"உங்க 'பேய்' படம் பார்க்கப் போய் ரொம்பவே பயந்துட்டேன் சார்!"
" 'பேய்' படம்னா அப்படித்தான் இருக்கும்!"
"அப்படியெல்லாம் இல்லை. தியேட்டரில் நான் ஒருத்தன் மட்டும்தான் இருந்ததால ரொம்ப பயந்துட்டேன்!"
– கீழை அ.கதிர்வேல்
"எவ்வளவுதான் கதவைத் தட்டினாலும், ஆள் யாருன்னு தெரியாமல் கதவைத் திறக்க மாட்டியே? எப்படி திருடன் உள்ள வந்தான்?"
"திறக்காமால்தான் இருந்தேன். ஆனா அதுல ஒருத்தன் 'உங்க வீட்டுல எத்தனை வோட்டு சார்னு கேட்டதும் ஜெர்க் ஆகி திறந்துட்டேன் சார்!"
– வி. ரேவதி, தஞ்சை
"கனவுல சினிமா நடிகை வந்ததுக்காக ஏன்பா வருத்தப்படறே?"
"கனவா இருந்துச்சேன்னுதான்!"
– வி.ரேவதி, தஞ்சை
"இப்பல்லாம் என் மனைவிகிட்ட நான் ஜோக்ஸ் சொல்றதே இல்லை!"
"டைவர்ஸ் வரைக்கும் போக என் மனைவி ரெடி ஆயிட்டா சார்!"
– வி.ரேவதி, தஞ்சை
"ஸ்வீட் ஸ்டால்ல வேலை பார்த்த நீ ஏன் அந்த வேலையை விட்டுட்டே?"
"வீட்டுல, குழந்தைங்க உள்பட எல்லாருக்குமே சர்க்கரை வியாதி வந்துடுச்சுங்க!"
– வி.ரேவதி, தஞ்சை
"திருடனை உன்னால பிடிக்க முடியலைன்னா விசிலையாவது ஊதி பொது மக்களை அலர்ட் பண்ணியிருக்கலாமேய்யா?"
"அந்தப் படுபாவிப் பய, என் விசிலையும் பிடுங்கிட்டுப் போயிட்டான் சார்! "
– வி.ரேவதி, தஞ்சை