சீட் நுனியில் அமர்ந்து படம் பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது

சீட் நுனியில் அமர்ந்து படம் பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது
Published on

க்கிரமிப்பு, கொள்ளை இரண்டுக்கும் தராசார் தந்துள்ள விளக்கம் மிகச்சரியே. இரண்டுமே அகற்றப்பட வேண்டியவை ஆகும். வடகிழக்கு மாநிலங்களில் பல ஆண்டுகளாகவே தமிழர்கள் இருந்து இருக்கிறார்கள் என்பதும், நாகலாந்து அருகில் 'தமிழ் கிராமம்' உள்ளது என்று தராசார் தந்துள்ள பதில் மன நிறைவுத்  தருகிறது.  தேர்தலுக்குப் பிறகு நாடகம் போடும் அரசியல்வாதிகள், தேர்தலின் போது வேட்பாளர்களுக்கு வாக்குகள் சேகரிக்கும் போது டீ போடுவது, இஸ்திரி செய்வது, காலி மதுபாட்டில்களைப் பொறுக்குவது என்பதையெல்லாம் 'சந்தர்ப்பவாத அரசியல்'  என்பதை தராசார் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.  தராசாருக்கு  நிகர் தராசாரே.
– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

யோகா என்னும் இளைஞருக்கு 75 வயது. நம்ப முடியவில்லை. பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஐயா, கல்கி வாசகர்கள் அனைவரையும் ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்.
– வெ. தயாளன், சென்னை- 9444670701

ட்டுரையை படிக்கும்போதே பிரமிப்பில் சீட் நுனியில் அமர்ந்து படம் பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது. எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றார்போல் 'வலிமை' அஜித் ரசிகர்களுக்கு அருமையான அறுசுவை விருந்தாய் அமையும் என்பதில் சந்தேகமில்லை.
– கலைமதி, ராணிப்பேட்டை

செந்நண்டுகளையும், அவற்றிற்கு பாலம் அமைத்து கொடுக்கும் அரசையும், கடல் அலைகளில் இருந்து நண்டுகள் தன் முட்டைகளை பாதுகாக்கும் விதத்தையும் மிக அருமையாக விளக்கி தெரிவித்தமைக்கு கல்கி இதழுக்கு
நன்றி.
– ராஜி ரகுநாதன், ஹைதராபாத்

ம்முட்டியின் கட்டுரையின் கடைசியில் 'இக்கா' என்ற சொல்லுக்கான அர்த்தத்தை கொடுத்து விளக்கிய ஷைலஜாவுக்கு பாராட்டுக்கள். மனநிறைவு மனிதருக்கு எவ்வளவு முக்கியம் என்பதை ஃபரீதிக்கா மூலம் உணர்த்திய மம்முட்டி சாருக்கு வாழ்த்துகள்.

யோகா கட்டுரையில் கட்டுரை அருமை. கலைஞரின் காமெடியும், கட்டுரை ஆசிரியர், யோகாவின் பெயரை தன் வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்க முயற்சிப்பதாக கூறியதும் ரசிக்க வைத்தது.
– ஜெயகாந்தி, விழுப்புரம்

யிர்கள் அனைத்தையும் இறைவனை இயக்குகிறான் என்பதே பிரபஞ்ச உண்மை. இறைவனே நமக்கு எல்லாமாய் திகழ்கிறான். அவனை துதிப்பதே பிறப்பின் நோக்கம்.
– ஆ .மாடக்கண்ணு பாப்பான்குளம்

"கல்யாணம் கச்சேரி" சிறுகதை மிகவும் ரசிக்க வைத்தது. எப்படி மாப்பிள்ளை கல்யாணத்திற்கு மாட்டுகிறார் என்ற அழகாக சொல்லி கடைசியில் அந்த பெண்ணின் அப்பா "என் மகள் மிகவும் நல்லவள்"என்று எடுத்துச் சொல்லும் போது மனம் நெகிழ்ந்தது மிகவும் அருமையான சிறுகதை ரசித்துப் படித்தேன். பாராட்டுக்கள்.
– ராதிகா, மதுரை

"தல அஜித்"என்றாலே ரசிகர்களிடம் ஒருவித  எதிர்பார்ப்பு இருப்பது உண்மை. அதை உணர்ந்து வலிமையோடு களமிறங்குகிறார். 'தல அஜித்' என்ற கவர் ஸ்டோரியில் அவர் 'எப்படியெல்லாம் வலிமைப்படுத்தி போராடி இருக்கிறார்' என்று சொன்னது மிகவும் அருமை. 'அந்த படத்தை பார்க்க வேண்டும்' என்ற ஆவலை தூண்டியது.  'வலிமை எப்படியெல்லாம் எளிமையாகவும் வலுவுடனும் திரையரங்குகளில் வருகிறது' என்று பொறுத்திருந்து பார்க்க வைத்த மிக அருமையான கவர் ஸ்டோரி… பாராட்டுக்கள்.
– உஷாமுத்துராமன், மதுரை

'அந்த நாலு வரிகள் ' சிறுகதை , மனித நேயத்தின்  வேர்கள் இன்றும் ஆழமாக வேருன்றி வளர்ந்து நிற்பதற்கு சாட்சியாக உள்ளது, சிவா தனது தந்தை ரங்கனிடம் வாங்கிய கடன் தொகையை திரும்ப கொடுத்தது. 'டைரியில் எழுதியிருந்த அந்த நாலு வரிகளை ஏதோ கிறுக்கல்னு நினைக்காமல் படிச்சீங்களே' என்று சிவாவிடம் ரங்கனின் மனைவி கூறியது கதை முடிவாக இருப்பது அசத்தல்.
– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

பூபதி பெரியசாமி அவர்கள் எழுதிய சிறுகதை 'நாலு வரிகள்' அருமை. வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட கதை. ரங்கன் பணியில் இருந்து ஓய்வு பெற்றதும் மகள் மற்றும் மருமகன் பணம் கேட்பது யதார்த்தமான உண்மை. ரங்கனின் நண்பரின் மகன் ரங்கன் மருத்துவமனையில் பணம் கட்ட கஷ்டப்பட்டு விவரம் தெரிந்து பணம் கட்டியது மனித நேயம் இன்னும் உள்ளது என்று நிரூபித்து விட்டார்.
– பாரதிராஜன், அம்பத்தூர், சென்னை-

ந்தவித கணினி தரவு என்றாலும் அதை நிச்சயம் ஓர் அரசு எவர் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டாலும் தர வேண்டும் என்ற தலையங்கம் உண்மை என்ற போதிலும் அது போலியான தரவு மற்றும் நிர்வாக கோளாறு என்பதையும் நிச்சயம் குறிக்கிறது என்பது அதைவிட உண்மை.
– சி. கார்த்திகேயன், சாத்தூர்

மிழ் தாத்தாவைப் பற்றிப் பேசும்  கடைசிப்பக்கம் அருமை.
– ராஜி ரகுநாதன்,  ஹைதராபாத்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com