30 வருடத்துக்குப் பிறகு, சொந்த ஊர் செல்கிறேன். நான் வசித்த வீடு. எங்கள் முதலாளி முதலியார் வீடு பார்க்க தயாரானேன்..எங்கள் வீடு நாங்கள் விற்றவர் கையிலிருந்து இன்னொரு கை மாறியிருந்தது. என்னை அறிமுகப்படுத்திகொண்ட பிறகு, உள்ளே வர சொன்னார்கள். வீட்டை சுற்றிப் பார்த்துவிட்டு கிணறு பக்கம் வந்தேன்..இந்த கிணற்றுக்கும் எனக்கும் உள்ள சம்பந்தம் நினைவுக்கு வந்தது..சுகமான நினைவுகளை சுமந்து கொண்டு மூன்றாம் தெருவில் உள்ள முதலியார் வீட்டுக்கு சென்றபோது, ஒரு பையன் ஒரு வாளிய, அடமானமாக வைத்து பாதாள கரண்டியைக் கேட்டு கொண்டிருந்தான்..வீட்டுக் கொல்லைப்புறத்தில் கிணற்றை பார்த்த தலைமுறையோடு இதன் பயன்பாடு இல்லாமல் போய்விட்டது..!.அன்று வீட்டில் முக்கியமாக இருந்தது..இப்போ எங்கோ மூலையில் கிடக்கலாம்..! என்று நினைத்தபோது….பாதாளக் கரண்டியைப் பார்த்ததும் என் நினைவுகள் பின் நோக்கிச் சென்றது….எல்லோருடைய வீட்டிலும், சமையல் கட்டு அதன் பின்புறம் தட்டு முட்டு சாமான்கள் போடப்பட்டு ஒரு ரூம் இருக்கும். இல்லாது போனால் ஒரு ஹால் மாதிரி நீண்டு இருக்கும்..அதை தாண்டி கொல்லை கதவை திறந்து போனால் பின்புறம் இருக்கும்..கொல்லையில் 40 அடி தள்ளி கிணறு இருக்கும்..போகும்பாதை பெரும்பாலும் ஒத்தையடி பாதையாகத்தான் இருக்கும். ஒற்றையடி பாதையின் இருபுறமும் அருகம்புல், துளசி செடிகள் மற்றும் நந்தியாவட்டை பூ செடி ரோஜா, முல்லை, சாமந்தி, கனகாம்பரம், செம்பருத்தி செடிகள் தாண்டிதான் போக வேண்டி இருக்கும்..வாசம் நுகர்வதற்காகவே அடிக்கடி கிணற்று பக்கம் போகும் சூழ்நிலை ஏற்படும்..மழைக்காலத்தில், கிணற்றுக்குப் போக கொஞ்சம் சர்க்கஸ் வேலை பண்ணவேண்டிருக்கும்..ஆனால், வெயில் காலத்தில இந்த பாதையில் நடந்தால் கால்கள் சுடாது..இப்படியொரு வீட்டுக்கொரு கிணறு என்பது, கிராமங்களில் மட்டுமல்ல, எங்கள் ஊர் மன்னார்குடியில் அவ்வாறான கிணறுகள் ஒவ்வொரு வீட்டிலும் உண்டு..ஆனால், நாங்கள் இருந்த வீட்டில் மட்டும் வாசல் முகப்பில் கிணறு..என்ன வித்தியாசமாக இருக்கே? என்று நினைத்தால் அதுதான் நிஜம் !!!..கீழ நாலாம் தெரு எங்கள் வீட்டுக்குள் நுழைந்தால், முதலில், வாசல்மெயின் கேட்டை திறந்து, உள்ளே பத்து அடி நீளம் அஞ்சு அடி அகலத்தில் சிமெண்ட் பிளாட்பாரம், இடது பக்கம் 150 சதுர அடியில் பூ செடிகள்..வீட்டு உள் கேட்டை திறந்தால் பெரிய ஹால். அதன் இடதுபுறம் தான் நான் சொல்லும் கிணறு அமைந்திருந்தது..60 அடி ஆழமுள்ள கிணற்றில், மற்ற காலங்களில், தண்ணீர் அதல பாதாளத்தில் இருக்கும். ஆனால், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மட்டும் கிணறு நிரம்பி வழியும். ஏதோ தொட்டியில் ,சொம்பை கொண்டு மொண்டு எடுத்தால், எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட உணர்வு எங்களுக்கு கிடைக்கும்..