அதென்ன பெயர் 3.6.9 ?

அதென்ன பெயர் 3.6.9 ?
Published on

நேர்காணல்

ஜான்சன்

21  வருடங்களுக்கு பிறகு திரைக்கதை மன்னன் பாக்யராஜ் நாயகனாக நடித்துள்ள திரைப்படம்  '3.6.9'. உலக கின்னஸ் சாதனை படைக்கும் விதமாக,  நேரடியாக 81 நிமிடங்களில் படமாக்கப்பட்டுள்ளது   இது குறித்து  இயக்குநர் சிவ். மாதவ்விடம் பேசியபோது…

"சினிமாவுக்கு வரவேண்டும்" என முடிவெடுத்தபோது,  "சினிமாவில் நாம் என்ன செய்யப்போகிறோம்" என்று நினைத்தேன்.  ஏனெனில் இங்கு இருப்பவர்கள் எல்லாம் ஜாம்பவான்கள்.  அவர்களை மிஞ்ச முடியாது. ஆனால், அவர்கள் செய்யாத விஷயத்தை முயற்சி செய்யலாம் என நினைத்தேன். அதேபோல், சிந்தனையில் தயாரிப்பாளர் சரவணன் இருந்ததால் அவருடன் பயணிக்க முடிந்தது. நான் தனித்துவமாக இருக்க வேண்டுமென்பதில் தெளிவாக இருந்தேன். எனக்கு சினிமாவில் உருவம் கொடுத்து உயிர் தந்தவர் பாக்யராஜ் சார். அவரிடம் முழு கதையையும் விவாதித்தேன். அவர் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். அவர் நடித்து கொடுத்துவிட்டார். என் தம்பி தான் ஒளிப்பதிவாளர். அவனிடம் முதலில் இந்த ஐடியாவை சொல்லி, செய்ய முடியுமா?  என்று கேட்டேன், முடியும் என்றான், அதனால் தான் இந்தப்படம் நடந்தது. என்னை புரிந்து கொண்டு என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி. நான் உழைத்து தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன், படம் பார்க்கும் போது உங்களுக்கு அது தெரியும். 3.6.9. படம் நிச்சியம்  உங்களுக்கு பிடிக்கும்.

அதென்ன பெயர் 3. 6. 9 ?

பரபரப்பான ஒரு சயின்ஸ் பிக் ஷன் திரில்லராக 3.6.9′ எந்த விஷயத்தை எடுத்து கொண்டாலும் அது  '3.6.9' நம்பரில் டங்கிவிடும்.  அப்படியான பவர் அந்த நம்பருக்கு உண்டு எப்படி என்கிறீர்களா? படம் பாருங்கள் புரியும்.

படத்தில் என்ன ஸ்பெஷல் ?

எங்களுக்கு ஒரு ஐடியாவாக தோன்றியதை செய்யலாம் என முடிவெடுத்து திட்டமிட்டோம்.  பாக்யராஜ் சாரிடம் சொன்ன போது அவர் வழிகாட்டினார்,  எல்லாம் நல்லபடியாக நடந்தது.

இப்படம்.  24 கேமராக்களில் ஒளிப்பதிவு செய்ய, 450 தொழில் நுட்ப கலைஞர்கள் பங்கேற்க, 75 க்குமேற்பட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ளது.

இதில் நடித்திருக்கும் பாக்கியராஜ் இந்தப் படத்தைப் பெரிதும் பாராட்டுகிறார். அவர் சொன்னது…

நான் இதுவரை கிறிஸ்தவன் கெட்டப் போட்டதில்லை. இந்தப்படம் தான் முதல் முறை. இப்படம் சயின்ஸ் பிக் ஷன் என்றார்கள். இவர்கள் திட்டமிட்டது எல்லாம் பார்க்க பிரமிப்பாக இருந்தது. 81 நிமிடம்தான் எடுப்பார்கள் என்பதால் 3 நாள் ரிகர்சல் செய்தாரகள். யாராவது சொதப்பினால் என்ன செய்வது என்று பயமாக இருந்தது. ஆனால் இவர்கள் ஒரு மாதம் ரிகர்சல் செய்து வந்திருந்தார்கள். மிக கச்சிதமாக திட்டமிட்டு எடுத்தார்கள். இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.  அனைவரும் சிறப்பாக நடித்தனர்.

இந்தப்படம் குறித்து நடிகர், தயாரிப்பாளர், சித்ரா லட்சுமணனிடம் பேசியபோது…

இன்றைய திரைப்பட உலகம் வெவ்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. ஒரு பக்கம் 1000 கோடியில் படமெடுக்கிறார்கள்,  பாக்யராஜ் சிஷ்யன் பார்த்திபன் ஒரு ஷாட்டில் படமெடுத்தார். இங்கே இவர்கள் புதிய சாதனை படைத்துள்ளார்கள். ஒரு தயாரிப்பாளராக இப்படத்தை எடுப்பது எவ்வளவு கடினம் என்பது எனக்கு தெரியும். இவர்களின் தைரியமும் திட்டமிடலும் கவர்கிறது. இயக்குநரின் தெளிவு மிகச்சிறப்பாக இருக்கிறது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com