இந்த வாரம் இவர்

இந்த வாரம் இவர்
Published on

மிழ்நாடு அரசு ஒவ்வொரு  ஆண்டும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டுவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் "டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது" வழங்கி கௌரவிக்கிறது.

2021-ஆம் ஆண்டிற்கான "டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது" சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.சந்துருவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதியரசர் கே.சந்துரு, தன்னுடைய பணிக்காலத்தில் 96,000 வழக்குகளுக்குத் தீர்வு கண்டு சாதனை படைத்தவர். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்குகளை வழக்காடும் வழக்கறிஞராகப் பணியாற்றி ஏழை, எளிய மக்கள் மற்றும் தொழிலாளர்களின் குரலாய் உயர்நீதிமன்றத்தில் ஒலித்து, மாபெரும் சாதனை படைத்தவர்.

இவர் அளித்த பல்வேறு தீர்ப்புகள் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன் காப்பதாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், சாதிய வேறுபாடுகள், ஒடுக்கப்பட்டோர், பட்டியலின மக்கள் மற்றும் பழங்குடியினர் உரிமை மறுப்பு ஆகியவற்றிற்கு எதிரான இவரது தீர்ப்புகளால் மக்களிடையே மிகுந்த நன்மதிப்பைப் பெற்றார். "அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்", என் வாழ்க்கை கவனி, தமிழ்நாட்டில் ஒரு பெண் நீதிமன்றத்தை அணுகும்போது, ஆகிய நூல்களை எழுதியுள்ள இவர், தமிழகம் முழுவதும் பயணம் செய்து, விளிம்பு நிலை மக்களுடன் வாழ்ந்து, தமிழ்ச் சமூகம் மற்றும் அதன் பண்பாட்டின் பன்முகத்தன்மையைப் புரிந்துக்கொண்டு செயல்பட்டவர்.

நீண்ட நாள் கல்கி வாசகர். ஓய்வுபெற்றவுடன் தன் நீதிமன்ற அனுபவங்களை கல்கி வாசகர்களுடன் தொடராகப் பகிர்ந்து கொண்டவர்.

ஓவியர் ஸ்ரீதர்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com