ஜோக்ஸ்

ஜோக்ஸ்

Published on

கணவன் : கடவுள்கிட்ட என்ன வேண்டிக்கிட்ட?

மனைவி : ஏழு பிறவியிலும், நீங்கதான் என் கணவரா அமையணும்னு வேண்டிகிட்டேன். நீங்க?

கணவன் : இது ஏழாவது பிறவியா இருக்கணும்னு வேண்டிகிட்டேன்."

–   ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை

"அப்பவெல்லாம் மக்கள் கையில் பணம் இருந்துச்சு… சாமியார்கள் கையில் திருவோடு இருந்துச்சு…"

"சரி… அதுக்கென்ன இப்ப..?"

"இப்பெல்லாம் சாமியார்கள் கையில் பணம் இருக்கு… மக்கள் கையில்தான் திருவோடு இருக்கு…"

– எம்.ராஜதிலகா, அரவக்குறிச்சிப்பட்டி

"அந்த பைனான்ஸ் கம்பெனிக்குப் பின்னால் ஒரு பாதை வச்சிருக்காங்களே, எதுக்கு?"

"அது ரன்வே!"

–   சி.ஆர்.ஹரிஹரன், ஆலுவா, கேரளா

"பொழுது போகலன்னு பேச வந்தார்…"

"சரி, என்ன ஆச்சு?"

"பொழுது  போய் நைட் வந்தாச்சு… இன்னும் அவர் எழுந்து போகிற மாதிரி தெரியல…"

–  ஏ.நாகராஜன், பம்மல்

போலீஸ் : "உங்க வீட்டுக்கு வந்த திருடனுக்கு நீங்களே ஏன் கத்தியைத் தீட்டிக்கொடுத்தீங்க ?"

வந்தவர் : "அடுத்தது  அவன்  பக்கத்து  வீட்டுக்குப்  போகப்  போறேன்னு  சொன்னான் சார்."

–   தீபிகா சாரதி, சென்னை

 "அந்தப் பத்திரிகையில் நடிகை நளினாஸ்ரீ பிக்னிக் போனதையெல்லாம் ஒரு பெரிய நியூஸ்னு போட்டிருக்காங்களே…?"

"பிக்னிக் போனதுக்காக அந்த நியூஸ் இல்லே… பிகினி ட்ரெஸ்ல போனதாலதான் அந்த நியூஸ் "

–   வி.ரேவதி, தஞ்சை

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com