளையை மார்போடு அணைத்துக் கொண்டாள்.." கோல்டு வாங்கி கொடுத்து இருந்தால் கூட எனக்கு இவ்வளவு மகிழ்ச்சி வந்திருக்காது! ஆனா.. என்ன ரொம்ப நல்லா புரிஞ்சுகிட்டீங்க ராகவ்!"."ம்… நடுவோம்!"என்று சொல்லிவிட்டு கடபாரை எடுத்து குழித்தோண்டினான்..குழியில் கைவிட்டு மண்ணள்ளி போட்டாள் ஷிவானி..முருங்கை கிளை நட்டுவிட்டு தண்ணீர் எடுத்து வந்து ஊற்றினாள்..மகிழ்ச்சியில் முகம் மலர்ந்திருந்தாள்..காபி போட்டு எடுத்து வந்து கொடுத்தாள்..டிவியில் மூழ்கி இருந்தான் ராகவ்..சோபாவில் ராகவ்வின் பக்கத்தில் அமர்ந்து அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்..ஆறு மாதத்திற்கு முன் திருமணம்..முதலிரவு அறை..என்னதான் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் கூச்சத்துடன் ரூமில் நுழைந்து ராகவ் பக்கத்தில் அமர்ந்தாள்.."ஏதாவது பேசேன்…"ராகவ் கேட்க , கூச்சத்துடன் நிமிர்ந்து பார்த்துச் சொன்னாள்..ராகவ் அவள் சொல்வதை அமைதியாக கேட்கத்தொடங்கினான்..கதைப்போல் சொல்ல ஆரம்பித்தாள் ஷிவானி..••••••."அம்மா நான் படிக்கிறதா வேணாமா?"கையில் நோட்டு பென்சில் உடன் நின்றிருந்த மகளை காய் நறுக்கி கொண்டே பார்த்தாள் ராஜேஸ்வரி.."என்ன ஷிவானி ஏன் கோவமா பேசுற?"."பாருமா படிக்க விடமாட்டேன்றான்றாங்க!"."யாருமா?"."அந்த பக்கத்துவீட்டு அக்கா முருங்கைக்கீரை கேட்கிறாங்க.."."அதனால என்ன அவங்க பறிச்சிக்க போறாங்க…நீ என்ன பண்ண போறே?"."ம்.. சொரடு எங்க இருக்கு?அது இதுன்னு பேசிக்கிட்டே இருக்காங்க. என்னால படிக்க முடியல…"."இதுக்கு போய் கோபப்படலாமா?"."சரி ! இனி கோபப்படலமா..".ஷிவானி மீண்டும் படிக்க தொடங்கினாள்.."பாப்பா… கீரை ஒடைச்சிக்கிடட்டும்மா?"பக்கத்துத் தெரு பெரியவர் ஒருவர் வந்து கேட்க,"ம்..பறிச்சிக்கோங்க..".ஷிவானி சொல்லிவிட்டு மீண்டும் நோட்டில் எழுத தொடங்கினாள்.."சொரடு எங்கே இருக்கு பாப்பா?"பெரியவர் கேட்டவுடன் சுருக்கென கோபம் பொத்துக்கொண்டு வந்தது ஷிவானிக்கு.."மரத்திலே மாட்டி இருக்குது பாருங்க தாத்தா..!".மீண்டும் அம்மாவிடம் போனாள்.."என்னால திண்ணையிலே உக்காந்து படிக்க முடியாது! ஒவ்வொருத்தருக்கும் பதில் சொல்லி மாளாது!"."இந்த வயசுல இவ்வளவு கோபம் உனக்கு தேவை இல்லை! உள்ளயே ஒக்காந்து படி!"."அம்மா! நம்ம வீட்ல இருக்கிற ரெண்டு முருங்கை மரத்தையும் வெட்டிட்டா என்ன?"."வெட்டக் கூடாதும்மா! பலரோடு குடும்பத்துக்கு உணவா இருக்கு… காய் வாங்க வசதி இல்லாதவங்க ஒரு அவசரத்துக்கு முருங்கைக்கீரை குழம்பு வச்சசுகிறாங்க.. பலருக்கு உதவுவது இந்த முருங்கை மரம்! உடம்புக்கு நல்ல மருந்தா இருக்குமா!