முதல்வரின்  சரிவு என்பது சரியில்லை

முதல்வரின்  சரிவு என்பது சரியில்லை
Published on

நிமிர்ந்த   நன்னடை உடையவரும், ஆணுக்கு  நிகரானவருமான குந்தளா ஜெயராமனின்  துணிச்சல் மிக்கசெயல்பாட்டினை அழகாக படம் பிடித்துக்  காட்டியது.

ண்ணனின்  "இப்படியெல்லாம்கூட  கவிதை  செய்யமுடியுமா?" கட்டுரை.  ஒரு  ரயில்  பயணத்தில் தமிழின்  சுவை தென்றலாய்   மனதை  வருடியது மிக மிக அருமை.
– து.சேரன், ஆலங்குளம்

கொரோனா பெருந்தொற்று காலத்திலும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளோடு , நேரடி இணைய வழி பாரதி உலா நிகழ்ச்சிகள் நடத்திய, உரத்த சிந்தனை குழுவினருக்கும், பங்குபெற்ற இளைய தலைமுறையினருக்கும், இதனை கட்டுரையாக வெளியிட்ட கல்கி இதழுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
– ஸ்ரீகாந்த்,  திருச்சி 

ட்சிக் கட்டுப்பாட்டை மீறி தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளை  தன் கட்சியினர் பறித்துக் கொண்டதை முதல்வர் கண்டித்திருக்கும் விதம், வருத்தம் தெரிவித்திருப்பது அவருடைய அரசியல் முதிர்ச்சியை 'பளிச்'சிடுகிறது.
– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்

நாலந்தா பல்கலைக்கழகம் எரிக்கப்பட்டதை வரலாறாகப் படித்திருக்கிறேன். ஆனால், அதன் பின்னே இப்படி ஒரு பழிவாங்கும் படலம் இருந்ததை இந்தக் கதை மூலம்தான் அறிந்தேன்.
– பத்மினி வெங்கடேசன், சென்னை

போரும் அமைதியும் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் உக்ரைன் மருத்தவ  மாணவர்களைப்பற்றி இதுவரை அறியாத தகவல். இந்த மாணவர்களின் நிலை பரிதாபத்துக்குரியது.
– விஜய ராகவன், மதுரை

லையங்கத்தில் முதல்வரின்  சரிவு என்பது சரியில்லை. 'ஆர்வக் கோளாறு' என்று சொல்லலாம்  என்று புரிந்துகொள்ள கல்கியின் தலையங்கம் உதவும்.
– திருவரங்க வெங்கடேசன், பெங்களூரு

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com