கொஞ்சம் சிரிங்க பாஸ்

கொஞ்சம் சிரிங்க பாஸ்
Published on

வாசகர் ஜோக்ஸ்                                                   ஓவியம் : ரஜினி

"அந்த வானிலை ஆராய்ச்சி நிபுணருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப் போறாங்களாம்."
"எதுக்காக?"
"மழை வருமா? புயல் வருமான்னு எப்ப கேட்டாலும் 24 மணி நேரம் போனாத்தான் சொல்ல முடியும்னு சொல்றாராம்."
                                                                                                  – வி. ரேவதி, தஞ்சை

"பாயசம் ஒரு தரம்… பாயசம் இரண்டு தரம்… பாயசம் மூணு தரம்…"
"என்னடி கிச்சன்ல சத்தம்?"
"சமையல் புத்தகத்துல போட்டிருந்ததுங்க…பாயசம் கொதித்து முடித்தவுடன் 'ஏலம்' போட்டு இறக்கவும்னு."

– எம் அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி

"என்ன பிராப்ளம் சார் ? கேஸ் டிரபிளா….?"
"சொல்லாமலே எப்படி டாக்டர் கண்டுபிடிச்சீங்க?"
"உங்க   வயிறுதான்  சிலிண்டர் மாதிரி  இருக்கே."
                      – வி. ரேவதி, தஞ்சை

"உன் பொண்டாட்டி எதுக்கு சுத்தியலை உன் தலையில் போட்டாளாம்?"
"சுத்தி போட்டா திருஷ்டி போகும்னு யாரோ சொன்னாங்களாம்…"
                        – எம் அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி

"படத்தின் கிளைமேக்ஸ் நம்பும்படி இல்லையே…"
"ஏன் என்னாச்சு?"
"கிளைமேக்ஸில் பேய் விஷம் குடிச்சு தற்கொலை பண்ணிக்குதுன்னு காட்டியிருக்காங்களே."
                             – ஆர். யோகமித்ரா,
செம்பாக்கம், சென்னை

"தலைவரே, நீங்க இந்தியில் பேசக் கத்துக்கணும்."
"ஏன்யா?''
"நம்ம மீட்டிங்குக்கு ஒடிசா, பீகார், உ.பி. ஆட்கள்தான் வர்றாங்க தலைவரே."
                   – அப்ரோஸ் பானு, சென்னை

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com