சிறுகதை ஓவியம் : தமிழ்.– ஆனந்த் சீனிவாசன் .கண்ணாடியில் என் அழகைப் பார்த்தபோது, "சே சே… நான் என்ன மன்மதனா?" என்ற எண்ணம் தோன்றியது..என் முகத்தையும், தலை முடியையும், பார்த்தபோது குறைக்க வேண்டும், என்று மனதில் பட்டது. கிருதா வேறு அரை அங்குலம் வளர்ந்து இருந்தது. நல்ல வேளை, அம்மா கண்ணாடி போடவில்லை; போட்டிருந்தால் அதுக்கும் திட்டு விழும். நெற்றிச் சுருக்கங்களை, கொஞ்சம் மயிர் வந்து, மறைத்தால் போதும், அம்மாவுக்கு பிடிக்காது.."ஏண்டா தடியா! காடு மாதிரி முடி வளர்ந்திருக்கு! தலையை வெட்டிண்டு வாடா" ஒரு வாரமா சொல்றேன் காதிலே போட்டுக்க மாட்டேங்கிறே? அப்படி என்ன குடி முழுகி போகிற வேலை அய்யாவுக்கு.".கிண்டலுடன் கோபமும் வார்த்தையில் தெறித்தது அம்மாவிடம்.."முடி திருத்திட்டு வாடா" என்கிற வார்த்தை, அம்மா அகராதியில், தலையை வெட்டிட்டு வாடான்னு அர்த்தம்ன்னு" புரிய ரொம்ப நாள் ஆச்சு..அம்மா ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி படத்தை நிறைய தடவை பார்த்ததன் பாதிப்போ என்னவோ?.அம்மா என்னை, கோபமாக திட்டும்போது, அப்படித்தான் திட்டுவார். ஆனால் என் உண்மையான பெயர் சாரங்கன்.."வேறே எந்த கடைக்கும் போகாதே? வழக்கமா காந்தி ரோட்டில் இருக்கும் சுப்பிரமணி கடைக்கு போ.".1968களில் மன்னார்குடியில் நிறைய சலூன் கடைகள் கிடையாது..முதல் தெரு, இரண்டாம் தெரு வாசிகள் எல்லாம், சுப்பிரமணிகடையில்தான் முடிவெட்டிக் கொள்ளும் பழக்கம்..பெரியவர்கள் வந்தால் "வாங்க சாமின்னு" அன்புடன் கூப்பிடும் விதம், அடக்கம், அவருள் இயற்கையாகவே இருந்த காரணமே, அவரை நிறைய பேருக்கு, பிடிக்கும்படி செய்தது..கட்டிங் சேவிங் செய்து கொண்டு இருக்கும் போதே "ஏன் சாமி ஒங்க மூத்த பையன் இப்ப டெல்லி தானே? பாப்பா பெங்களூரில் கட்டி கொடுத்தீங்களே! சௌரியமா இருக்கா?".இப்படி வரும் கஸ்டமர் எல்லார்கிட்டயும், ஃபேமிலி மெம்பர் மாதிரி விசாரிக்கும் நல்ல பண்பே, அவருக்கு நிறைய வாடிக்கையாளர்களை கொடுத்திருந்தது..அதனால்தான் அம்மா அப்படி சொல்லி இருந்தார்..பக்கத்தில் நின்று இருந்த என் தம்பியை காமிச்சு, "அவனுக்கும் தானே காடு மாதிரி, வளர்ந்து இருக்கு, அவனையும் வர சொல்லு" என்று அம்மாவிடம் வாதிட்டேன்..எனக்கும் அவனுக்கும் இரண்டு வயசுதான் வித்தியாசம்..நான் 9ம் வகுப்பிலிருந்து 10ம் வகுப்பு போகிறேன். அவன் 7ம் வகுப்பிலிருந்து 8ம் வகுப்பு. எல்லோரும் நேஷனல் ஹை ஸ்கூல்தான்..அம்மா யார் மீதும் "ஆஹா ஓஹோன்னு" பாசம் கிடையாது. எல்லோரிடமும் ஒரே மாதிரிதான்.."