கொஞ்சம் சிரிங்க பாஸ் !

கொஞ்சம் சிரிங்க பாஸ் !
Published on

வாசகர் ஜோக்ஸ்

ஓவியம் : ரஜினி

அடுத்த தீபாவளியை மறந்துடுவீங்க மாமா!

"தலை தீபாவளி முடிஞ்சு அடுத்த தீபாவளிக்கும் வாங்க மருமகனே."

"அப்போ நீங்க கூப்பிட மறந்துடுவீங்க மாமா… அதனால இங்கேயே இருந்துடுறேன் மாமா."

– ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்

"அவரு கிளி மாதிரி பொண்ணை வளர்த்து பூனைகிட்ட கொடுத்துட்டேன்னு சொல்றாரே… என்னவாம்."

"கறுப்புப் பூனை படையில் பணியாற்றும் அதிகாரிக்குக் கட்டிக்கொடுத்ததை அப்படிச் சொல்றார்."

– எஸ். மோகன், கோவில்பட்டி

''ஐந்து ஆண்டுகால ஆட்சியில் தலைவர் எதையெல்லாம் காத்தார் தெரியுமா?"

"மௌனம் காத்தார்."

– ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்

ஆசிரியர்: "தேர்தல் நடப்பது எந்தக் காலம்?"

மாணவன்: "ஓட்டுக்குப் பணம் கிடைக்கும் காலம் சார்."

– வெ.விஜயகுமாரி, திண்டுக்கல்

"கையை நீட்டச் சொன்னால் பல்லை காட்டுறீங்களே?"

"பல்ஸ் பார்க்கணும்னு நீங்கதானே சொன்னீங்க டாக்டர்?"

– சி.ஸ்ரீரங்கம், திருவெறும்பூர்

"தலைவர் இன்னிக்கு ''மௌன விரதம்' இருக்கப் போறாராமே ஏன்?"

"அமலாக்கத் துறையும் வருமானவரித் துறையும் தலைவரை விசாரிக்க வர்றாங்களாம்."

– ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com