கரும்பின் எந்தப் பகுதி இனிப்பு…என்று எப்படிச் சொல்ல முடியும்.

கரும்பின் எந்தப் பகுதி இனிப்பு…என்று  எப்படிச் சொல்ல முடியும்.
Published on

நூல் விமர்சனம்

– டி.வி. ராதாகிருஷ்ணன்

இலக்கிய முத்துகள் 20

மீப காலமாக நான் எந்தவொரு நூலையும் இடைவிடாமல் முழுதுமாக படிக்கவில்லை. இந்தக் குறையை நண்பர் மருத்துவர் ஜெ.பாஸ்கரின் சமீபத்திய வெளியீடான "இலக்கிய முத்துக்கள் 20" என்ற நூல் தீர்த்து வைத்தது. புத்தகத்தைக் கையில் எடுத்து ஒரே மூச்சில் படித்து முடித்தேன். அவ்வளவு சுவாரஸ்யம்.

இருபது முத்தான எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்த நூல்.
தமிழ்த் தாத்தா உ.வே.சா. முதல் பாக்கியம் ராமசாமி வரையிலான
எழுத்தாளர்களின் படைப்புகளை வாசித்து அந்தத் தாக்கத்தில் இந்நூல்
எழுதப்பட்டுள்ளது. இதற்காக பாஸ்கரனின் உழைப்பு மலைக்க வைக்கிறது.

இந்நூலில் சொல்லப்பட்டுள்ள 20 எழுத்தாளர்கள் பற்றி சொல்ல
நினைத்தாலும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல
முத்துக்களில் இருவரைப் பற்றிக் குறிப்பிட்டாலே நூலின் தரத்தை புரிந்து
கொள்ள முடியும் என்பதால் இருவர் பற்றி மட்டும்  குறிப்பிடுகிறேன்.

கி.ராஜநாராயணன் குறித்து எழுதுகையில், "நான் மழைக்காக பள்ளிக்கூடம்
ஒதுங்கினேன். ஒதுங்கியவன் பள்ளிக் கூடத்தைப் பார்க்காமல் மழையையேப் பார்த்துக் கொண்டிருந்தேன்" என அவர் சொன்னதைக் குறிப்பிட்ட நூலாசிரியர் அடுத்து அவர் தனது படைப்புகளால் பாண்டிச்சேரி
பல்கலைக்கழகத்தில் சிறப்பு பேராசிரியராகப் பணியாற்றியவர் என்பதையும் குறிப்பிடுகிறார்.

"சாதிகள் ஒழிய" என்ற அவரது கட்டுரையில்… "ஜாதி" என்றுதான் எழுத
நினைத்தேன். ஒழிய வேண்டிய "களுதைக்கு" கம்பீரம் என்ன வேண்டிக் கிடக்கு என்று நினைத்து "சாதி" என்றே எழுதி விட்டேன்.. என கி.ரா.வின் வரிகளையும் குறிப்பிடுகிறார் நூலில் ஆசிரியர்.

ந.பிச்சமூர்த்தி பற்றி சொல்கையில்… பாரதிக்குப் பிறகு புதுக்கவிதையைப்
பரப்பியவர் கு.ப.ரா.வும்..ந.பிச்சமூர்த்தியும் என்ற தகவலையும் அவர்
வாழும் காலத்திலேயே மதுரைப் பல்கலைக் கழகத்தில் முதுநிலை பாடத்தில் இவரது புதுக்கவிதைத் தொகுதி இடம் பெற்றது என்ற தகவலையும் தருகிறார். ந.பிச்சமூர்த்தி புதுக்கவிதையின் தந்தை என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

சுருங்கச் சொன்னால்… கரும்பின் எந்தப் பகுதி இனிப்பு…என்று சொல்ல
முடியும். அடி முதல் நுனி வரை இனிக்கிறது இந்நூலும்.

எழுத்தாளர் இரா.முருகன் முகவுரையில், பத்திரிகையாளர் கிரிஜா ராகவனின் வாழ்த்துரையில் நூல் வெளியாகியுள்ளது.

தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் தவறாமல் படித்து பயன்பெற வேண்டும் என்பது என்னைப் போன்றோரின் அவா.

இந்நுல் உ.வே.சா. அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது சிறப்பு.

இந்நூலை படித்து முடித்ததும் நுலாசிரியரைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

ஆசிரியர் – ஜெ.பாஸ்கரன்,
வெளியீடு – அர்ஜூன் ராம் பப்லிகேஷன்ஸ்,
சென்னை – 600 083

அலைபேசி – 9841057047
184 பக்கங்கள்
விலை ரூ.200/-

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com