யான் பெற்ற துன்பம் அவனும் பெறட்டும்" என்கிற எண்ணம் அவன் மேல் தலை தூக்கிற்று..அதற்கு காரணம் இல்லாமல் இல்லை..ஸ்ரீராம் தியேட்டரில், "பூவும் பொட்டும்" படம் இரண்டு பேரும் ஸ்கூல்க ட் அடிச்சு விட்டு தான் மேட்னி பார்த்தோம்..ஆனால் அவன், தான் யோக்கியன் மாதிரி, நான் மட்டும் கட் அடித்து, படம் பார்த்த விஷயத்தை போட்டுக் கொடுத்தான் அம்மாவிடம்..அம்மா, முதலில் அதை நம்பவில்லை. "நுனலும் தன் வாயால் கெடும்" என்பார்களே அது போல, எப்போதும், எந்த சினிமா போயிட்டு வந்தாலும், நாள் முழுவதும் , அந்த படத்தின் ஏதாவது ஒரு பாட்டை முணுமுணுக்கும் கெட்ட பழக்கம் எனக்கு. அன்னிக்கும் அது மாதிரி "நாதஸ்வர ஓசையில தேவன் வந்து பாடுகின்றான்" என்று அருமையான பாட்டை அடிக்கடி முணுமுணுத்ததை கண்டுபிடுச்ச என் கூட பொறந்த அக்கா, "எம காதகி" ஸ்ரீராம் சொன்னது கரெக்ட்தான் அம்மா என்றாள்..கூடவே துணி தோய்க்கும்போது, என் சட்டையிலிருந்து இரண்டு சினிமா டிக்கெட்டையும், அம்மாவிடம் காமிச்சு, நான் அவனுடன் கட் அடிச்சு சினிமா பார்த்தது நிஜம் என்று, அம்மாவை நம்ப வைத்து விட்டாள். வேறு வழியில்லை ஒத்துக்கொண்டேன்..அம்மா அடிக்கவில்லை… ஆனால் திட்டு நிறைய வாங்கினேன்.."அண்ணன் என்னடா தம்பி என்னடா! கோபம் கொள்வதில் அர்த்தம் என்னடா? "ன்னு என்னை பார்த்து, பாட்டு பாடிவிட்டு கிரிக்கெட் விளையாட கிளம்பிட்டான் என் தம்பி ஸ்ரீராம்..ஆனாலும் , எட்டப்பன் என் தம்பியை எப்படியாவது பழிவாங்க வேண்டும், என்ற எண்ணமும், அதற்கான திட்டமும் உருவானது..'ஒரே வெயிலா இருக்கே… சரி நாளைக்குப் போலாம். ஒரே தலைவலியா இருக்கே, சரி நாளைக்குப் போலாம். ஐயோ! பக்கத்து வீட்டு பூனை செத்துப்போச்சே, சரி நாளைக்குப் போகலாம்'. இப்படியே ஒரு வார காலம் சாக்கு போக்கு சொல்லி ஓடிபோனாலும், எப்படியாவது தம்பியை கட்டாயம் அழைத்து போகணும் என்ற முடிவில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் வேதாளம் மாதிரி இருந்தேன்..நமக்கும் ஒரு 'மூட்' வந்து, 'சரி இன்னைக்கு கண்டிப்பா போறோம்' என்று முடிவெடுத்து, அழுக்கு சட்டை ஒன்றை மாட்டிக்கொண்டு கிளம்பும்போது, 'டேய்… வெள்ளிக்கிழமை முடி வெட்டக்கூடாது…. உள்ளே போ…' என பிரேக் போட்டாள் அம்மா..சரி! மறுநாள் சனிக்கிழமை காலை ஏழு மணிக்கே சலூன் கடைக்கு ஆஜர் ஆகிவிடுவோம். ஸ்ரீராமையும் அழைத்து போகலாம்; "ஸ்ரீராமையும் வர சொல்லும்மா" என்று கேட்டு ஒரு வேளை அம்மா ஓ.கே.சொன்னால், என் சபதம் நிறைவேறும் என்று ஆசைப்பட்டேன்..