சுப்ர.பாலன்.மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட்டுக்கு உலகம் முழுவதும் 190 நாடுகளிலிருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கிறார்கள். ஒலிம்பியாட் முதலில் ரஷ்யாவில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் நடந்துகொண்டிருக்கும் ரஷ்ய-உக்ரைன் போர் காரணமாக, சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) புதிய ஏலதாரர்களைத் தேடத் தொடங்கியது. மற்ற நாடுகளைவிட இந்தியா முதலிடம் பிடித்தது மற்றும் முதல் முறையாக உயர்மட்ட நிகழ்வை நடத்தும் வாய்ப்பை வென்றது. உலகின் மிகப்பெரிய செஸ் போட்டியை நடத்தும் உரிமையைத் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கியது. அதன்படி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த நிகழ்விற்கு என 92 கோடி ரூபாய் ஒதுக்கி ஒவ்வொரு கட்டத்திலும் தானே முன்னின்று ஏற்பாடுகளைக் கவனித்து வந்தார்..கடந்த ஜூன் 19 அன்று, செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முதல் ஜோதி ஓட்டத்தைப் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஜோதி மாமல்லபுரத்திற்கு வருவதற்கு முன் நாட்டிலுள்ள 75 நகரங்களுக்குச் சென்று வந்திருக்கிறது. பிரமாண்டமான கவர்ச்சி மிகு விழாவில் பிரதமரால் போட்டி ஆட்டங்கள் தொடங்கிவைக்கப்பட்டிருக்கிறது..இந்த மெகா நிகழ்வுக்கு அதிகபட்ச விளம்பரத்தை தமிழ அரசு செய்திருக்கிறது. தமிழக நகரங்களில் . பாரம்பரிய வேஷ்டி சட்டை அணிந்த குதிரையின் அதிகாரப்பூர்வ சின்னமான 'தம்பி' நிற்கிறார். நகரப் பேருந்துகள், புறநகர் தொடர் வண்டிகளில் அனைத்திலும் வேட்டிக்கட்டிய தம்பி வேகமாகப் பறக்கிறார்..பார்க்குமிடமெல்லாம் முதல்வர் ஸ்டாலின், 'நம்ம சதுரங்கம், நம் பெருமை' என்ற விளம்பர வாசகங்களுடன் புன்னகைத்துக்கொண்டிருக்கிறார்..இந்த விளம்பர வாசகங்களில் " நமது சதுரங்கம் " என்று சொல்வதில் ஒரு ஆழமான பொருள் இருக்கிறது. இந்தச் சதுரங்க ஆட்டம் இந்தியாவில் தோன்றிய ஒரு விளையாட்டு என்கிறது வரலாறு..கூட்டல் குறி வடிவ தாயக்கட்டம், முக்கோணமும் வளைகோடுகளும் இணைந்த ஆடுபுலி ஆட்டம் எல்லாம் இன்றைய சதுரங்க ஆட்டத்தின் மூதாதையர்களாக இருக்கலாம். இதுதான் கி.பி.ஆறாம் நூற்றாண்டு வாக்கில் இந்தியாவிலிருந்து மேற்கு நாடுகளுக்குப் 'படையெடுத்து' ஸ்பெயின் நாட்டில் இன்றைய 'செஸ்' ஆட்டமாக உருவெடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ரோட்ரிகோ லோபெஸ் டி ஸெகுரா (1530 – 1580) என்னும் கத்தோலிக்கப் பாதிரியார் இந்த ஆட்டத்தில் புகழ்பெற்றவராக இருந்திருக்கிறார். சுருக்கமாக இவர் பெயர் ரூயி லோபெஸ்! அந்தப் பதினாறாம் நூற்றாண்டு வாக்கில் தான் இப்போதைய 64 கட்ட 'செஸ்' பலகை வடிவம் பெற்றிருக்க வேண்டும் என்பது ரூயி லோபெஸ் ஸ்பெயின் நாட்டு அரண்மனையில் இரண்டாம் பிலிப் மன்னன் முன்னிலையில் சதுரங்கம் ஆடிய காட்சியை சித்திரிக்கும் ஓவியத்தில் அந்தப் பலகையிருக்கிறது..சரித்திரத்தைச் சாட்சியாக கூப்பிடும் முன்னரே நமது இலக்கியங்களில் இந்த செஸ் விளையாட்டை நமது தெய்வங்கள் ஆடியிருப்பதை வார்த்தைகளால் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. முகலாய மன்னன் ஷாஜஹானின் அரசவைக் கவிஞராக இருந்த ஆந்திர பூமியின் ஜகந்நாத பண்டிதர் என்பவர் சமஸ்கிருத மொழியில் எழுதிய ஒரு கவிதையில் இந்த ஆட்டம் ஆடுகிற காட்சியை வர்ணித்திருக்கிறார் அதை அடிப்படையாகக் கொண்டு ஓவியர் மணியம் ஒரு சித்திரத்தை உருவாக்கியிருக்கிறார் அது கல்கியின் 1965 ஆம் ஆண்டு தீபாவளி மலரின் அட்டையை அலங்கரித்திருக்கிறது..அந்த ஓவியத்தைக் கவனித்துப்பாருங்கள். மணியம் காட்சிப் படுத்தியிருக்கும் ஆட்டக்கட்டங்கள் இன்றைய 64 கட்ட சதுரங்க அமைப்பிலேயே இருக்கின்றன. ஆடுகாய்களாக நந்தியைச் சொக்கனும், சிம்மத்தைச் சொக்கம்மையும் வைத்து ஆடியிருக்கிறார்கள். நந்திக்காய் களை எல்லாம் இழந்து தோல்வி முகத்தில் உள்ள சிவன் 'அடுத்து எதை வைத்து இழக்கலாம்' என்கிற சிந்தனையில் தலை மீதிருக்கிற கங்கையைச் சுட்டிக் காட்டுகிறது விரல். "எதை வேண்டுமானாலும் வைத்து ஆடுங்கள்" என்பதுபோல் தேவியின் கைவிரல்கள் அபிநயிக்கின்றன. இத்தனை நுட்பமும் அந்த சமஸ்கிருத ஸ்லோகத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா, அல்லது ஓவியரின் கற்பனையா என்பது தெரியவில்லை. அந்த வடமொழி ஸ்லோகம் அறிந்தவர்கள் கல்கிக்கு எழுதலாம்.பரமசிவனும் பார்வதியும் சதுரங்கம் ஆடும் இந்த அழகான காட்சி, வண்ணப்படமாக! வரைந்த அமரர் கல்கி அவர்களின் 'பொன்னியின் செல்வன்' கதாபாத்திரங்களுக்கு உயிரோட்ட வடிவம் தந்த ஓவியர் மணியம். மணியம் வரைந்த இந்தச் சித்திரத்துக்கு அப்போது சிறுவனாக இருந்த மணியம் செல்வனும், அவருடைய சித்தியும் மாடல்களாக அமர்ந்து அபிநயித்த சுவாரஸ்யமான அனுபவத்தை அமுதசுரபி இதழில் தனது தந்தையாரைப் பற்றிய தொடர் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்..இன்று "நமது சதுரங்கம்" என்ற பெருமையுடன் செஸ் ஒலிம்பியாட்டை நடத்தும் இந்த நேரத்தில் "இந்த விளையாட்டு நம்முடையதுதான்" என்று அரை நூற்றாண்டுக்கு முன்னரே நமது கல்கி இதழில் அழகான படம் வெளியிட்டு பெருமைப்படுத்தியிருக்கிறது.