அந்த மாதங்களில் நான் என் தம்பி, தங்கை மொண்டு மொண்டு குளிப்பது குற்றால நீர்விழுச்சியில் குளித்த மாதிரி ஒரு புத்துணர்வு கொடுக்கும்..ஒரு சொம்பு அல்லது ஒரு வாளி தண்ணீர் உடம்பில் படும்போது மட்டும் குளிர் எடுக்கும். அதன் பின் ஒரே ஜாலி தான். குடத்தையோ அல்லது வாளியையோ ஜகடையில் போட்டு இழுக்க வேண்டாம்.."டேய் பசங்களா !! குளிர்காலத்தில் இப்படி காணாது கண்டது மாதிரி கொட்டம் அடிக்கிறீங்களே? உடம்புக்கு ஜுரம் வந்துச்சுன்னா யாரு கவனிக்கிறது?".இந்த திட்டு தினமும் எங்கள் அம்மாவிடம் இருந்து விழும்..ஆனா, நாங்க அதை கேர் பண்ணவே மாட்டோம்..மற்ற கிணறுகள் மாதிரி நெல்லிக் கிளையை வெட்டி போட வேண்டிய அவசியம் இருக்காது..அது என்னவோ தண்ணீர் கல்கண்டு மாதிரி இருக்கும் ..அக்டோபர்லருந்து டிசம்பர் வரைக்கும் மட்டுமே..தண்ணீர், பக்கத்துல உள்ள செங்குளம் தண்ணீர் மாதிரி சேப்பும் பழுப்பும் கலந்த தண்ணீர் மாதிரி இருக்கும். தண்ணீர் செம்மண் வாசனை கலந்து இருக்கும். கொஞ்சம் மண் கலந்து இருக்கும். ஆனாலும் சுவை இருக்கும். மற்ற காலங்களில் கிரிஸ்டல் கிளியராக இருக்கும்..நான் சொன்ன மாதங்களில், என் அக்கா பாத்திரங்களை அலம்பி, கிணற்று மேடையில் வைக்கும் போது, சிலநேரங்களில் கயிறு தட்டியோ, வாளி தட்டியோ கைதவறியோ, கிணத்துக்குள் விழுந்துவிடும்..அந்த மாதிரி காலங்கள் மிகவும் சோதனைதான். அப்போதான் ,நாங்க மனித கரண்டி பாலுவ கூப்பிடுவோம்..பாலு என்கிற பாலசுப்ரமணியன் கிணத்துக்குள் நான் சொன்ன மூணு மாதத்தில் ஏதாவது பொருள் கிணத்துக்குள் விழுந்து விட்டால் எடுத்து கொடுக்கும் மனிதர்..சுற்று வட்டார தெருக்களுக்கு மனித கரண்டி பாலுதான் ஆபத்பாந்தவர்..வயது 40லிருந்து 45க்குள் இருக்கும். கீழ நாலாம் தெரு கடைசியில், வலது பக்கம் கோபிநாதன் குளம் போற தெருவில் அவர் வீடு..வீட்டு வாசலில் சின்ன ஷெட் போட்டு , வெல்டிங் பட்டறை. அது பிரதான தொழில்..கூடுதல் வருமானத்துக்கு இப்படி கிணத்திலே விழும் பொருளை எடுத்து கொடுப்பது. அதில் வரும் பணம். குடும்ப சிலவுக்கு..சுற்று வட்டார தெருக்களில் உள்ள எல்ல தெருக்களில் உள்ள கிணறு அக்டோபர், நவம்பர் ,டிசம்பர் வரை தண்ணீர். நிறைய இருக்கும்..அந்த மாதங்களில். யார் வீட்டு கிணற்றுக்குள் பொருள் விழுந்து விட்டால் "கூப்பிடு பாலுவை" என்று அவரை கூப்பிடுவார்கள்..அவருக்கும் நல்ல வருமானம் கிடைக்கும். ஆனால், உயிரை பணயம் வைத்து கிணற்றுக்குள் மூழ்கி, முழ்கி, அவர் கிணற்றில் விழுந்த பொருள்கள் எடுத்து கொடுப்பது, என்பது மிகவும் சிரமம். சாமாணியப்பட்ட வேலை அல்ல..அவ்வாறு எடுக்கும்போது, எப்போதோ போட்ட சீப்பு சோப் டப்பா, சின்ன கிண்ணம் சேர்த்து எடுத்து வருவார்..