தம்பியின் அழகான கர்லிங்க் முடி ஒட்ட வெட்டப்பட்டு, கிட்டத்தட்ட பாதி மொட்டை மாதிரி இருந்தது. பார்த்துவிட்டு நக்கலாக அவனிடம் "நினைத்ததை முடிப்பவன் நான் நான் நான்" என்று பாட்டு வேறு பாட ஆரம்பித்தேன்.."டேய் தடியா! என்ன யோசனை? பகல் கனவா? சே… எல்லாம் கனவா? நான் தம்பியை பழிவாங்க முடியவில்லையே?.அண்ணனும் தம்பியும் ஒரே நாளில் தலை வெட்டிக்க கூடாது, சாரி முடி வெட்டிக்க கூடாதுன்னு சாஸ்திரம் சம்பிரதாயம்ன்னு சொல்லி, அவனை வர விடாமல் தடுத்து விட்டார் அம்மா. என் கனவும் பியூஸ் போன பல்பு மாதிரி ஆயிடுச்சு.."என்னடா அநியாயமா இருக்கு. தெரு கிரிக்கெட் மாட்சில் தான், அண்ணனும் தம்பியும் ஒரே டீமில் இருக்கக் கூடாதுன்னு, தெரு கேப்டன் குண்டு கோபாலு சொல்லுவான்..ஓப்பனிங் பேட்ஸ்மேனா இறங்கிய என்னை, 5வது ஓவரில் குண்டு கோபாலிடம் தான், ரகசிய ஆலோசனை நடத்தி, ஆப் பிரேக் ஸ்பின் பவுலிங் மூலம் ஸ்டம்ப்பை தகர்த்து விடுவான் என் தம்பி .அதில் அவனுக்கு ஒரு சந்தோஷம்..இவ்வளவு வருஷம் விளையாடி அவன் பௌலிங்கை, சரியா கணிக்காமல் கிளீன் போல்ட் ஆனது வெட்கக்கேடுதான் எனக்கு..இந்தியா டீமிக்கு பிஷன் சிங் பெடின்னா, மன்னார்குடிக்கு ஸ்ரீராம் இன்னொரு பிரசன்னா இன்னொரு பெடி என மத்த தெரு பசங்களும், இவனை கொண்டாடுவாங்க..கிரிக்கெட்ல தான் ஒண்ணு சேரக்கூடாதுன்னு, குண்டு கோபால் எழுதாத சட்டம் போட்டான்னு சொன்னா, அம்மாவும் ஒரு புது சட்டம் போட்டு வைக்கிறாளே? என்று அம்மாவை சபித்தேன்..சனியும் போச்சு. அவன் வருவதாக இல்லை. இனி அவன் எக்கேடு கெட்டு போகட்டும்ன்னு தோல்வியை ஒப்பு கொண்டு, "சட்டி சுட்டதடா கையை விட்டதடா" என்று மனதுக்குள் பாடி விட்டு நான் பேசாமல் இருந்தேன்..ஆறு மணிக்கே , அம்மா எழுப்பி, இன்னிக்கு "நீ தலை வெட்டிண்டு வரலே ஒனக்கு மத்தியானம் சாப்பாடு கிடையாதுன்னு" கண்டித்தாள்.."ஐயோ அம்மா இன்னிக்கு மேட்ச் 10 மணிக்கு இருக்குமா; நான் அடுத்த வாரம் போறேம்மா." கெஞ்சி பார்த்தும் ஒன்னும் முடியலே..எப்படியாவது என்னை சலூனுக்கு அனுப்பினால் வர லேட்டாகும் .நெட் ப்ராக்டிசுக்கு நான் வர முடியாதுன்னு நினைச்சு, "நல்லவன் எனக்கு நானே நல்லவன்… சொல்லிலும் செயலிலும் நல்லவன்…" படித்தால் மட்டும் போதுமா சிவாஜி மாதிரி ஆக்ஷன் கொடுத்தான் ஸ்ரீராம்..ஒட்டு மொத்த குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் என்னை சலூனுக்கு அனுப்புவதில் குறியா இருந்தார்கள்.."வாங்க தம்பி… அப்பா அம்மா அக்கா தம்பி சௌக்கியமா?".மணி வரவேற்ற விதமே, எனக்கு ராஜ மரியாதை, கொடுத்த மாதிரி இருந்தது..