

சைக்காலஜியில் மிகவும் பிரபலமான 'Trolly problem' ஐ Philosopher Philippa Foot என்பவர் உருவாக்கினார். இந்த டிராலி பிராப்ளம் என்பது என்ன?
இப்போது ஒரு டிரெயின் அதனுடைய டிராக்கில் போய்க் கொண்டிருக்கிறது. அங்கே ஒரு டிராக்கில் ஐந்து பேர் உட்கார்ந்து இருக்கிறார்கள். அவர்கள் ரயில் வருவதை பார்க்கவில்லை. அதனால் தண்டவாளத்தை விட்டு நகராமல் இருக்கிறார்கள். உங்களால் அந்த ரயிலை நிறுத்த முடியாது. ஆனால் உங்களால் அந்த ரயிலை வேறு ஒரு டிராக்கிற்கு மாற்றிவிட முடியும். அப்படி மாற்றக்கூடிய அந்த டிராக்கில், ஒரே ஒரு மனிதன் மட்டும் தான் இருக்கிறார்.
இந்த இடத்தில் நீங்கள் என்ன முடிவு எடுப்பீர்கள்?
நீங்கள் எதுவுமே செய்யாமல் அதே டிராக்கில் சென்றால், ஐந்து பேர் இறந்து போவார்கள். இதுவே டிராக்கை மாற்றிவிட்டால் ஒருவர் மட்டும் தான் இறந்துப்போவார்.
பலபேர் அந்த டிராக்கை மாற்றிவிட்டு ஒருவரை கொன்றாலும் ஐந்து பேரை காப்பாற்றுவதே சரியாக இருக்கும் என்று சொல்வார்கள்.
ஆனால், சற்று யோசித்துப் பாருங்கள். நீங்கள் டிரெயின் டிராக்கை மாற்றாமல் விடும் போது ஐந்து பேரை சாக விடுகிறீர்கள். இதுவே டிரெயின் டிராக்கை மாற்றிவிடும் போது ஒருவரை கொலை செய்கிறீர்கள். Negligence and Murder - இரண்டிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஒருவர் கஷ்டத்தில் இருக்கும் போது அவர்களை காப்பாற்ற முயலாமல் இருப்பது தவறு தான். ஆனால், அவர்களை காப்பாற்றுவதற்காக இன்னொருவரை பலி கொடுப்பது சரி கிடையாது.
அந்த ஐந்து பேரும் ரயில் வந்து செல்லும் டிரெயின் டிராக்கில் நிற்பதே தவறான விஷயமாகும். ஆனால் அந்த ஒருவர் ரயில் வராத டிராக்கிலே நிற்கிறார்.
இப்போது அந்த இடத்தில் நீங்களே இருந்தால் என்ன முடிவு எடுப்பீர்கள்? நீங்கள் எந்த பிரச்னையும் பண்ணாமல் உங்கள் வேலையை பார்த்து கொண்டு ஒரு வேலை செய்யாத டிராக்கில் உட்கார்ந்திருக்கிறீர்கள்.
அடுத்த டிராக்கில் இருப்பவர்கள் Count wise உங்களை விட அதிகமாக இருக்கிறார்கள். நீங்கள் தனியாக இருக்கிறீர்கள் என்ற ஒரே காரணத்திற்காக உங்களை கொலை செய்யலாம் என்று சொன்னால் அது எப்படி சரியாகும்?
ஒருவரை கொலை செய்வதாக இருந்தாலும், ஐந்து பேரை காப்பாற்றுகிறார்கள் என்றால், அது தான் சரி என்று Utilitarianism சொல்கிறது. அதே நேரத்தில் அந்த ஐந்து பேர் அந்த இடத்தில் இருந்தது தவறு. அதனால் அவர்களை காப்பாற்றுவதற்காக எந்த தவறுமே செய்யாத ஒருவரை கொல்வது தவறான செயல் என்று Deontology சொல்கிறது. இந்த இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்? இது பற்றி உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.