சுப்ர.பாலன்.கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள் கவர்ந்திட மாட்டாவோ?-அட.மண்ணில் தெரியுது வானம்,அதுநம் வசப்பட லாகாதோ?.எண்ணி யெண்ணிப் பல நாளு முயன்றிங் கிறுதியிற் சோர்வோமோ?.என்றான் மகா கவி பாரதி..அந்த வானத்தைதான் வசப்படுத்த பல முயற்சி செய்து கொண்டிருந்தனர். விண்வெளியல் விஞ்ஞானிகள். ஆழப் பிரபஞ்சம் கைக்கெட்டப்போகிறது..ஹான்ஸ் லிப்பர்ஷே என்கிற ஜெர்மன் – டச்சுக்காரரை எத்தனைபேர் அறிந்திருப்பார்கள்? 1570 – 1619 இல் வாழ்ந்த இந்தப் பேர்வழி ஒரு சாதாரணக் கண்ணாடிக்கடைக்காரர். உருப்பெருக்கிக் கண்ணாடிகளை வைத்துத் தொலைநோக்கி தயாரிக்கும் காப்புரிமைக்காக இவர்தான் முதலில் விண்ணப்பித்தார் என்பார்கள். ஆனால், அவரோடு சமகாலத்தில் வாழ்ந்த கலீலியோ கலீலிதான் (1564 – 1642) 1609 ஆம் ஆண்டில் முதல் தொலைநோக்கியை வெற்றிகரமாக வடிவமைத்து வெனிஸ் நகரில் காட்சிப்படுத்திப் பெயர் தட்டிக்கொண்டார்!.இந்தத் தொலைநோக்கிதான் பல அவதாரங்கள் எடுத்து மண்ணிலிருந்தும் விண்ணிலிருந்தும் பிரபஞ்சத்தை ஆராய்ந்து கொண்டிருந்தது. அதன் தொடர் விளைவாக இன்றைக்கு ஆழப் பிரபஞ்சமே நாம் தொட்டுவிடும் தொலைவில் வந்துவிட்டது என்றால் மிகையில்லை..பூமியிலிருந்து 1.5 மில்லியன் கி.மீ. தொலைவில் 'எல்.2' புள்ளி என்று வழங்கப்படுகிற இரண்டாம் 'லாக்ரேஞ்ச்' பகுதியில் அமைந்த சுற்றுப்பாதையில் சூரியனுக்கு முதுகைக் காட்டியவாறு வலம் வந்துக்கொண்டிருக்கிறது 'ஜேம்ஸ் வெப்' என்ற ராட்சத தொலை நோக்கி!.ஒளி என்பது கடந்த காலத்தை நமக்குக் காட்டும் கண்ணாடி. நாம் தலையை நிமிர்த்திப் பார்த்தால் தென்படும் சூரியன் என்பது உண்மையில் சூரியன் இல்லை. எட்டு நிமிடங்களுக்கு முன்பு சூரியனிடம் இருந்து கிளம்பிய ஒளிதான் இப்போது நமக்குத் தெரிகிறது. நாம் காணும் நிலவு கூட ஒன்றேகால் நொடிகளுக்கு முன்பு நிலவிடம் இருந்து கிளம்பிய ஒளிதான். சூரியக் குடும்பத்திலேயே இப்படி எனில் தொலைதூர கிரகங்கள், நட்சத்திரங்கள், அண்டங்கள் எப்படி இருக்கும். அவற்றின் ஒளி கிளம்பி நம்மை அடைவதற்கே பல ஆண்டுகள் பிடிக்கின்றன. இதனால்தான் விண்வெளியில் தூரங்களை மீட்டர், கிலோ மீட்டர் என்று கணக்கிடுவதில்லை. ஒளி ஆண்டுகள் என்று சொல்கிறார்கள்..ஆயிரம் இரண்டாயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள பிரபஞ்ச வெளியின் அடி ஆழத்தில் பிறப்பெடுக்கும் நட்சத்திர, காலக்ஸி, ஒளிப்புதர்களைக் கழுகுப் பார்வையாகக் கூர்ந்து நோக்கிப் படு துல்லியமாகப் படப்பதிவு செய்து அனுப்பிக் கொண்டிருக்கிறது!."ஒரு நட்சத்திரம் ஜனனமாகும் காட்சி" என்று சொல்லி பிரமிப்பில் ஆழ்த்துகிறார்கள். 'இன்று புதிதாய்ப் பிறந்தேன்!' என்று அவை சொல்கிற மாதிரி!.ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்கள் செலவிட்டு சென்ற 2021 டிசம்பர் 25 இல் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட இந்த விண்வெளித் தொலைநோக்கியின் கட்டுமானப் பொருட்கள் மேலே சொன்ன எல்.2 வட்டப்பாதையைச் சென்றடைய ஒருமாத காலம் ஆனது. கட்டுமானப் பொருட்களை ஒழுங்காக்கிப் பதினெட்டுப் பொன்முலாமிட்ட பிரதிபலிப்புக் கண்ணாடித் தகடுகளை இருக்கவேண்டிய இடத்தில் துல்லியமாக இடம்பெறச்செய்து முடிக்க மேலும் ஐந்து மாதங்களாயின..நாஸாவுடன் ஐரோப்பிய விண்வெளி நிறுவனமும், கனடாவின் விண்வெளி நிறுவனமும் கூட்டாக இணைந்து நிகழ்த்தியுள்ள சாதனை இது. ஐரோப்பிய நிறுவனம் 700 மில்லியன் யூரோ வரும், கனடா நிறுவனம் 200 மில்லியன் டாலரும் செலவிடுகின்றன..இந்த விண்வெளித் தொலைநோக்கி இருபது ஆண்டுகளுக்குக் குறையாமல் தனக்குரிய பாதையில் வலம் வந்துகொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டமாக ஆழப்பிரபஞ்சத்தின் (deep space) குறிப்பிட்ட ஐந்து பகுதிகளை மட்டும் ஊடுருவிப் பார்க்கக் கட்டளையிடப்பட்டிருக்கிறது. அவை கரீனா நெபுலா, ஸ்டீவன்ஸ் க்விண்டெட், தென்பகுதி ரிங் நெபுலா, வாஸ்ப் – 96 பி, ஸ்டார்ஸ் 0723 ஆகியவை!.முதன்முதலாக, பிரபஞ்ச வரலாற்றிலேயே என்றுகூடச் சொல்லலாம். ஆழப் பிரபஞ்சத்தின் ஒரு சிறிய துணுக்குப் பகுதியை, அது 13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அதே நிலையில் காணக் கொடுத்து வைத்திருப்பது என்பது நிகழ்ந்திருக்கிறது. தொழில்நுட்பப் பேராற்றல் என்னும் 'இறைவ'னுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்!.1150 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள WASP.96- b என்று அடையாளப்படுத்தப் பட்டுள்ள அயல் நிலத்தில் தண்ணீர்க் கூறுகள் இருப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள்..நம்முடைய சூரியனைப் போல் பிரபஞ்ச வெளியில் பலகோடி நூறாயிரம் சூரியன்கள் உள்ளன. அவற்றை நம் பூமி போன்ற கோள்கள் சுற்றிவந்து கொண்டிருக்கின்றன. இவற்றை அயல்நிலங்கள் என்ற பொருள்பட exo- planets என்று குறிப்பிடுகிறார்கள். 5000 அயல் பூமிகளை இப்படி அடையாளம் கண்டிருக்கிறார்கள். இவை அனைத்திலும் பூமியில் உள்ளதுபோல் உயிரினங்கள் வாழத்தக்க சூழல் நிலவுகிறதா என்பதை அறிந்து கொள்வதில் சற்றேறக்குறைய எழுபது ஆண்டுகளாக அதிக ஆர்வம் உண்டாகிவிட்டிருக்கிறது..பறக்கும் தட்டுக்கள், ஏலியன்கள் என்கிற பாமரத்தனமான கற்பனை மயக்கங்களுடன் கார்ல் ஸாகன், ஆர்தர் ஸி. க்ளார்க், அலாஸ்டெயர் ரேய்னால்ட்ஸ் போன்றவர்களின் அறிவியல் புனைகதைகளும், 'க்ளோஸ் என்கௌண்டர்ஸ் ஆஃப் த கர்ட் கைண்ட்' போன்ற பல பத்துத் திரைப்படங்களும்கூட விண்வெளி அறிவியலில் மிகுந்த ஆர்வத்தைத் தூண்டிவிட்டன..