ஏழு மணிக்கே, போனாலும், எனக்கு முன்பு அங்கு ஏழு பேர் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருந்தார்கள்..இரண்டு மாதத்துக்கு ஒரு முறைக்கு அங்கு நடக்கும் களேபரங்களைப் பாத்திருக்கேன். வேடிக்கையாக இருக்கும்..எப்படியும் ஒரு மணி நேரம் அங்கே காத்திருக்க வேண்டியதிருக்கும் என்று தோன்றியது. எப்படியும் 8 மணிக்குள் என் காரியம் முடிந்தால் நான் நெட் பிராக்டிஸுக்கு போயிடலாம்..மூலையில் இருந்த ஒரு நாற்காலியின் மேல் சில செய்திப் பத்திரிக்கைகளும், அதன் மேல் வார இதழ்களும் இருந்தன. அவற்றை எடுத்து ஓர் ஓரமாக வைத்துவிட்டு நாற்காலியில்- உட்கார்ந்தேன்..அது இலேசாக ஆடியது..எல்லா சலூன்களிலும் இருப்பது போல அங்கு மேலாக இருந்த வாரப் பத்திரிக்கையில் ஓர் இளம் பெண்ணின் கவர்ச்சிப் படமும் அதற்கு விளக்கமும் தருவது போல, மகா கவர்ச்சியான தலைப்பும் இருந்தது. அதை எடுத்துப் படிக்க ஆசையாக இருந்தாலும், அங்கே எல்லோர் முன்பு அதை வாசிக்க வெட்கமும் பயமும் இருந்தது..சலூனைச் சுற்றி கண்களை சுழல விட்டேன்..மணியின் ஒரு தம்பி, ஐம்பது வயதானவருக்கு, நரைமுடிக்குக் கறுப்புச் சாயம் போட்டு, அவரை இருபது வயது ஹீரோவாக, மாற்றிக் கொண்டிருந்தார்..வேலை முடிந்ததும், அவரும் அதே கண்கள் ஹீரோ மாதிரி "லவ் லவ் எத்தனை அழகு இருபது வயதனிலே" பாட்டை முணுமுணுத்தார்..எனக்குப் பக்கத்திலிருந்தவர் சின்ன தாடியும், முள்ளம் பன்றி மாதிரியான முடியலங்காரமும் வைத்திருந்தார். நிச்சயம் அவர் நம்மூர் இல்லை; என்பது மட்டும் தெரிந்தது..மணியும் அவரை வித்தியாசமா பார்த்தார். இவர் காரியம் முடிய, எப்படியும் அரை மணி நேரமாகும். அவருக்குப் பக்கத்திலிருந்த பையனுக்கு ஓர் அரை மணி நேரம்..இந்த நேரம் பார்த்து நடக்க முடியாத அப்பாவை ரிக்சாவில் ஏற்றிக்கொண்டு வந்த இன்னொருவர், 'அப்பாவுக்கு ஃபுல் ஷேவ் பண்ணிடுங்க… முடிஞ்சா முடியே திரும்ப மொளைக்காத மாதிரி மொட்ட அடிச்சு விட்டுடுங்க…' என்று சலிப்புடன் சொல்லிவிட்டு, அங்கிருக்கும் வார இதழ் ஒன்றைப் புரட்ட ஆரம்பித்தார். அது பழைய வார இதழ் எனத் தெரிந்தும்..மொத்தம் ஒரு மணி நேரம். என் கணக்கு சரிதான். அதற்கு அப்புறம்தான், என் முறை வரும். எனக்குப் பின்னாலேயே இரண்டு பேர் வந்துவிட்டனர். ஏற்கனவே உட்கார்ந்து கொண்டிருந்தவர்களை நகரச் சொல்லிவிட்டு, அவர்களும் நெருக்கி உட்கார்ந்து கொண்டனர்..எனக்கு மட்டுமல்ல; அங்கு இருக்கும் எல்லோருக்கும் ஒரே ஆறுதல், சிலோன் ரேடியோதான் .பி.ஹெச். அப்துல் ஹமீத், மயில்வாஹானம்,கே.எஸ்.