புத்தாண்டு சிறப்பிதழிலிருந்து….

புத்தாண்டு சிறப்பிதழிலிருந்து….
Published on

36 ஆண்டுகள்  வங்கிப் பணி..30 நாடகங்களுக்கு மேல் எழுதி,தயாரித்து,இயக்கி நடித்துள்ள டி.வி ராதாகிருஷ்ணன் தன் நாடகங்களுக்காக பல முன்னணி அமைப்புகளிலிருந்து விருது பெற்றிருப்பவர். 20க்கும் மேற்பட்ட ஆன்மீக,சமூக,இலக்கிய நூல்கள் எழுதியிருக்கிறார். அவருடைய  "வால்மீகி ராமாயணம்" அமேசான் கிண்டிலில் மின்னூலாக வெளிவந்துள்ளது. கல்கி வாசகர்களுக்காக  உதவ கீதையை எளிய தமிழில் எவருக்கும் புரியும் வண்ணம்  அடுத்த இதழ் முதல் வாரந்தோறும் எழுதுகிறார்.

உத்தவ கீதை என்பது என்ன?
——————–

குருக்ஷேத்திரப் போரில் அர்ஜுனனுக்கு கண்ணன் சொன்னது "பகவத் கீதை"

உத்தவருக்குக் கண்ணன் சொன்னது "உத்தவ கீதை" எனப்படுகிறது.

பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதல் அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி இறுதிவரை அவருடனேயே இருந்தவர் உத்தவர்.

அவர், தனக்கென தன் வாழ்நாளில் கண்ணனிடம் எந்த உதவியையோ, வரங்களையோ கேட்டதில்லை.

இந்நிலையில் துவாபரயுகத்தில் தனது அவதாரப்பணி முடிந்த நிலையில் கண்ணன்,
உத்தவரிடம், "உத்தவரே! இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல
வரங்களும், நன்மைகளும் பெற்றுள்ளனர். ஆனால் நீங்கள் இதுவரை என்னை எதுவுமே
கேட்டதில்லை… ஏதாவது கேளுங்கள்… உங்களுக்கு ஏதாவது நன்மைகள் செய்து விட்டு எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்" என்றார்.

அதற்கு உத்தவர், "கண்ணா…உன் லீலைகளில் எனக்குப் புரியாத  பல சந்தேகங்கள்
இருக்கின்றன. அவற்றைத் தீர்த்து வைப்பாயாக" என்றார்.

பின் உத்தவர் கேட்ட பல கேள்விகளுக்கான விளக்கத்தைக் கண்ணன் சொல்ல ஆரம்பித்தார்.

இதில் பிறப்பு, இறப்பு, இறைவனை வழிபட வேண்டிய முறை போன்றவற்றிற்கு எல்லாம் விளக்கம் உள்ளது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com