
"தலைவரை அவரோட மனைவி திட்டறாங்களே, ஏன்?"
"மகளிரணித் தலைவியின் பேரைச் சொல்லி மனைவியைக்
கூப்பிட்டாராம்!"
– சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா
"உங்களுக்கு முன்னாடியே
உங்க பையன் சிகரெட் பிடிக்கிறானாமே?"
"யார் சொன்னது? அவன் பிறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து நான்
சிகரெட் பிடிக்கிறேனே."
– தீபிகா சாரதி, சென்னை
"அந்தப் பேஷன்டுக்கு ஏதாவது முன்னேற்றம் தெரியுதா சிஸ்டர்?"
"பரவாயில்லை டாக்டர், இப்ப என்கிட்ட முகம் கொடுத்துப் பேச ஆரம்பிச்சிட்டாரு!"
– சி. ஆர். ஹரிஹரன்,
ஆலுவா, கேரளா
"என் புருசன், எள்ளுன்னா எண்ணெயா நிப்பாருடீ!"
"ஏன்…காது கேட்காதா அவருக்கு?"
– வி.ரேவதி, தஞ்சை
"தலைவரே! தினமும் கட்சியிலிருந்து இருபது, இருபது பேரையா நீக்குறீங்களே, ஏன்?"
"நம்ம கட்சியிலும் நிறைய தொண்டர்கள் இருக்காங்கன்னு காட்டத்தான்யா!"
– ச.மணிவண்ணன், சங்கராபுரம்
"என்னங்க மாசத்துல ஒருநாள் விளக்கெண்ணெய் குடிச்சா உடம்புக்கு நல்லதாமே."
"அதான் தினமும் நீ போடுற
காபியைக் குடிக்கிறேனே… அது போறாதாக்கும்?"
– தீபிகா சாரதி, சென்னை