இப்போது நாம், உலகின் நம்பர் 1

இப்போது நாம், உலகின் நம்பர் 1
Published on

முகநூல் பக்கம்

டிஜிட்டல் இந்தியாவா..? ஹா ஹா ஹா.. என்று கண்டமேனிக்கு சிரித்த சுப்பனெல்லாம், ஓப்போ ஃபோனின் யூபிஐ மூலம் வாழைப்பழம் வாங்கிக்கொண்டிருப்பதை, மத்திய அரசு ஒரு சில வருஷங்களிலேயே சாத்தியமாக்கி இருக்கிறது.

இப்படியான disruptive reforms, சமூக, கலாசார, பொருளாதார மாற்றங்களை ஒருசேர மாற்றிவிட்டதற்கு மத்திய அரசின் உந்துதலால், வரையப்பட்ட UPI platform. அதோடு RTGS, NEFT, IMPS, என்று VISA, Mastercard என்று தெறிக்கும் பரிவர்த்தனைகள், சிலகாலமாய் RuPayயிலும் நடக்க டாலர்கள் மிச்சமாகிறது. டிஜிட்டல் இந்தியாவின் ஒரு சிறு பகுதி இது.

மணியார்டர்கள், செக்குகள், ட்ராப்டுகள் மொத்தமாய் வழக்கொழியும் நாள் மிக மிக அருகில். சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து சேர்த்து நடத்தும் ட்ரான்ஸாக்‌ஷன்களின் அளவை நாம் எப்போதோ மீறி வந்துவிட்டோம். இது தொடக்கம் அவ்வளவே, இப்போதே நாம், உலகின் நம்பர் 1 இல் இருக்கிறோம். இனிதான் முழு கச்சேரியே.

மக்கள், மிகவும் சாமர்த்தியமாய், ஊழல் பணத்தை, இரண்டாம் கணக்குகளின் லாபங்களை இப்போது க்ரிப்டோவில் சவாரி செய்ய வைக்கிறார்கள். ஆனால், இதற்குமான ஆப்பு விரைவில் வரும். வருகிறது.

பிரகாஷ் ராமஸ்வாமி முகநூல் பக்கத்திலிருந்து…

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com