நான் சொன்ன 3 மாதம் தவிர்த்து மற்ற மாதங்களில் எங்கள் வீட்டில் அக்காவோ இல்லை வேலைக்காரம்மாவோ அலம்பி வைத்த பாத்திரம், கவனகுறைவில் கிணற்றுக்குள் கீழ விழுந்து விட்டால், கூப்பிடு "ஆபத்பாந்தவன் வாசுவை 'என்று என்னை தான் கூப்பிட்டு எடுக்க சொல்வது வழக்கம்..அம்மா கண்டிப்பு. யார் கவன குறைவாக பாத்திரம் போட்டாலும், கிணத்துக்குள் விழுந்த பாத்திரத்தை மீண்டும் எடுத்து காமிச்சாத்தான், அடுத்த வேளை சாப்பாடு. அப்படி என்ன பொம்பளைக்கு கவன குறைவு என்று அக்காவை திட்டுவார்..அம்மாவின் கண்டிப்பில் , கீழ விழுந்த பொருள் கிடைக்காத நிலையில், ஒரு வேளை சாப்பாடு பல சமயங்களில் அக்காவுக்கு கட் ஆகி இருக்கிறது..அப்ப எனக்கு பாவமா இருக்கும்..அக்காவுக்கும், எனக்கும் சண்டை வந்து என்னை திட்டும் போதெல்லாம்"இவ செஞ்ச தவறுக்கு நான் ஏன் கிணத்திலே விழுந்த பொருளை எடுத்து கொடுக்கணும்?" அப்படின்னு நினைச்சு ரொம்ப பிகு பன்னுவேன்..என்னிடம் வந்து கெஞ்சுவாள். "ப்ளீஸ்ஸ்டா…. வாசு நான் தையல் மூலமா சம்பாதித்த காசுல, ஒனக்கு சினிமா பாக்க காசு தரேண்டா….. பீளிஸ் …"."அம்மா ராத்திரி சாப்பாடு போட மாட்டடா!".இப்படி இரண்டு மூணு தடவை என்னிடம் கெஞ்சுவா..எனக்கும் பாவமா இருக்கும். ஆனா சினிமாவுக்கு, பைசா வாங்கிய பிறகு தான், பின் பாதாள கரண்டி வாங்க மூணாம் தெரு முதலியார் வீட்டுக்கு ஒடுவேன்..இதற்கு முன்னாடி பாதாளக் கரண்டி வாங்க எங்க தெரு பாலக்காடு மணி அய்யர் வீட்டிக்குதான் போவேன். அவர் வீட்டில் மட்டும் தான் இருக்கும்..அவர் ஹோட்டல் இரண்டாம் தெரு முனையில் இருக்கு..அவர் வீட்டில் இருந்தால் உள்ளே நுழைய முடியாது. ஆஜானு பாவ உடம்பு. நாலு அண்டாவை ஒரே மூச்சில் தூக்கும் லாவகம். எப்போதும் சிடு சிடுப்பு..மாமி சாப்தீகம் . மாமி மட்டும் இருந்தா நீ போய் ஏதாவது பாத்திரம் கொண்டு வைச்சுட்டு, கரண்டியை எடுத்துண்டு போ என்பார்..அந்த தெருவில் அவர் வீட்டில் மட்டும் பாதாள கரண்டி இருப்பதால், எப்போதும் ஒருவர் மாற்றி ஒருவர் வாங்கிகொண்டே இருப்பார்கள்..'"இத பாருடா அம்பி !இன்னிக்கு, சாயந்திரத்துக்குள்ள கரண்டிவந்துடணும்!!!.டிலே பண்ணினே அடுத்த தடவை கொடுக்க மாட்டேன்னு "நச்சுன்னு சொல்லிட்டா.".ஒரு முறை இரண்டு நாள் கழிச்சு கொண்டு போய் கொடுத்த போது "இனி நீ பாதாள கரண்டி கேட்டுண்டு வராதே?"."ஒங்க அம்மாகிட்ட நான் சொன்னேன்னு சொல்லு இனி ஒங்களுக்கு பாதாளக்கரண்டி கிடையாது" கண்டிப்புடன் சொன்னதால்,.இனி மாமி சங்காத்தம் வேணாம்ன்னு முடிவு பண்ணி, அப்பா வேலை பார்க்கும் முதலியார் வீட்டில் பாதாள கரண்டி வாங்கி பொருளை எடுத்து கொடுக்கும் பழக்கம் தொடர்ந்தது..அண்ணியும் ரொம்பவும் கறார்தான். "பாத்திரம் கொண்டு வந்துருக்கியா? அப்படி ரேழி ஓரம் வைச்சுட்டு கரண்டியை எடுத்துண்டுபோ. அப்பதான் பாத்திரம் உடனே கிடைக்கும்"..