“கண்ணனின் விளக்கம்” உண்மையின் உரைகல்.

“கண்ணனின் விளக்கம்” உண்மையின் உரைகல்.

Published on

உங்கள் குரல்

ணிரத்தினத்தின் "அலைபாயுதே" படம் மாதிரி இரண்டு தடவை படித்த பின்பே கதை புரிந்தது . இனி, எங்கள் வீட்டு "டோபி"யை
பார்க்கும் போது இந்த கதை தான் நினைவுக்கு வரும்.
– ஜானகி பரந்தாமன்,  கோவை

தூய்மையான தாமரை மலருடன் தியானத்தின் போது இருக்கும் நம் மனதை ஒப்பிட்டு அருளுரையில் கூறியிருப்பதை படிக்கும் போது உள்ளம் மலர்ச்சி அடைகிறது.
– வி.கலைமதி, நாகர்கோவில்

பத்தான பீஹார் மாடல் தலையங்கம், 'அர்த்த சாஸ்திர' தரத்தில் அமைந்திருந்தது சிறப்பு.

சாதிவாரியான கணக்கெடுப்பு நடந்தால் சாதிவாரியான கட்டமைப்பு மேலும் கூர்மை பெறும் என்பதை மிகச்சரியாக எச்சரித்து விளக்கியிருந்தது, கல்கியின் நடுநிலை நெறியை மீண்டும் நிரூபிக்கிற மாதிரி விளங்கியது. சபாஷ்!

ர்ச்சையான கருத்துக்கள் எத்தகைய விளைவுகளை உண்டு பண்ணும் என்பதைப் பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல், குறுகிய கண்ணோட்டத்தில் எழுதியும், பேசியும் வருகின்ற பா.ஜ.க. ஊடகப் பிரிவு பொறுப்பாளர்களை, ஆழ்ந்த அக்கறையில் விமர்சித்திருந்த ரமணின் பார்வை அக்மார்க் தரம்.
– வாசக நண்பன், நெல்லை குரலோன், பொட்டல்புதூர்

ற்போதே சிறிய ஜாதி கட்சிகள் பெரிய கட்சிகளிடம் பேரம் செய்கின்றனர். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடந்தால், தலையங்கத்தில்  சுட்டிக் காட்டியபடி ஜாதிக்கட்சிகள் கூர்மை பெற்று சமூக நீதியில்  நெஞ்சைப் பிளக்கும்.

பிறமத துவேஷம் இந்தியாவின் இறையாண்மையை பாதிப்பதுடன் இந்து மதத்திற்கே இன்னல்களை ஏற்படுத்தும். கட்டுரையாளரின் பார்வை படி சர்வதேச அளவில் இந்தியாவிற்கு வீழ்ச்சி ஏற்படும்.
– நா. குழந்தைவேலு ,சென்னை

ராசு பதில்கள் வாராவாரம் ஜொலிக்கிறது பிரதமர், ஜெயகாந்தன் நயந்தாரா, உதயநிதி என்ற எந்த கேள்வியானாலும் பளிச்சென்ற பதில்களில் எள்ளல், அறிவுறை,  எச்சரிக்கை , அனுபவம்  எல்லாம் வெளிப்படுகிறது. ஆசிரியர் சார்…  யார் இந்த தராசு… அவர் படத்தைப் போடுங்களேன்.
– பத்மினி கிருஷ்ணன், திருச்சி

சினிமா விமர்சனங்களில்  கடைசி வரி நச்.
– மலர்விழி இளங்கோ, மதுரை

'  "உத்தவ கீதை" பக்கத்தின் சாரம்சம் படித்ததும் ஒரு ஆன்மிக சொற்பொழிவாளர் கொடுத்த ஆன்மிக ரசம் பருகியது போல தெம்பும் உற்சாகமும் உண்டானது. "உண்மையான நண்பன் யார்?" என்பதற்கான "கண்ணனின் விளக்கம்" உண்மையின் உரைகல்.  பாராட்டுக்கள்.
– ராதிகா, மதுரை

"இந்திய ரூபாய் நோட்டுகளில் தாகூர், கலாம் படங்கள் வெளியிடப் போகிறார்களாமே?" என்று ஒரு வாசகர் கேட்ட கேள்விக்கு திருக்குறள் போல ஒரு வரியில் பதில் அளித்து உசந்து விட்டீர்கள்.  ரத்தின சுருக்கமான நெத்தியடியான பதில். நன்றி.
– பிரகதாநவநீதன், மதுரை

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com