கொஞ்சம் சிரிங்க பாஸ்

கொஞ்சம் சிரிங்க பாஸ்
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

வாசகர் ஜோக்ஸ்                                                   ஓவியம்: ரஜினி

   "தலைவர் உண்ணாவிரத மேடைக்குப் பின்னாடி போய், பிரியாணியை ஒரு கட்டு கட்டிட்டார்னு எதை வெச்சு சொல்றீங்க…?"

"ஜூஸுக்கு பதிலா, 'அஜீரண கசாயம்' சாப்பிட்டு உண்ணாவிரதத்தை முடிக்கிறாரு பாருங்க…"

– ஆர். பிரசன்னா, திருச்சி

"டாக்டர் பட்டம் கிடைத்ததும், தலைவர் டாக்டர் மாதிரியே நடந்துக்க ஆரம்பிச்சிட்டாரு!"

"எப்படி …?"

"அவரோட பெண் காரியதரிசியை நர்ஸ் யூனிஃபார்ம்  போட்டுக்கச் சொல்லிட்டாரு!"

– வி.ரேவதி, தஞ்சை

"அந்தப் புதுப்படம் ஓடற தியேட்டர்ல இண்டர்வலுக்கு மேல உட்கார முடியலை."

"ஏன் படம் அவ்வளவு போரா?"

"நீங்க வேற… தியேட்டர் அவ்வளவு கப்பு."

– தீபிகா சாரதி, சென்னை

"நீங்க வாழ்க்கையில இவ்வளவு கட்டுப்பாட்டோட இருக்கறதுக்குக் காரணம் உங்க மனைவிதானாமே?"

"அதுமட்டுமில்லை… இப்ப நான் கட்டுப்போட்டு இருக்கறதுக்கும் அவதான் காரணம்…"

– ஆர். பிரசன்னா, திருச்சி

"என் பக்கத்து வீட்டுக்காரிக்கு ரசிகர்கள் நிறையப் பேர் இருக்காங்க!"

"ஏன், ஏதாச்சும் படத்துல நடிச்சிருக்காங்களா?"

"இல்ல… இன்ஸ்டாகிராம்ல தினமும் ஆடிப்பாடி வீடியோ போடுவா!"

– இரா. அருண்குமார்,  புதுச்சேரி

"எனக்குப் பொய் சொல்பவர்களைக் கண்டாலே பிடிக்காது புலவரே?"

"பிறகு எதுக்கு மன்னா அரச சபையில் உங்களைப் புகழ்ந்து பாடச் சொல்கிறீர்கள்?"

– சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com