ஜோக்ஸ்

ஜோக்ஸ்
Published on

வாசகர் ஜோக்ஸ்                                                       ஓவியம்: ரஜினி

"அந்த பேஷண்ட்டுக்கு எட்டு டெஸ்ட்டும் பண்ணியாச்சு டாக்டர்!"

"பேலன்ஸ் என்ன இருக்கு சிஸ்டர்?"

"சேவிங்ஸ் அக்கவுண்ட்ல இன்னும் 33 ஆயிரம் இருக்கு டாக்டர்!"

– வி.ரேவதி, தஞ்சை

"தலைவரைப் பார்த்ததும் சினிமா  தயாரிப்பாளர்கள் எல்லாம் ஏன் ஓடி    ஒளியறாங்க ?"

"தலைவர் மீட்டிங்ல சொன்ன குட்டிக் கதைகளை எல்லாம் படமா எடுக்கச்  சொல்றாராம்."

– தீபிகாசாரதி,  சென்னை

மனைவி: "டாக்டர்கிட்ட போய்,  'நர்ஸ் நந்தினிக்கு மேரேஜ் ஆயிடிச்சா?'ன்னு கேட்டீங்களாமே ஏன்?"

கணவர்: "நீதானே டாக்டர்கிட்ட என்ன சந்தேகமா இருந்தாலும் கேட்டுக்க'ன்னு சொன்னே?"

– வி.ரேவதி, தஞ்சை

"என் பொண்ணுக்கு மாப்பிள்ளை  தேடறேன். கிடைக்கவே இல்லை."

"போலீஸ்ல கம்பளைன்ட்  பண்ணீங்களா?"

– தீபிகாசாரதி,  சென்னை

"தலைவர் எதுக்கு அந்த ஜோசியரை அடிக்கப் போறாரு?"

"ஊழல் கறை படியாத நேர்மையான ஒருத்தர்தான் அடுத்ததா  ஆட்சிக்கு வருவார்னு சொன்னாராம்!"

– சி. ஆர். ஹரிஹரன்,
ஆலுவா, கேரளா

"அமைச்சரே ! நம் ஆயுதக் கிடங்கை பார்வையிட வந்துள்ளவன் அண்டை நாட்டு மன்னனா?"

"இல்லை மன்னா… பேரிச்சம்பழக் கடைக்காரன்…"

– கு.வைரச்சந்திரன், திருச்சி

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com