ராஜா. ராஜேஸ்வரி சண்முகம் வர்ணணையில் பலமுறை கேட்டு சலித்துப்போன அதே பாடல், ஆனால், நிகழ்ச்சி தொகுப்பாளர் கொடுக்கும் சுவாரசியமான தகவல், அன்று ஏனோ புதிதாக தெரியும். கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்..'ரகசிய போலீஸ் 115' படத்தில் அழகான பாட்டு "கண்ணே கனியே" பாடல். ராஜேஸ்வரி சண்முகம் அந்த பாட்டு பற்றி விபரமாக, விளக்கம் கொடுக்கவே, நான் பாடலினுள் ஐக்கியமாகி, காலையிலேயே கற்பனைகளில் மூழ்கிப் போனேன். என்னை எம்.ஜி.ஆர். ஆக நினைத்து கொண்டு ஜெயலலிதாவுடன் டூயட் பாட ஆரம்பித்தேன்..சற்று நேரத்தில் உண்மையில் நாம் முடிவெட்ட தான் வந்தோமா? என்ற எண்ணம் ஏற்பட்டது..'என் செல்லம்ல… ஒழுங்கா காமிச்சா, அப்பா உனக்கு சாக்லேட் வாங்கித் தருவேன் சரியா…' என கெஞ்சிக்கொண்டிருந்த சந்திரமௌலியை பார்த்தேன். பாவமாக இருந்தது. அவன் எங்க தெரு சீனியர் ப்ளேயர்..இப்போ மெண்டர்,பௌலிங்,பேட்டிங் கோச் எல்லாமே பத்து பைசா காசு வாங்காமல் ?."என் பாப்பாவுக்கு சூப்பர் பாப் வெட்டுங்க.".இது மாதிரி வேலையெல்லாம், அவர் பையன் சோமுதான் செய்வார்.."என்ன சாரங்கா? இன்னிக்கு நம்ம தெருவுக்கும், மூன்றாம் தெருவுக்கும் பைனல் மேட்ச். நீ பிராக்டிசிக்கு போகலயா?".நான் இன்னும் அரை மணியில் கிளம்பிடுவேன்..நீ வரலின்னு வைச்சுக்கோ "நோ சான்ஸ் ஒன் தம்பி ஸ்ரீராம் தான். என்ன பிரில்லியன்ட் ஆப் பிரேக் பௌலர்.".என் எதிரியை, எனக்கு நேரில் பாராட்டி பேசியது "எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊத்தின மாதிரி" இருந்தது..வேறு யாராவது, இருந்தா சண்டைக்கு போயிருப்பேன். சீனியர் கோச். வேறு வழியில்லாமல் "ஆமாம் ஆமாம்" என்று தலையாட்டினேன்..வருடா வருடம் லீக் மேட் ச் எல்லாம் ஜெயிச்சு கடைசியில், பைனல் என்னவோ, மேல இரண்டாம் தெரு வெர்சஸ் கீழ மூன்றாம் தெருதான்..10 வருஷமா. இந்தியா பாகிஸ்தான் மேட்ச் மாதிரி அவ்வளவு விறு விறுவிறுப்பு. எப்போதும் மூன்றாம் தெரு பசங்க தோத்துகிட்டே இருப்பாங்க..சற்று நேரத்திற்கு முன்புதான் ஷேவிங் செய்துவிட்டுப் போன நடுத்தர வயது ஆசாமி ஒருவர், திரும்ப ஓடி வந்து. அசட்டு சிரிப்புடன், 'தம்பி…இங்க பாரு. இந்த முடிய நீ கவனிக்கல' என்று தலையைத் திருப்பி தாடையைக் காண்பிக்க, மணியின் இன்னொரு தம்பி , குத்துமதிப்பாக எதையோ ஒன்றை பார்த்துவிட்டு, 'அட ஆமா சார் ' என்றார்..பின்பு, கூரான கத்தியை வைத்து அந்த இடத்தை ஒரு இழு இழுக்க, சிவப்பு நிறத்தில் மெல்லிய ஒரு கோடு ஒன்று அங்கு விழுந்திருக்கும். வலியை வெளியே காட்டாமல்,' நான் வரேன் தம்பி…ரொம்ப தேங்க்ஸ்!' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து போனார்..