காவல்துறை நிஜமாகவே நம் நண்பர்கள்தான்.

காவல்துறை நிஜமாகவே நம் நண்பர்கள்தான்.
Published on

முகநூல் பக்கம்

கிராமத்தில் என் நிலங்களை ஆக்கிரமித்து ஒரு மூன்றாம் தர அரசியல்வாதி அட்டகாசம் செய்தபோது, நான் வாட்ஸ் அப்பில் டிஜிபி திரு.திருபாதி அவர்களுக்கு புகார் மனு அனுப்பி வைத்தேன்.

உடனே புகார் மனுவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அடுத்த பத்து நாட்களில் அவரின் அப்பாய்ன்ட்மென்ட் வாங்கி சென்னை வந்து நேரில் சந்தித்தேன். அவர் அறையில் உட்கார வைக்கப்பட்ட பின்னரே திருபாதி அவர்கள் வந்தார். நான் என் பெயரைச் சொல்லி அறிமுகப் படுத்திக் கொண்ட மறுநிமிடமே "எஸ்.எஸ். ஐ ரிமம்பர் தி கம்ப்ளெய்ண்ட் யூ ஹேவ் செண்ட் இன் வாட்ஸ் அப் " என்றார்.

உடனே எனக்கு இவர்களெல்லாம் இந்த உயர் பதவி நாற்காலிகளில் அமர்ந்திருப்பதின் காரணம் புரிந்தது.

"இன்னும் இரண்டு நாட்களில் நான் ஓய்வு பெறுகிறேன். அதனால் உங்கள் வழக்கை திரு.தாமரைக் கண்ணன் அவர்களுக்கு விவரித்து விட்டேன். நீங்கள் அவரைப் போய்ப் பாருங்கள். அவர் அடுத்த அறையில் இருக்கிறார். ஹி வில் டூ தி நீட்ஃபுல்…" என்றார். நான் தாமரைக் கண்ணன் அவர்களைச் சென்று பார்த்தேன்.

உடனே அவர் தொலைபேசியில் திருவண்ணாமலை
எஸ்.பி. திரு.பவன் குமார் ரெட்டி அவர்களை அழைத்து என் கண் முன்னாலேயே எனக்கான சகலவித உதவிகளையும் செய்யச் சொன்னார்.

பின் என்னிடம், "பவன் குமார் ரெட்டி ஈஸ் ஏன் யங் இண்டலிஜண்ட் போலீஸ் ஆபீசர். நீங்கள் அவரை உறுதியாக நம்பலாம். ஹானஸ்ட் ஜெண்டில்மேன்" என்றார்.

ஓர் உயர் காவல்துறை அதிகாரியிடம் இந்தப் பெயர் வாங்கவேண்டும் என்றால் பவன் குமார் ரெட்டி என்பவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்கிற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது.

ஊர் திரும்பி திருவண்ணாமலை சென்று திரு.பவன்குமார் ரெட்டி அவர்களைச் சந்தித்தேன்.

அவரின் உயரம், கம்பீரமான உருவம் பார்வையின் தீட்சண்யம்..

திரு.தாமரைக் கண்ணன் அவர்கள் சொன்னது சிறிது கூட மிகையில்லை என்பது புரிந்தது.

" மேடம். யு டிரஸ்ட் மீ… பிலீவ் மீ..ஐ வில் சர்ட்டென்லி கிளியர் யுவர் பிராப்ளம்" என்ற அந்தத் தன்னம்பிக்கையும் தைரியமும் மிகுந்த வார்த்தைகள். அதில் இருந்த தெளிவு…பார்வையில் கண்ட சத்தியத்தின் ஒளி..

நம்பிக்கையோடு கிராமத்திற்கும் திரும்பினேன்.

அவர் கொடுத்த வாக்கின்படி இம்மியளவும் பிசகாமல் அந்த நிலத்தை மீட்டு, விற்று பத்திரப்பதிவு செய்யும் வரை உதவியாகவும் உறுதுணையாகவும் இருந்தார்.

அந்த அற்புதமான இளைஞர் இன்று வந்தவாசி வந்திருப்பதை அறிந்து போய் சந்தித்தேன்.

பெருமிதமான சந்திப்பு.

இவரைப் போன்ற நேர்மையான, திறமை மிகுந்த இளைஞர்களைக் கொண்ட காவல்துறை நிஜமாகவே நம் நண்பர்கள்தான்.

தலை நிமிர்ந்து குரலெழுப்பி என்னால் இதைச் சொல்ல முடியும்.

இன்னும் நிறைய பவன்குமார்கள் உருவாக வேண்டும். உருவாவார்கள்.

எழுத்தாளர் இந்துமதியின் முகநூல் பக்கத்திலிருந்து...

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com