செவ்வாயில் குடியேறலாமா, சந்திரனில் முகாம் போடலாமா, வெள்ளிக்கு ஒரு நடை போய் எட்டிப் பார்த்துவரலாமா… என்கிற ஆய்வுகள் ஒருபுறம். எங்கோ தறிகெட்டு அலைந்துகொண்டிருக்கிற குறுங்கோள்களிலிருந்து மண் சுரண்டிவருகிற முயற்சிகள் ஒருபுறம்..எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு இப்போது 'ஸ்டார் வால்யூ'வில் இடம்பிடித்திருப்பது இந்த 'ஜேம்ஸ் வெப்' தொலை நோக்கிதான். பல பத்தாண்டுகளுக்கு முன்பே 'ஹப்பிள்' விண்வெளித் தொலைநோக்கியை அனுப்பி பூமியைச் சுற்றிவரச் செய்தார்கள். 1990 மே மாதம் முதல் அது சீராக இயங்கிக் கொண்டிருக்கிறது. பூமித் தரைக்கு மேலே 547 கி.மீ. உயரச் சுற்றுப்பாதைதான் அதற்குக் கிடைத்தது. உத்தேசமாக இது பூமியை ஒருமுறை வலம்வர 95 நிமிடங்கள் ஆகின்றன..ஆனால், 1 .5 மில்லியன் கி.மீ. தொலைவில் உள்ள சுற்றுப்பாதையில் 'ஜேம்ஸ் வெப்' சூரியனையே சுற்றிவந்து கொண்டிருக்கிறது. ஒரு முறை இது அப்படிச் சுற்றிவர ஆறுமாதங்கள் ஆகும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். பதினெட்டுக் கண்ணாடிகள் அமைப்பிலான தொலைநோக்கி மட்டும் சூரியனுக்கு எதிர்ப்புறமாக ஆழப் பிரபஞ்சத்தை மட்டுமே கவனித்துக்கொண்டிருக்கும். எந்த ஒரு கட்டத்திலும் பூமியின் நிழலோ, சந்திரனின் நிழலோ இந்தத் தொலைநோக்கியின்மீது படிய வாய்ப்பில்லாத முறையில் இதை வடிவமைத்திருக்கிறார்கள்!.விண்வெளியிலிருந்து பேரண்டத்தை ஆராய வலிமையான தொலை நோக்கி மட்டும் இருந்தால் போதாது. அதன் பணியைச் சரியாக செய்ய அது மிகச்சரியான இடத்தில் நிறுத்தப்பட வேண்டும். இந்த ஜேம்ஸ் வெப் நிறுத்தப்பட்டுள்ள சுற்றுப்பாதை அமைந்துள்ள 'எல்.2 புள்ளி' என்பது நம் பூமியும் சூரியனும் ஒன்றையொன்று ஈர்த்துக்கொள்கிற மையப் பகுதி இரண்டு சம வலிமை கொண்ட டீம்கள் கயிறு இழுக்கும் 'டக் ஆஃப் வார்' போட்டிக் கயிற்றின் மைய முடிச்சு மாதிரி என்று வைத்துக் கொள்ளலாமா?.சென்ற மாதத்தின் பின் பாதியில் பொன் முலாமிட்ட பதினெட்டுப் பிரதிபலிப்புக் கண்ணாடிகள் சீராகப் பதியப்பட்ட உடன் சோதனை முயற்சியாக இந்த விண்வெளித் தொலை நோக்கி அனுப்பிய சில படங்களே மூக்கில் விரல்பதிய வைத்தன. இந்த மாதம் 12ஆம் நாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முன்னிலையில் முதன்முதலாக அற்புதப் பதிவுகளை முறைப்படி வெளியிட்டார்கள். "பெரு வெடிப்பு" என்று சொல்லப்படுகிற 'பிக் பாங்க்' விளைவுக்கும் முந்தைய பிரபஞ்சத் தோற்றகாலத்துக்கே நம்மைக் கொண்டுபோய் நிறுத்திய காட்சிகள் அவை. "இவையெல்லாம் சாத்தியம்" என்று நூறு ஆண்டுகளுக்கு முன்னால் யாரும் கனவுகூடக் கண்டிருக்கமாட்டார்கள்!.