அப்போது, மணி காதில் கேட்கும்படி 'உச்ச்ச்…..' என்று சொன்னதும் . உடனே அவர், 'ஒரு ஃபைவ் மினிட்ஸ் பொறுங்க தம்பி!.ஞாயிற்றுக்கிழமை தானே தம்பி கொஞ்சம் பொறு தம்பி.."எனக்கு 10 மணிக்கு இரண்டாம் தெரு வெர்சஸ் மூணாம் தெரு கிரிக்கெட் மேட்ச் பைனல், கிரௌண்டில் 9 மணிக்கே இருக்கணும் . நான் போகாவிட்டால் எனக்கு முன்னாடி என் தம்பி ரெடியா இருப்பான்..நான் வரமாட்டேன்னு சொல்லி அவனை டீமில் சேர்த்துடுவாங்க. அதை முறியடிக்கணும் மணி சார்.".ஆனால் மணி நான் சொன்னத காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.."மணி சார் மணி ஆயிடுச்சு.".பல ஃபை மினிட்ஸ் கடந்த பிறகு ஒரு வழியாக, 'அடுத்தது நாம தான்' என எழுந்தபோது, முறுக்கு மீசையுடன், ஒருவர் என்னை தடுத்து, 'தம்பி உனக்கு முன்னாடியே நான் வந்து துண்டு போட்டுட்டேன் பாரு'..இனியும் பொறுக்கமுடியாமல், "மணி… சார் நான் இன்னொரு நாள் வந்து வெட்டிக்கறேன்'" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பும்போது, 'தம்பி …கொஞ்சம் நில்லுங்க. அவருக்கு ஒரு நிமிஷம் முன்னையே நீங்க வந்துட்டீங்க. ஸோ இந்த டர்ன் நீங்க தான்' என்று என்னை தடுத்தார். மணி..அந்த நொடியில், தர்மத்தை மீட்டெடுத்த நீதியரசராகவே என் கண்ணுக்கு மணி விளங்கினார்.."சார், நீங்கள் வெளியில் டீ குடிக்க போயீடீங்க. நீங்க வர லேட்டாகும், என்பதால் இவருக்கு, முடிவெட்ட ஆரம்பித்து விட்டேன்" என்றார் மணி .."வெட்டுங்க. போனா போவுது.".எனக்கு அவர் பிச்சை போட்ட மாதிரி இருந்தது.."தம்பி… தம்பி "வெட்டலாமா தம்பி ?" என்று மணி சொன்னதும், நான் சரி என்று சேரில் உக்கார்ந்தேன்..எனக்கு முடிவெட்ட ஆரம்பிக்கும் முன்பு சில கேள்விகள் கேட்டார்..கட்டிங்கா? மொட்டையா?.மிஷினா, கத்தரிக்கோலா?..'ஃபுல் கட்டிங்கா, ஆஃப் கட்டிங்கா?'.சலூன்காரர் சொன்னதை பார்த்து வெயிட்டிங் லிஸ்ட் ஆள் கமெண்ட் கொடுத்தார்.."தம்பி என்ன 'சரக்கா அடிக்க போகுது. நீ பாட்டுக்கும் கேள்வி கேட்டுகிட்டு இருக்கே?"."எனக்காக, ஒரு ஜீவன் சப்போர்ட் பண்ணுதே" என்று உள்ளூர மகிழ்ந்தேன்..வரிசையாகக் கேள்விகளை அடுக்கிவிட்டு, பின்னர் ஒருவழியாக நம்மிடம் வந்து, தலையில் தண்ணீர் அடித்து, சீப்பை இரண்டு தட்டு தட்டி சீவிய பிறகு கத்ரிகோலை தலையில் வைத்து, வேலை ஆரம்பிக்கும் சமயம், வாசலில் யாரோ இவர் பெயரை, இரண்டு மூணு தடவை கூப்பிட , இதோ 5 நிமிடம் தம்பி வரேன்..5 நிமிடம் 10 நிமிடம் ஆச்சு. திரும்பி வந்து உதட்டோர சிரிப்புடன்,."வார்டு கவுன்சிலர் தம்பி அதான் அவாய்ட் பண்ண முடியல" என்றபடியே வந்தார் மணி..