உலகின் நீண்ட  சாலை  எது?

உலகின் நீண்ட  சாலை  எது?
Published on

அன்னபூரணி

விமானம், ரயில் போன்ற போக்குவரத்து சாதனங்களைப் பயன்படுத்த முடியாமல்  நடந்தே  உலகின் எத்தனை நாடுகளுக்குப் போகமுடியும்? நல்ல சாலை வசதிகளுடன் உள்ள  சாலை வழியே   22,387 கி.மீ., போக முடியும் என்கிறார் அமெரிக்க ஆய்வாளர் டெனியல் கீரிக்.

தென் அமெரிக்காவின் கேப்டவுனில் ஆரம்பித்து  ரஷ்யாவிலுள்ள மகாடான் என்ற நகர் வரை செல்ல சாலை இருக்கிறது. 17 நாடுகளின் வழியே  6 நேர வித்தியாசங்களிருக்கும் பகுதிகளில் ஆண்டின் அத்தனை பருவ காலங்களையும்  அனுபவித்துக்கொண்டே போகலாம்.

187 நாட்கள் விடாமல் நடந்தால் இந்த 4492 மணிநேரத்தில் கடந்துவிடலாமாம். ஐயா! அது  நம்மால் அது முடியாது என்றால் தினசரி 8 மணி நேரம் நடந்து ஒய்வுக்கு பின் தொடந்தால்  561 நாட்கள் ஆகுமாம்.

சரி என்று கிளம்பிவிடாதீர்கள். இடையிலுள்ள அத்தனை நாடுகளுக்குள் நுழைய விசா  உங்கள் பாஸ்போர்ட்டில் இருக்க  வேண்டும். அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முதலில் நடக்க ஆரம்பியுங்கள்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com