அதைப்போய் வெட்டணும்ன்னு சொல்றீயேம்மா…"வருத்தத்துடன் சொன்னாள் ராஜேஸ்வரி.."சாரிமா! முருங்கை மரத்தைப் பற்றி நான் பேச மாட்டேன்ம்மா!"சொல்லிவிட்டு படிக்கத் தொடங்கினாள்..ஷிவானி வீட்டு முருங்கை மரம் மிகப் பெரியது. தோட்டத்தில் பெரும்பாலான இடத்தை ஆக்கிரமித்து இருந்தது. அந்த இரண்டு முருங்கை மரங்களும் இதுவரை காய்த்தது இல்லை. பூப்பதோடு சரி. 15 வருடத்தில் இதுவரை ஒரு காய் கூட காய்த்ததில்லை. ஆனால், கீரையின் ருசியோ தனி!.அடுத்த வருடத்தில் ஷிவானியின் அப்பா விபத்தில் இறந்து போக குடும்பம் வருமானத்திற்கு வழி இல்லாமல் திணறிப் போனது..ராஜேஸ்வரியும் படிக்காதவள். அடிக்கடி நோய்வாய்ப்பட்டு படுத்துக் கொள்வாள். அவளுக்கு மருந்து வாங்கவே அதிக பணம் தேவைப்படும். என்ன செய்வதென்று புரியவில்லை. குழம்பிப் போனாள் ராஜேஸ்வரி..அப்போதுதான் ஒரு யோசனை சொன்னாள் ஷிவானி.."அம்மா! நான் சொல்வதை கேளுங்கம்மா.."."ம்.. சொல்லு!"."நம்ம முருங்கை மரத்திலிருந்து கீரையை உடைத்து பக்கத்தில் இருக்கிற டவுன்ல விற்றால் என்ன?".ராஜேஸ்வரிக்கு நல்ல யோசனையாக இருந்தது.."நானும் தம்பியும் எடுத்துட்டுப் போய் வித்துட்டு வரேன்மா..".ராஜேஸ்வரி சம்மதித்தாள்..மறுநாள் முருங்கைக்கீரை உடைக்கப்பட்டது. 15 கட்டுகளாகக் கட்டிக்கொண்டு பழைய சைக்கிள் கேரியரில் வைத்து எடுத்துக்கொண்டு டவுனில் தெருத்தெருவாக விற்றுவிட்டு வந்தாள் ஷிவானியும் , அவள் தம்பியும்..சில்லறையாக 30 ரூபாயை எடுத்து வந்திருந்தாள்..அன்றைய செலவிற்கு அது போதுமானதாக இருந்தது..காலையில் 6 மணிக்கு கீரையை எடுத்து சென்று டவுனில் விற்பதும் விற்று முடித்ததும் வீட்டிற்கு வந்து பள்ளிக்கு கிளம்பி செல்வதும் வாடிக்கையாகிப் போனது..படிக்கவும் குடும்பத்தைக் காக்கவும் முருங்கை மரம் பலவாறு உதவியது..இந்த மரத்தைப் போய் வெட்டச் சொன்னோமே என நினைத்து பல இரவுகள் தூங்காமல் இருந்திருக்கிறாள் ஷிவானி..தன்வீட்டு முருங்கை மரங்களை பற்றி சொல்லி முடித்தாள் ஷிவானி..முதலிரவில் சொன்னதை நினைவில் வைத்துக் கொண்டு சொந்த இடம் வாங்கி, வீடு கட்டி முதல் வேலையாக முருங்கை மரத்தை தன் கையால் நட வைத்து,பிறந்த நாள் பரிசு கொடுத்து விட்டு அமைதியாக டிவி பார்த்துக் கொண்டிருந்த ராகவ், தனக்கு கணவனாக கிடைத்ததை எண்ணி பூரிப்புடன் அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டாள்.