முதற்கட்டமாக, தலையின் இரண்டு பக்கங்களிலும், மிஷின் கட்டிங் போடப்பட்டு பிறகு, முடியின் அளவுக்கேற்ப கத்தரிக்கோல் செலக்ட் செய்தார்..கத்திரிக்கோலை சரியாக காதின் அருகே கொண்டுவரும் நேரம், ஆடாமல் அசையாமல் நான் உட்காந்திருந்தேன். அவரும் பதிலுக்கு ஆடாமல் அசையாமல் நின்றுகொண்டிருந்தார். என்னவென்று ஓரக்கண்ணால் பார்த்தால், சிலோன் ரேடியோவில் கே.எஸ்.ராஜா திரை விமர்சனம் சொல்ல தயாரா இருந்தார்.."வீட்டுக்கு வீடு வானொலி பெட்டி அருகில் குழுமிருக்கும் கோடிக்கணக்கான ரசிக பெருமக்கள் அனைவருக்கும் . உங்கள் கே.எஸ். ராஜாவின் அன்பு வணக்கம்..இன்றைய திரை விமர்சனம் பணமா பாசமா? அங்கு இங்கு நகராமல். கே.எஸ்.ராஜாவை ரசித்து கொண்டுருந்தார் மணி..நானோ காதின் அருகே இருக்கும் கத்தரிக்கோலுக்காக பயந்திருக்க, அவரோ வீட்டைவிட்டு துரத்தப்பட்ட பணமா பாசமா ஜெமினி சரோஜாதேவி மாதிரி பரிதவித்தார்..கத்திரியை சரியாக அவர் நம் புருவத்தில் வைக்கும்போது, 'இவருக்கும் நமக்கும் முன் பகை ஏதும் இல்லையே…' என்ற சந்தேகம் உருவானது..எல்லாம் முடிந்த பிறகு, முகத்திலும் கழுத்திலும் ஒட்டிக்கொண்டிருக்கும் முடிகளை, அப்புறப்படுத்திக்கொண்டே, டெட்டால் போடாம, ஒரு வெள்ளை கல்லு வெச்சு மேல நெத்தியிலிருந்து முகம் முழுவதும்தேய்ச்சார்..அப்பப்பா… என்ன ஒரு எரிச்சல். இந்த வெள்ள கல்லுக்கு என்ன பேருன்னு? ஒரு தடவ நான் கேட்டபோது, அவர் படிகார கல்லுன்னு சொன்னது, என் காதில் பரிகார கல்லுன்னு விழுந்தது..அதை தேய்க்கும் சமயம், ஒரு முடி சரியாக, நம் மூக்கினுள் ஏற, பிறகென்ன?.ஒரே தும்மலில் ஒட்டு மொத்த தலை மயிர்களும், கீழே கொட்டிக்கிடந்தது..அங்கேயும் இங்கேயும் பறக்க… நல்ல வேளை கடை பையன் , அதை உடனே கூட்டிவிட்டான்..'வரேன்ங்க' என்று சொல்லிவிட்டு பணத்தைத் தரும்போது, திரும்பி" நீ வரவே வராதடா" என்பதைப் போல முறைத்தார் அவர்..நொந்துபோய் வீடு வந்த என்னை பாத்து, அம்மா கேட்ட ஒரு கேள்வி அதிர்ச்சியா இருந்தது..அம்மாவுக்கு எக்னாமிக்ஸ் பாடத்திலே, கன்சூயூமர் சர்பல்ஸ் தேரி மாதிரி, கொடுத்த காசுக்கு திருப்தி இல்லன்னா, இப்படித்தான் பேசுவாள்.."ஏண்டா ஒட்ட வெட்டிட்டு வரக்கூடாதா. முள்ளங்கி பத்தையா 20 ரூபா கொடுத்துருக்கேன்.".அம்மா இனிமே மொட்டைதாம்மா அடிக்கணும்..குளிச்சு பழையது சாப்பிட்டு கொண்டே ,"ஸ்ரீராம் எங்கம்மா?"."மேட்ச் விளையாட போறேன்னு சொல்லிட்டு போனான்"..அப்படியே எழுந்தேன்..மணி 08:45 ஆகியிருந்தது..அரக்க பரக்க சைக்கிளில் கிரௌண்ட்க்கு பறந்தேன்.