அது என்ன பழக்கமோ மணி அய்யர் மாமியும் சரி, அண்ணியும் சரி இதே டயலாக்கை ஒவ்வொரு தடவையும் சொல்லிட்டு கொடுப்பாங்கா..பாதாளக் கரண்டியை கிணத்துக்குள் இறக்கி சுருட்டி சுருட்டி வட்ட வட்டமாக ஆட்டி கொண்டே வந்தால் நம் அதிர்ஷ்டம் 5 நிமிடத்தில் கூட கிடைக்கும் இல்லாட்டி போனா 50 நிமிசமும் ஆகலாம்..அப்போதெல்லாம் எமகாதகி அக்காவை திட்டிகொண்டே இருப்பேன். கூடுதல் நேரம் ஆச்சுன்னா டபுள் பேட்டா மாதிரி இன்னொரு சினிமாவுக்கும் காசு வாங்கிடுவேன்..இப்படி பலமுறை நடந்துள்ளதால் ஒரே ஸ்ட்ரோக்கில் பொருள் பொருள் கிடைக்கணும்னு ஒத்தை தெரு ஆனந்த் விநாயகரை வேண்டிகொள்வாள். கூட 10 தோப்புக்கரணம் அல்லது உண்டியலில் காசு போடுறேன் என்று வேண்டுதல் ஒவ்வொரு முறையும் மாறும்..நேர்த்தியாக நான் பாதாளகரண்டி கொண்டு எடுக்கும் திறமையை பார்த்த பக்கத்துவீடு,எதிர் வீடு என்று பிறகு கூப்பிட ஆரம்பித்தார்கள். அதில் எனக்கு ஒரு திருப்தி. கூடவே டி.வி.யில் கிரிக்கெட் மேட்ச் பார்க்கணும்ன்னு சொன்னா உடனடி பெர்மிஷன்..நவம்பர் மாதம் ஒரு நாள் நான், இன்னொரு அக்கா பையன் இரண்டு வயது இருக்கும், கிணத்துக்குள் நிறைய தண்ணீர் இருக்கும்போது மொண்டு மொண்டு விளையாட்டு காமிக்கும்போது, வெயிட் இல்லாத பிளாஸ்டிக் சோப்பு பெட்டியை போட்டு போட்டு விளையாட்டு காட்டிக் கொண்டுருந்தேன். எதிர்பாராமல் , குழந்தையும் தன் கையிலிருந்த தங்க வளையல் கழட்டி, கிணத்துக்குள் போட்டுவிட்டது..அவ்வளவுதான், வளையல் ஒவ்வொன்றும் ஒரு பவுன் கிணத்தின் அடியில் போய்விட்டது..விஷயம் கேள்விப்பட்டதும் "குய்யோ முறயோ"ன்னு சத்தம்.."என் மாமியாருக்கு என்ன பதில் சொல்லுவேன் ? இரண்டு வளையல் குழந்தை கிணத்துக்குள்ள போடற வரைக்கும் என்ன பண்ணிக்கிட்டு இருந்தே?"."அய்யோ அக்கா அம்மா, நான் சொம்பு மொண்டு தண்ணீர் எடுத்த நேரத்தில் குழ்ந்தை போட்டுட்டான்.."சாரிம்மா…"."பாலுதான் எக்ஸ்பர்ட்ம்மா.".எப்படியும் பாலுவை கையோடு அழச்சிட்டு வரேன்.அக்கா கவலை படாதே?."அம்மா அக்காவுக்கு ஆறுதல் சொல்லும்மா.".சைக்கிளில் பறந்தேன்..குளிக்க போயிருந்த பாலுவை கையோடு கூட்டிகிட்டு வந்தேன்.."ஏம்மா பதறீங்க? பாப்பா கவலை படாதே?".கைலியை அவிழ்த்தான் ஜட்டியோடு கிணத்துக்குள் குதித்தான். இரண்டு மூணு மொங்கு மூழ்கி , கடலில் முத்து எடுப்பது போல கையில் வளையல்கள் கிடைத்தவுடன் உற்சாகமாகி "ஆழ கடலில் தேடிய முத்து" என ஜானகி குரலில் வேறு பாட்டு பாடி இரண்டு தங்கவளயல் களுடன் மேல வந்தபோதுதான் அக்காவுக்கும் அம்மாவுக்கும் நிம்மதி ஆச்சு..அம்மா உள்ளே போய் ரூபாய் 500 கொண்டு வந்து கொடுத்தபோது, "என்னம்மா இது! யார்கிட்ட காசு வாங்கணும் எனக்கு தெரியும். மக்கு சாம்பிராணியா இருந்த என் பையன் இன்னிக்கு தொடர்ச்சியா 6,7,8 ம் வகுப்பில் ரேங்க் வாங்கிறான்னு சொன்னா அதுக்கு காரணம் நம்ம வாசு தம்பி சொல்லி கொடுக்கிற டூயூஷன் மூலம் தான்."