“ஜீனியஸுக்கு அறிவைவிட அறியாமை தான் உதவும்”

“ஜீனியஸுக்கு அறிவைவிட அறியாமை தான் உதவும்”
Published on

ந்த ஆண்டு பத்ம விருதுகளுக்கான தகுதிகளில் "வயது 90+ இருக்க வேண்டும் என்று நிர்ணயித்து விட்டார்களோ" என்று கூட எண்ணத்தோன்றுகிறது. செளகார் ஜானகிக்கு அடுத்து தமிழ் நாட்டின் கிளாரினட் இசைக்கலைஞருக்கு இந்த ஆண்டு பத்மஶ்ரீ வழங்கப்படுகிறது.

கிளாரினெட்டிலுள்ள பொத்தான்களை (KEY) அகற்றியும் மாற்றியும் அமைத்ததால் மட்டும் அந்த இனிமை வந்துவிடாது. மூச்சுக்காற்றையும், கை விரல்களையும், நாவையும் இயக்கும் தனித்துவ ஆற்றலால் அந்த இனிமை இவருக்கு  வசமானது. பெரும்பாலும்  PLAIN NOTES இசைக்கவே பயன்பட்ட கிளாரினெட்டை கர்னாடக இசையின் தனித்துவமான கமகங்களை உதிர்த்து இசைத்துக் காட்டியபோது அமெரிக்கர்கள் எப்படி இது சாத்தியம் என  அதிசயித்துப்போனார்கள்.

"ஜீனியஸுக்கு அறிவைவிட அறியாமைதான் உதவும். எங்கள் ஊரில் நாங்கள் வாத்தியத் தேர்ச்சி பெறுவதுபோல கிளாரினெட்டை ஏகேசி கற்றிருந்தார் எனில்,  ஒரு ஜீனியஸ் கிடைத்திருக்க மாட்டார். வாத்தியத்தின் எல்லைகளில் 'அறிவு' அவரை நிறுத்தியிருக்கும். அவர் கற்ற வாய்ப்பாட்டும் நாகஸ்வரமும் அவருக்குச் சங்கீதத்தைக் காட்டியிருக்கின்றன. எவையெல்லாம் வாத்தியத்தில் வராதோ, அதையெல்லாம் வரவழைக்க வாத்தியத்தை என்ன செய்யலாம் என்பதை நோக்கி அறியாமைதான் செலுத்த முடியும். கிளாரினெட்டில் தவிர்க்க முடியாத சில விசைகளைத் தவிர மற்றதை நீக்கிவிட்டு, நாகஸ்வரத்தைப் போலவே துளைகளில் விரலடியாகவும், ஊதுகின்ற உத்தியைக் கைவரப்பெற்றும் கர்னாடக சங்கீத நுட்பங்களை முழுமையாக அவரால் கொண்டுவர முடிந்திருக்கிறது." இதைச்சொன்னது, ஒரு அமெரிக்க இசைப் பேராசிரியர்

"இந்த சாதனை எளிதில் வரவில்லை. ஒவ்வொரு ராகத்தையும் கிளாரினெட்டுக்கு ஏற்றபடி எப்படி அணுகுவது என்பதைக் கண்டடைவதற்குப் பல மணி நேரம் பயிற்சி செய்துள்ளேன். எந்த தொழிலையும் தேர்வு செய்யலாம். உயிரையும், ஆன்மாவையும், வஞ்சகமில்லாமல் அதில் வைத்தால் எதிலும் வெல்ல முடியும் என்று புரிந்து கொண்டேன்" எனச்சொல்லும் ஏகேசி, இந்த விருது பற்றி என்ன நினைக்கிறார்.

மத்திய அரசு எனக்கு இந்த 91வது வயதில் பத்மஸ்ரீ விருது அறிவித்து இருக்கிறது. மேலும் என் வாழ்நாளில் பல விருதுகளை பெற்றுள்ளேன். அந்த சூழ்நிலையில் சில சமயங்களில் 'நமக்கு உயரிய விருது கிடைக்கவில்லை' என்றும் வருத்தங்கள் இருந்தாலும், 'அதைப் பெரிதாக பொருட்படுத்தாமல் கடந்து செல்வேன்' என்றார். இந்நிலையில் இத்தனை ஆண்டுகாலம் கழித்து எனது 91வது வயதில் மத்திய அரசு எனக்கு  பத்மஸ்ரீ விருதை அளித்தது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் முன்னதாக இந்த விருது அறிவிக்கப்பட்டு இருந்தால் நான் பெற்ற விருதுகள் பத்தோடு, பதினொன்றாகத்தான் இருந்திருக்கும். ஆனால், இந்த கால சூழ்நிலையில் அறிவிப்பதால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.

ஓவியர் ஸ்ரீதர்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com