உங்கள் குரல்

உங்கள் குரல்
Published on

"பள்ளி திறந்ததால் படு உற்சாகத்தைக் குழந்தைகள் பெற்றுள்ளனர்" என்று நினைக்கும்போது மகிழ்ச்சி தித்திப்பாய் இனிக்கிறது.

'பாரதி மணியின்' நல்ல பண்பை  கல்கி வாசகர்களுடன் பகிர்ந்து கொண்ட சுஜாதாதேசிகருக்கு வாழ்த்துகள்.
– து.சேரன்.  ஆலங்குளம்

"அணையின் வலிமை' என்பது வயதில் அல்ல; அதைப் பராமரிப்பதில்தான் உள்ளது. தமிழ் நாட்டில் பழைமையான பல அணைகள் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு  வலிமையாக உள்ளன"  என்று தராசார் பதில் தந்து, முல்லை பெரியாறு அணை குறித்து பீதியைக் கிளப்புபவர்களுக்குப் புரிதலை ஏற்படுத்தியுள்ளார். 'தாய் மொழியில் பேசுவதை மக்கள் பெருமையாகக் கருத வேண்டும் என்பதை அமித் ஷா தாய் மொழியில் கூறவில்லை' என்று தராசார் கூறியுள்ளது வழக்கமான வேற லெவலை பின்னுக்குத் தள்ளியது.

ரசின் நிதி ஆதரவு , தன்னார்வலர்களின் ஆர்வம், அதிகாரிகளின் செயல்திறனால் , ஊரடங்கால் கல்வி கற்க முடியாமல் போன மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள 'இல்லம் தேடி கல்வித் திட்டத்தை' இது நமது குழந்தைகளின் முன்னேற்றத்திற்கானது என்பதை உணர்ந்து மக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.  ஊரடங்கு, இணைய வழி மூலம் கல்வி கற்க முடியாது போன கிராமப்புற மாணவர்கள் உற்சாகமாக மீண்டும் பள்ளி செல்வதற்காகத் தூண்டுதலே இத்திட்டத்தின் நோக்கம் என்பதைத் தலையங்கத்தில் அழுத்தம் திருத்தமாக விளக்கியது மிகச்சிறப்பு.
– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

கிரிப்டோகரன்சிகள், பிட்காயின்ஸ் பற்றி கட்டுரையாளர் விளக்கியுள்ளது பிரமிக்க வைக்கிறது. பிட்காயின் ஒன்றின் விலை 63,000 டாலர் என்பது மலைக்க வைக்கிறது. ஆப்பில் நிறுவனம் இதில் முதலீடு செய்திருப்பதும், வாரன் படெட் விலகி இருப்பதும்,  நம் மனநிலை 'வெயிட் அண்ட் சி ' நிலையிலேயே….
– நெல்லை குரலோன், நெல்லை

வ்வொரு வாரமும் கல்கியின் தலையங்கங்கள் அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் வருகிறது.  வாசகர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் கல்கிக்கு வாழ்த்துகள்.
– நந்தினி, திருச்சி

'அது ஒரு கனாக் காலம்' இந்த தலைமுறையினர் அரியாத பல செய்திகளைச்  சுவையாகச் சொல்லுகிறது.
– கண்ணபிரான், நாகர்கோவில்

'அண்ணாத்தே வந்த பாதை' ரஜினி கட்டுரையில் வரும் தகவல்கள் பழைய செய்திகளாக இருந்தாலும்  இப்போது மீண்டும் படிக்கும்போது சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. படங்கள் அருமை.
– பாரதி கண்ணன், சென்னை

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com