
"மன்னர் ஏன் தன் மகனை அடிஅடியென்று அடிக்கிறார்?"
" 'போர்' அடிக்கிறது அப்பா… என்று 'போரை' ஞாபகப்படுத்தி மன்னரை பயப்பட வைத்துவிட்டானாம்."
"தலைவர் அரசியலுக்கு லாயக்கு இல்லாத ஆளுன்னு எப்படிச் சொல்றீங்க?"
"ஆறு மாசமா ஒரே கட்சியிலேயே இருக்காரே…"
"ஆறு மாசமா வீட்டில் வேலை செய்த பெண்ணை ஏன் வேலையிலிருந்து திடீர்னு நிறுத்திட்டீங்க?"
"அக்கம் பக்கம் நடக்கும் கதையை எல்லாம் ஆறு மாசமாகியும் ஒண்ணையும் சொல்லல…"
"ஏன் உங்க திரைப்படத்துக்கு 'பிரம்மாண்டம்'னு பேர் வெச்சிருக்கீங்க?"
"நானும் 'பிரம்மாண்டப் படம் எடுத்தேன்'னு பெருமையா சொல்லிக்கலாம்ல…"
"சின்ன வயசுல புத்தகமும் கையுமா அலைஞ்சிக்கிட்டு இருப்பாளே உங்க பொண்ணு… அவ இப்போ எப்படி இருக்கா?"
"இப்ப செல்போன்ல பேஸ்புக்கும் கையுமா இருக்கா…"
– பி.சி.ரகு, விழுப்புரம்
இன்ஸ்பெக்டர் : "நகைக்கடை சுவரில் துளையிட்டு கொள்ளையடித்தது நியாயமாய்யா?"
திருடன் : "சார், எந்த சாவியும் செட்டாகவில்லை… தொழிலைப் பாதியில் விடவும் முடியல… அதான்…"
– இ.ரகுமீனா பெரம்பூர், சென்னை