."ஏன் தம்பி ட்யூசனுக்கு பீஸ் எவ்வளவு தம்பி ?என்று கேட்டதுக்கு, "படிப்பு சொல்லி கொடுக்குறது ஒரு புண்ணிய செயல். அதுக்கெல்லாம் காசு கொடுக்கிறேன்னு என்கிட்ட சொல்லாதீங்கன்னு" வாசு தம்பி சொல்லிச்சு.."வாசுக்கு அந்த மாதிரி உயர்ந்த எண்ணம் இருக்கும்போது, நான் எப்படி கூலி வாங்குவேன்?"."குழந்தையை பாருங்க அந்த சிரிப்புக்கு நான் அடிமை.".'டேய் செல்லம் இந்தா 100 ரூபாய் பணத்தை குழந்தை கையில் வச்ச கொடுத்துட்டு வரேன் வாசு !வரேம்மா" என்று கிளம்பி போனார்..கால சக்கர சூழலில் நான் காலேஜ் படிக்க திருச்சி வந்து விட்டேன். தீபாவளி லீவுக்கு வந்த நேரம்..அதே கிணறு இந்த தடவை நான் குளித்து கொண்டிருந்தபோது கையில் போட்டிருந்த மோதிரம், சோப்பு போடும்போது நழுவி கிணற்றுக்குள் விழுந்துவிட்டது. கண்ணில் சோப்பு பட்டு எரிச்சல் . கண் திறக்க முடியவில்ல, அய்யோ அம்மாவுக்கு பதில் சொல்லணும்?.எப்படியோ காதும் காது வைச்ச மாதிரி, பாலு வீட்டுக்கு போய் கூட்டிகிட்டு வந்து எடுத்துடலாம் என்று சைக்கிளில் கிளம்பினேன்..பாலுப்பையன் மட்டும் ஷெட்டில் இருக்கவே என்னை பார்த்ததும் அழுதுகொண்டே வீட்டுக்குள் போனான்..நானும் அவனை தொடர்ந்து போக பாலு படத்தின் முன் அழுது கொண்டு இருந்தான்..பாலு மனைவிக்கு என்னை நல்லா தெரியும் ..எல்லோருக்கும் கிணத்துக்குள் முழ்கி மூழ்கி பொருளை எடுத்து கொடுத்த இவருக்கு தண்ணில கண்டம்னு தெரியாம போச்சு வாசு..என்னம்மா என்ன நடந்துச்சு?.விசும்புல் அழுகையுடன்,.பாமணி ஆத்திலே உபரி தண்ணீர் அதோடு மழை தண்ணி சேர்ந்து கரை புரண்டு ஓடிருக்கு..கைலாச நாதர் படித்துறையில் 3 வயது குழந்தையை, படிக்கட்டில் உக்கார வைத்து குளித்து கொண்டுருந்த பெண்மணி கரை ஏறுவதற்குள் இது கிடு கிடுவென கீழ இறங்கிடுச்சு சுழலில் மாட்டி இழுத்து போக இவர் குளிக்க போனவர் உடனே குதித்து குழந்தையை காப்பத்தி கரையில் சேர்த்த அடுத்த நொடி குழந்தயை பெற்ற அம்மா, மறுபடியும் அழ, என்னவென்று பார்த்தால் காலில் போட்டுருந்த தங்க கொலுசு கீழ விழுந்துருச்சுன்னு அழுகை..துளி கூட தாமதிக்கமால் மீண்டும் ஆற்றில் இறங்கி, கொலுசு தேட ஏதோ ஒரு இரண்டு ஊத்து கிணற்றில் மாட்டி சுழல் இழுத்து போய், புது தண்ணி காவு வாங்கும் சொல்ற மாதிரி அவரை பலி வாங்கிடுத்து."."பயர் சர்வீஸ்காரங்க வந்தும் தேடி தேடி பிரயோசனமில்லை.பிணமா தான் வந்தாரு..சேரங்குளம் ஷட்டர்கிட்ட பிணமா ஒதுக்கி இருந்துச்சு.".நூறுக்கணக்கான கிணறுகள் இறங்கி நிறைய பொருள்கள் எடுத்து கொடுத்த பாலுவுக்கு, கிணற்று மூலம் சாவு என்று நினைக்கும் போது கண்ணில் நீர் துளிகள். ஒரு நல்ல மனிதரை இழந்து விட்டோமே என்று.