அடுத்தடுத்த முயற்சிகளில் பரபரக்கிறது ஜேம்ஸ் வெப். வியாழன் கோளின் வளையங்கள், நிலாக்கள், சீறிவரும் குறுங்கோள்கள் என்று கூர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறது. முன்பே புள்ளி வைத்த ஐந்து பகுதிகளைக் தவிர 39 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள பூமி அளவிலான அயல்நிலம் TRAPPIST – le ஐயும் கழுகுப் பார்வையில் அளக்கப் போகிறதாம்!.உலகப்பந்தே போர்வெறிக் கூச்சலிலும் நோயச்ச மிரட்சியிலும் திணறிக்கொண்டிருக்கும் நேரத்தில் வெள்ளை மாளிகையில் ஜோ பையனும் கமலா ஹாரிஸும் இந்த அறிமுக நிகழ்ச்சியில் பங்கு கொண்டது பெரிதும் பாராட்டப்படவேண்டியது..முதல் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா வானத்தில் வலம் வந்தபோது அத்தனை பரபரப்புக்களுக்கு இடையிலும் தரையிலிருந்தபடி அவரோடு 'நாலு வார்த்தைகள்' பேசிய இந்திராகாந்தி நினைவுக்கு வருகிறார். " சர்மா! அங்கேயிருந்து பார்க்க இந்தியா எப்படி இருக்கிறது?" என்று அம்மையார் கேட்டதும், அதற்கு உருதுக் கவிஞர் இக்பாலின் சொற்களை வைத்தே "ஸாரே ஜஹான் ஸே அச்சா!" என்று அவர் பதில் தந்ததும், அறிவியலும் இலக்கியமும் கைகோர்த்த கணங்கள்! அடுத்த ஓரிரு மாதங்களிலேயே அம்மையாரை நாம் இழக்க நேர்ந்தது!.இந்த நூற்றாண்டின் மகத்தான 'ஜேம்ஸ் வெப்' சாதனைக் குழுவில் இந்திய வம்சாவளியினர் மூவரின் பங்களிப்பும் இருக்கிறது என்பதில் நாம் பெருமை அடையலாம். லக்னௌவில் பிறந்து தாத்தாவுடன் ஸ்புட்னிக் நிலா வானில் தென்படுகிறதா என்று ஐந்து வயதுச் சிறுமியாக வேடிக்கை பார்த்த ஹாஷிமா ஹஸனும், மும்பையில் கணிதப் பேராசிரிய தம்பதிகளின் புதல்வியாகப் பிறந்த கல்யாணி சுகாத்மேயும், இன்னொரு இளைஞர் கார்த்திக் ஸேத்தும்…. ஆங்கிலம் படிக்காமல் அறிவியல் நாட்டத்தில் இணைந்து கொள்ளாமல் இந்தியாவிலேயே இருந்திருந்தால்…? எதற்கு இந்தக் கெட்ட கனவுகள் நமக்கு?.கேரள மாநிலத்திலிருந்து இரு வானியல் ஆய்வாளர்கள் நாஸாவின் இந்த 'ஜேம்ஸ் வெப்' காட்சிகளை ஒருங்கிணைத்துத் தருகிற பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஒருவர் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஜெஸ்ஸி ஜோஸ். மற்றவர் மூவாட்டுப் புழாவைச் சேர்ந்த மனோஜ் புரவக்காரா. 'குழந்தைப் பருவ' நட்சத்திரங்களின் தட்பவெப்ப அளவு, உட்பொருள் திண்மை போன்றவற்றை ஆராயும் அணியில் இடம்பெற்றிருக்கிறார் மனோஜ்! மற்றவர் நட்சத்திர 'காலக்டிக்' புதர் மையத்தின் மர்மங்களைக் கண்டறியும் குழுவில் பணியாற்றுகிறார்.இன்னும் எத்தனை இந்தியர்கள் இந்த அசுர சாதனையில் இணைந்திருக்கிறார்களோ, முழுமையாகத் தெரியவில்லை. வாழ்த்த்தி மகிழலாம்!