மன நிறைவாகவே தொடர்கிறது தினமும்…

மன நிறைவாகவே தொடர்கிறது தினமும்…
Published on
முகநூல் பக்கம்

டீச்சர் உங்கள ரெம்பப் பிடிச்சிருக்கு எனக்கு… முத்தமிட்டுக் கொண்டாள் ரக்சிதா செல்லம்…

பிரம்மாண்டமான தனியார் பள்ளியில் L.K.G., U.K.G., படித்திருக்கிறாள் போலும்…

வந்த இரண்டு நாட்களில் இங்க விளையாட பார்க் இல்லையா, டைரி sign உண்டா, Home work என்ன, Project உண்டா என்று கேள்வி மேல் கேள்விகள் அவளிடம்…

சரி… சரி நாம கதை சொல்லலாம் என்றவுடன், நானே சொல்றேனே என்றாள்…

ஆனா ஒரு கண்டிசன்… நீங்களும் நடிக்கணும்… புலி, யானை போல என்று…ம்…ம்… தலையாட்டிக் கொண்டேன்…

தானாகவே பாத்திரங்களை உருவாக்கி கொண்டாள்… கங்காரு போல ஒருத்தன், கரடி போல ஒருத்தன் என எல்லாருக்கும் கதா பாத்திரங்கள்…

கலகலவென வகுப்பறைகள் மலரத் தொடங்க ஆரம்பித்துவிட்டன…

இந்த வருடம் அதிக மாணவர் சேர்க்கை… ஒவ்வொரு வகுப்பிலும் 30க்கும் குறையாமல் பிள்ளைகள்…

சுத்துப்பட்டி 18 கிராமங்களில் இருந்தும் பிள்ளைகள் வர்றாங்க…

முகிலா… எஸ் டீச்சர்…

அபிநயா… எஸ் டீச்சர்…

சித்தார்த்…. கௌதம் கார்த்திக் என அட்டன்டன்ஸ்ல் மாடர்ன் பெயர்கள்….

165 வரை பிள்ளைகள்… 5 ஆசிரியர் பணியிடம் இப்போது கூடுதல் ஒரு ஆசிரியர் பணியிட உருவாக்கம்…

மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது… குழந்தைகள் வரவால்..

குழந்தைகளை சுழற்சி முறைப்படி வரச் சொல்லியாச்சு…

நான் படிச்ச School லல்லாம் மிஸ் மட்டும்தான் பேசுவாங்க. keep quietனு சொல்லிட்டே இருப்பாங்க… இங்க எல்லாருமே முன்னாடி வந்து பேசலாமா… கேட்கிறாள் குழந்தை…

இப்போது ரக்சிதாவிற்கு வகுப்புகள் பிடித்திருக்கிறது…

கமலேஷ் பாண்டி மட்டும் அம்மாட்ட போறேன்… என அவ்வப்போது அழுகிறான்…

கண்ணனோ… டீச்சர் என்ன எழுதச் சொல்லாத…சொன்னா வீட்டுக்குப் போயிடுவேன் என மிரட்டுகிறான்.

பவித்ராவோ எப்ப மணி அடிப்பீங்க…சோறு வேணும் என்கிறாள்…

தொடக்கப் பள்ளி குழந்தைகளை உக்கார வைப்பதென்பதே சவால்தான்…

ஆடல், பாடல், கதை வழியாக கற்றலை மறைமுகமாக உள்ளே நுழைத்து விட முடிகிறது…

பத்து வால் எலி கதையின் மூலம் எண்களையும்,

க மேல புள்ளி வைச்சா க்…க்கு

மேல பறக்குது கொக்கு..கொக்கு

ங மேல புள்ளி வைச்சா ங்..ங்..

கடலில கிடைப்பது சங்கு..சங்கு..

இப்படியாக தமிழ் எழுத்துகளும் அறிமுகமாகின்றன…

விமலுக்கு மட்டும் போரடிச்சிருக்கும் போல… சுவாரசியமாக பாடம் நடத்திக் கொண்டு இருந்த என் பக்கம் வந்து இந்த சேலை நல்லாருக்கு டீச்சர்னு சொல்லவும்… அப்படியா டான்னு சிரிக்கப் போனவளை சும்மா சொன்னேனேனு ஓடறான்… அடேய்… விமலு…

YouTube சேனல் ஒன்று நடத்தும் குழந்தைகள் தின விழாவிற்கு ஐந்தாம் வகுப்பு சஞ்சனா ராஜேஷ் குழந்தையை மாறுவேடப் போட்டிக்கு தயார் செஞ்சாச்சு…

Drawing சூப்பரா பண்ற 7th படிக்கற ராஜேஷ்க்கு Smiley Syed 800 ரூபா வரை வரையற பொருட்கள், நோட் வாங்கி கொடுத்திருந்தான்…நன்றி மா…

சாயங்காலம் வெளியே ஆட்டோ, பைக் என வாகனங்கள் குழந்தைகளை கூப்பிட வந்து நிற்கின்றன…

ஊ.ஒ.தொ.பள்ளி, க.மடத்துப்பட்டி என்று மீனா அனில்குமார் அக்கா வாங்கி வைத்த போர்டு கம்பீரமாக நிற்கிறது.

இன்னும் இருக்கின்றன… கொண்டாட்டங்கள்…

Bharathi Santhiya முகநூல் பக்கத்திலிருந்து…

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com