ஒரு நல்ல பாடகியாக விரும்பினேன்.

ஒரு நல்ல பாடகியாக விரும்பினேன்.
Published on

– வினோத்

ந்த ஆண்டு சிறந்த நடிகைக்கான விருதுபெறும் அபர்ணா பாலமுரளியின் தந்தை கே.பி.பாலமுரளி மற்றும் தாய் சோபா பாலமுரளி  மலையாள திரையுலகில் மிகப் பாப்புலரான இசை அமைப்பாளார்கள். சோபா ஒரு வழக்கறிஞரும் கூட.  ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அபர்ணாவும்  ஒரு  பின்னணிப் பாடகர். கர்நாடக இசையை முறையாகக் கற்று தேர்ந்தவர்.

அம்மாவின் ஆசைப்படி பரத நாட்டியம்  பயின்ற அபர்ணா பாலகாட்டில் படித்ததனால் தமிழ் சரளமாகப் பேசுகிறார்.  "நல்ல பின்னணிப்  பாடகியாக  வேண்டும்" என்று முயற்சி செய்து கொண்டிருந்தபோது  எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்பால் மலையாளத்தில் 2013ம் ஆண்டு வெளியான "யாத்ரா துடருன்னு" என்னும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில்  திரையில் அறிமுகமானார்.  அதிகம் பேசப்பட்ட   அந்தப் படத்துக்குப்பின்  தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களில் நடித்து பிரபலமான இவர், 2016ல் "மஹேஷிண்டே பிரதிகாரம்" மற்றும் "சண்டே ஹாலிடே" என்னும் திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரத்தின் வாயிலாக மலையாள திரையுலகில் புகழ்பெற்றவர்.

2017ம் ஆண்டு தமிழில் '8 தோட்டாக்கள்' படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.  இத்திரைப்படம் விமர்சன ரீதியாக தமிழ் திரையுலகில் மாபெரும் வெற்றி பெற்ற படமாகும். தொடர்ந்து இவர் தமிழில் 2019ம் ஆண்டு "சர்வம் தாள மையம்" திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். அதைப்பார்த்த சூர்யா தனது  "சூரரைப் போற்று" படத்தில் நாயகியாக நடிக்க அழைத்தார்.  அதுதான் இப்போது விருது அறிவிக்கப்பட்டிருக்கும் படம்.

அட்டையில் :  அபர்ணா பாலமுரளி
Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com